Search This Blog

Showing posts with label கீரை. Show all posts
Showing posts with label கீரை. Show all posts

Saturday, October 31, 2020

Liquid_Or_Powder_Mix_for_Rice

 சாதத்துடன் கலந்து சாப்பிட :

சாதத்துடன் கலந்து சாப்பிடக் கூடிய  கலவைகள் மற்றும் பொடிகள் ஆகியவற்றின் செய்முறைகளின் இணைப்புகளை இங்கு தொகுத்துள்ளேன்.  

மதிய உணவு உட்கொள்ளும் போது முதலில் பருப்பு சாதத்துடன் தொடங்குவதுதான் முறை. சாம்பார் அல்லது குழம்பு சாதம் சாப்பிடுவதற்கு முன்னர் பருப்பு சாதம் சுவைக்கப்படுவது வழக்கம். சூடான சாதத்தின் மேல்  வேகவைத்து உப்பு சேர்த்த துவரம் பருப்பு அல்லது பயத்தம் பருப்பை போட்டு, ஒரு தேக்கரண்டி நெய் விட்டு பிசைந்து, சாம்பார் அல்லது தயிர் பச்சடியுடன் சாப்பிட வேண்டும்.

அவ்வாறு பருப்பு இல்லையெனில் முதலில் சாதத்துடன் கீரை மசியல் அல்லது கழனி சாறு [ பால் சாறு ] அல்லது துவையல் அல்லது பொடி போட்டு சாப்பிட்ட பின்னரே சாம்பார்/குழம்பு மற்றும் ரசம் என்று சுவைப்பது வழக்கம்.

கீரை மசியல் என்ற கலவை முளைக்கீரை, அரைக்கீரை, பாலக்கீரை, சிகப்பு முளைக்கீரை ஆகிய ஏதேனும் ஒரு கீரையை வேகவைத்து பருப்பு சேர்த்து அல்லது சேர்க்காமலும் கடைந்து செய்யப்படுகிறது. பச்சை நிறம் மாறாமல் வேகவைத்த கீரையை பூண்டு  மற்றும் உப்பு சேர்த்து மத்து கொண்டு கடைந்தோ அல்லது மிக்ஸியில் அரைத்தோ செய்யலாம். இந்த கீரை மசியலை சூடான சாதத்தில் இட்டு ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாம்பார் அல்லது வத்தக்குழம்பு தொட்டுக்கொண்டு சுவைத்தால் அருமையாக இருக்கும்.

கழனி சாறு என்றும் பால் சாறு என்றும் அழைக்கப்படும் கலவை மணத்தக்காளி கீரை அல்லது முருங்கைக்கீரை அல்லது அகத்திக்கீரை போன்ற கீரைகள் கொண்டு செய்யப்படுகிறது. தற்போது குறிப்புட்டுள்ள ஏதேனும் ஒரு கீரையை வேகவைத்து எடுத்தபின்னர் அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து விட வேண்டும். பின்னர் தேங்காய் பால் எடுத்து கீரையுடன் சேர்த்து சீரகம் தாளித்து வெங்காயத்தை வதக்கி போட்டு செய்யப்படுகிறது. சூடான சாதத்தில் பால் சாறு கீரையுடன் சேர்த்து விட்டு நன்கு அழுத்திப் பிசைந்து சாம்பார் அல்லது காரக்கறியுடன் சுவைக்கலாம்.

விதவிதமான துவையல் வகைகள் பருப்பு, கீரை, மூலிகைகள் உபயோகித்து அரைத்து செய்யப்படுகிறது. அவ்வாறு அரைத்தெடுத்த துவையலை சூடான சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாம்பார் அல்லது குழம்புடன் சுவைத்தால் அருமையாக இருக்கும்.

இதைப்போலவே சாதத்துடன் பொடி சேர்த்து நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு பிசைந்து சாம்பார் அல்லது குழம்புடன் சுவைத்தால் அருமையாக இருக்கும்.

தொக்கு போல எண்ணெய்ச்சட்டியில் அடுப்பின் மீது வைத்து செய்யப்படும் புளிக்காச்சல் மற்றும் தக்காளி தொக்கு போன்றவற்றையும் சாப்பாட்டில் முதலில் சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சுவைத்து மகிழலாம்.

இணைப்புகளை சொடுக்கி தேவையான செயற்குறிப்பு பதிவுகளை அடையலாம்.



கீரை மசியல் வகைகள்
பாலக் கீரை மசியல்
பாலக் கீரை மசியல்
சிகப்பு கீரை மசியல்
சிகப்பு கீரை மசியல்
அரைக்கீரை மசியல்
அரைக்கீரை மசியல்
சிகப்பு கீரை மசியல் 1
சிகப்பு கீரை மசியல் 1


பால்சாறு - கழனி சாறு வகைகள்
மணத்தக்காளிகீரை பால்சாறு
மணத்தக்காளிகீரை பால்சாறு
முருங்கைகீரை பால் சாறு
முருங்கைகீரை பால் சாறு


தொக்கு வகைகள்
புளிக்காச்சல்
புளிக்காச்சல்
தக்காளி தொக்கு
தக்காளி தொக்கு



துவையல் வகைகள்
இஞ்சி துவையல்
இஞ்சி துவையல்
கொத்தமல்லிபுதினா துவையல்
கொத்தமல்லிபுதினா துவையல்
பருப்பு துவையல்
பருப்பு துவையல்
கரிசலாங்கண்ணி துவையல்
கரிசலாங்கண்ணி துவையல்
வேப்பம்பூ துவையல்
வேப்பம்பூ துவையல்
வல்லாரை பருப்பு துவையல்
வல்லாரை பருப்பு துவையல்
நெல்லிக்காய் பீர்க்கங்காய் துவையல்
நெல்லிக்காய் பீர்க்கங்காய் துவையல்
பிரண்டை துவையல்
பிரண்டை துவையல்
பீர்க்கங்காய் துவையல்
பீர்க்கங்காய் துவையல்
வல்லாரை துவையல்
வல்லாரை துவையல்
பொடுதலை துவையல்
பொடுதலை துவையல்
துரை துவையல்
துரை துவையல்


பொடி வகைகள்
மிளகுப்பொடி ஆளிவிதையுடன்
மிளகுப்பொடி ஆளிவிதையுடன்
கொத்தமல்லிமுருங்கைக்கீரைபொடி
கொத்தமல்லிமுருங்கைக்கீரைபொடி
ஆளிவிதை பொடி
ஆளிவிதை பொடி
மிளகுப்பொடி
மிளகுப்பொடி


பல்வேறு சமையல் செயற்குறிப்புகள்




Saturday, May 21, 2016

Venthayakeerai-koottu

#வெந்தயக்கீரைகூட்டு : #வெந்தயக்கீரை மற்ற #கீரை களை போல பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இரும்பு சத்து அதிக அளவில் கொண்டுள்ளது. வயிற்றுப் புண்ணை ஆற்றும் சக்தி உடையது. சிறிது கசப்பு தன்மை கொண்டது. அதனால் பருப்பு மற்றும் தேங்காய் சேர்த்து கூட்டு செய்யும் போது கசப்பு சிறிது மட்டுப் படும். பயத்தம் பருப்பு அல்லது துவரம் பருப்பை வேக வைத்து தனியே வைக்கவும். கீரையை நன்கு கழுவி தண்ணீரை வடித்து விட்டு, சாம்பார் பொடி , மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். வேக வைத்த கீரையுடன் பருப்பு மற்றும் தேங்காய் அரைத்து விட்டு கொதிக்க விட்டு எடுத்தால் கூட்டு தயார்.

வெந்தயக்கீரை கூட்டு

தேவையான பொருட்கள் :
1 கப்வெந்தயகீரை நறுக்கியது
1/3 கப்பயத்தம் பருப்பு
3/4 Tspசாம்பார் பொடி 
1 pinchமஞ்சத்தூள்
1/2 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
அரைக்க :
4 Tspதேங்காய் துறுவல்
4 or 5மிளகு
1/4 Tspஅரிசி மாவு
To Temper :
1/2 Tspவெங்காய வடவம்
1/2 Tspநல்லெண்ணெய்

செய்முறை :
பருப்பு வேக வைத்து தனியே எடுத்து வைக்கவும்.
கீரையை கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்த பின்னர் கத்தியால் பொடியாக நறுக்கி வைக்கவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து எடுத்து தனியே வைக்கவும்.
ஒரு பாத்திரத்தை அல்லது வாணலியை அடுப்பில் வைத்து 1/2 கப் தண்ணீர் விட்டு மிதமான தீயின் மீது சூடாக்கவும்.
அதில் சாம்பார் பொடி, உப்பு மற்றும் மஞ்சத்தூள் சேர்க்கவும்.

ஒரு கரண்டியால் கலக்கிய பின்னர் அரிந்து வைத்துள்ள கீரையை சேர்க்கவும்.
கீரையின் மேல் வேக வைத்த பருப்பையும் சேர்த்து ஒரு மூடி போட்டு  2 நிமிடங்கள் வேக விடவும்.
வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து கலந்து விடவும்.
உப்பு சரிபார்த்து மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
வாணலியை அடுப்பின் மீது வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி  வெங்காய வடவம் தாளித்து கூட்டின் மீது கொட்டவும்.
கூட்டின் சுவையும் வெங்காய வடவத்தின் மணமும் சாப்பிடத் தூண்டும்.
சூடான சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாம்பாரில் உள்ள காயுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
வெந்தயக்கீரை கூட்டு




மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து சுவைக்க
  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
சிறுகீரை கூட்டு வாழைப்பூ முருங்கைகீரை கூட்டு பசலை கீரை பூரி
நூடுல்ஸ் தக்காளி சட்னியுடன் சிகப்பு கீரை சப்பாத்தி






இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.



Thursday, March 10, 2016

Sigappu-keerai-masiyal 1

#சிகப்புக்கீரை மசியல் 1 : நான் திருவனந்தபுரத்தில் வசித்து வந்த போது #கீரை என்றாலே சிகப்பு தண்டு கீரைதான் கிடைக்கும். இந்த தண்டு கீரையின் இலைகள் சிறிது அழுத்தமாக இருக்கும். அதனால் பொரியல் செய்தால் மட்டும்தான் சுவைக்க முடியும். கூட்டோ அல்லது மசியலோ செய்தால் சுவை அவ்வளவு நன்றாக இருக்காது.
ஆனால் நான் ராய்ப்பூரில் வசித்த போது சிகப்பு முளை கீரை அதிகமாக கிடைக்கும். மிகவும் இளையதாகவும் நல்ல பீட்ரூட் நிறத்தை கொண்டதாகவும் இருக்கும். சுவையும் மிக மிக அருமையாக இருக்கும். #சிகப்புமுளைக்கீரை, சுருக்கமாக #சிகப்புக்கீரை கொண்டு செய்யப்படும் மசியல் எனக்கு மிகவும் பிடித்த சமையல் ஆகும். இப்போது இதனை கொண்டு மசியல் செய்யும் முறையை காணலாம்.


சிகப்புக்கீரை மசியல்



தேவையான பொருட்கள் :
ஒரு கைப்பிடிசிகப்பு முளை கீரை
2 or 3பூண்டு பற்கள்
1/4 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]

செய்முறை :
சிகப்பு முளைக்கீரையை தண்ணீரில் இரண்டு மூன்று முறை நன்கு கழுவி தண்ணீரை வடித்து விடவும்.
குக்கரில் அரை கப் தண்ணீர் விட்டு கீரையை சேர்க்கவும்.
குக்கரை மூடி வெயிட் பொருத்தி அடுப்பின் மேல் வைத்து அதிக தீயில் சூடாக்கவும்.
ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
வெயிட்டை சிறிது சிறிதாக தூக்கி நீராவியை வெளியேற்றவும்.
அல்லது குழாயின் அடியில் வைத்து தண்ணீரை குக்கரின் மேல் ஓட விடவும்.
நீராவி உடனே அடங்கி விடும்.
குக்கரை திறந்து வெந்த கீரையை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து ஆற விடவும்.

கீரை வெந்த தண்ணீரை கீழே கொட்டி விடாதீர்கள்.
அதை ரசத்திலோ அல்லது சாம்பாரிலோ சேர்க்கலாம்.

மிக்ஸியில் உறித்த  பூண்டு பல்லை போட்டு ஒரு சுற்று சுற்ற விடவும்.
பிறகு திறந்து கீரையையும் உப்பையும் சேர்த்து சில மணித்துளிகள் அரைக்கவும்.

திப்பி திப்பியாக இருக்க வேண்டும். மைய அரைக்கக் கூடாது.

சூடான சாதத்தில் ஒன்றிரண்டு தேக்கரண்டி கீரை மசியலை போட்டு ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு பிசைந்து முருங்கைக்காய் சாம்பார் அல்லது வத்தக்குழம்பு தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் ... சுவையே அலாதிதான்!!


Grind coarsely cooked Red Amaranth greens with salt and garlic.








சில சமையல் வகைகள் சமைக்க ருசிக்க


பாலக் மசியல்
பாலக் கீரை மசியல்
சிகப்பு முளை கீரை மசியல்
சிகப்பு கீரை மசியல்
பால் சாறு ( அ ) கழனி சாறு
பால் சாறு
முள்ளங்கி கீரை பொரியல்
முள்ளங்கிகீரை ..
முடக்கத்தான் கீரை தோசை
முடக்கத்தான் தோசை



இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.

Friday, June 13, 2014

Palak Chappathy

#பாலக் #சப்பாத்தி : பாலக் கீரையில் உள்ள இரும்பு சத்து எளிதில் உடலில் சேரக்கூடியதாக இருப்பதால் ரத்த சோகை மற்றும் இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் இதனை தினமும் உண்ணுவது நல்லது.

மேலும் போலிக் ஆசிட் இருப்பதால் கர்ப்பிணிகள் இதனை எடுத்துக்கொள வேண்டும்.

பால் கொடுக்கும் தாய் மார்கள் பால் அதிகம் சுரக்க இந்த கீரையை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்வது நல்லது.

தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய புரத சத்து இருகிறது. அதனால் தினமும் எடுத்துகொண்டால்  இருதய கோளாறு மற்றும் ரத்த குழாய்கள் அடைப்பு போன்றவை வராமல் தடுக்கலாம்.

பாலக் மசியல், பாலக் கூட்டு மற்றும் பாலக் பருப்பு போன்ற உணவு வகைகள் செய்யலாம்.

மிக எளிதில் வேகக் கூடியது. அதனால் இந்த கீரையை உபயோகித்து  சப்பாத்தி செய்தேன். மிக நன்றாக வந்தது. அதனை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.



தேவையான பொருட்கள் :


2 கப்                                     கோதுமை மாவு [ multi grain whole wheat flour ]
1/2 Tsp                                  ஓமம்
1/2 Tsp                                  சீரகம்
1/4 Tsp                                  கருஞ்சீரகம்
3/4 Tsp                                  உப்பு [ அட்ஜஸ்ட் ]
2 Tsp                                     நல்லெண்ணெய்
1/2 கப்                                  பாலக் கீரை பொடியாக நறுக்கியது

சப்பாத்தி சுட்டெடுக்க தேவையான எண்ணெய்

செய்முறை :
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மாவை எடுத்துக்கொள்ளவும்.
மற்ற பொருட்களையும் சேர்க்கவும். முதலில் கையினால் பிசறி விடவும்.



பிறகு தண்ணீர் விட்டு பிசையவும்.
சிறிது கெட்டியான மாவாக பிசையவும்.


இப்போது 2 Tsp எண்ணெய் விட்டு நன்கு மிருதுவாகும் வரை பிசையவும்.
சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

கீரையில் நீர் சத்து அதிகம் உள்ளதால் நேரம் ஆக ஆக மாவு நீர்த்து போய் விடும். அதனால் பிசைந்தவுடன் சுட்டெடுப்பது நல்லது.

மாவு தொட்டு தொட்டு வட்ட வட்ட ரொட்டிகளாக திரட்டி வைக்கவும்.
அடுப்பில் தோசை கல்லை சூடாக்கவும்.


திரட்டிய மாவை சூடான கல்லில்  இட்டு ஒன்றிரண்டு துளிகள் எண்ணெய் விட்டு தடவி இரண்டு பக்கமும் சுட்டு எடுக்கவும்.


சூடாக கல்லில் இருந்து எடுத்தவுடனேயே காலிப்ளவர் காளான் குருமா அல்லது உருளைகிழங்கு மசாலாவுடன்  சுவைக்கவும்.


மற்ற சப்பாத்தி வகைகள் :

Buckwheat Roti 
சிகப்பு கீரை சப்பாத்தி