#கொடிபசலைபூரி - #SpinachPoori : #கீரை களை அதன் நார் சத்துக்காகவும் வைட்டமின் A காகவும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்கிறோம். இவ்விரண்டையும் தவிர வைட்டமின் C ம் மற்ற தாதுக்களும் அதிக அளவில் இக்கீரையில் நிறைந்துள்ளது.
இந்த கீரையை இரண்டு நிமிடங்களுக்குள் வேக வைத்து உண்ணும் போது இதில் அடங்கியிருக்கும் சத்துக்கள் அனைத்தும் உடலில் சேருகிறது.
இந்த கீரை மேனியை பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
அதிக அளவு நார்சத்து மலசிக்கல் வராமல் பாதுகாக்கிறது.
இத்தகைய அருமையான கீரையை குழந்தைகளையும் மற்றவர்களையும் சாப்பிட வைப்பது மிக மிக கடினமான காரியம்! ஏதோ ஒருவகையில் மறைத்து சமையலில் உபயோகிப்பதின் மூலம் இக்கீரையின் பயனை எல்லோரும் அடையலாம். ஐயோ!... கீரையா என ஓடுபவர்கள் கூட விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவு வகையை இங்கு காணலாம். அதுதான்... பூரி.
பூரியுடன் இக்கீரையை சேர்த்து செய்யும் போது மறுக்காமல் எல்லோரும் முக்கியமாக குழந்தைகளும் விரும்பி உண்டு விடுவார்கள்.
இன்று பசலையை உபயோகித்து பூரி எவ்வாறு செய்யலாம் என காண்போம்.
சுமார் 12 முதல் 15 பூரிகள் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள் :
3/4 கப் மைதா மாவு
3/4 கப் கோதுமை மாவு
10 - 15 கொடி பசலை கீரை
1 Tsp நெய் [ விருப்பப்பட்டால் ]
1/2 Tsp உப்பு
1 Tsp எண்ணெய்
1 கப் எண்ணெய் பொரிப்பதற்கு
செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து, பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு குறைந்த தீயில் சூடாக்கவும்.
எண்ணெய் சூடாவதற்குள் பூரி மாவை தயாரித்து விடலாம்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மாவை எடுத்துக்கொள்ளவும்.
அதில் நெய்யையும் உப்பையும் சேர்க்கவும்.
கைகளால் பிசறி விடவும்.
கீரையை நன்கு கழுவிய பிறகு மிக்ஸி பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
முதலில் தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
பின்னர் 1/4 கப் தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த கீரை விழுதை மாவுடன் சேர்க்கவும்.
மாவை பிசையவும். தண்ணீர் சேர்த்து அரைத்த கீரை விழுதே போதுமானது. தேவையானால் சிறிது நீர் சேர்த்து பிசையலாம்.
மாவு ஒன்றுசேர்ந்தாற்போல வந்தவுடன் 1 Tsp எண்ணெய் சேர்க்கவும்.
மறுபடியும் நன்கு பிசையவும்.
இப்போது பூரிகளை இட சப்பாத்தி அமுக்கும் [ ப்ரஸ் ] கருவியை உபயோகிக்கலாம்.
இல்லையென்றால் வட்ட வட்டமாக பூரி கட்டை கொண்டு இடவும்.
நான் இங்கு சப்பாத்தி ப்ரஸில் எப்படி இடுவது என பார்க்கலாம்.
ப்ரெசின் உள்ளே அடி தட்டிலும் மேல் தட்டிலும் எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
அடி தட்டின் மேல் உருட்டி வைத்துள்ள மாவை வைத்து மேல் தட்டால் மூடி கைப்பிடியால் அழுத்தம் கொடுத்து வட்ட வடிவ பூரியை உருவாக்கவும்.
இவ்வாறு தட்டிய பூரி மிகவும் மெல்லியதாகவும் இருக்ககூடாது.
தடிமனாகவும் இருக்கக் கூடாது.
ஒரே சீராக 1/2 mm தடிமன் உடையதாக இருக்கலாம்.
எண்ணெய் நன்கு புகை வரும் அளவுக்கு சூடாக இருக்க வேண்டும்.
திரட்டிய பூரி மாவை எண்ணெய்யில் மெதுவாக விடவும்.
இதே போல ஒவ்வொன்றாக பொரித்தெடுக்கவும்.
எண்ணெய்யின் சூட்டை தேவைக்கேற்றவாறு அவ்வப்போது தீயை கூட்டி குறைத்து கொள்ளவும்.
பூரி கிழங்குடன் அல்லது பன்னீர் மசாலாவுடன் அல்லது குருமாவுடன் பரிமாறலாம்.
இங்கு தக்காளி வெண்டைக்காய் கறியுடன் பரிமாறப் பட்டுள்ளது.
இதையும் முயற்சி செய்யலாமே!!
இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.
மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.

போட்ட உடனேயே பந்து போல உப்பி மேலெழுந்து வரும்.
சாரணியால் அடுத்த பக்கத்திற்கு திருப்பி விடவும்.
இதே போல ஒவ்வொன்றாக பொரித்தெடுக்கவும்.
எண்ணெய்யின் சூட்டை தேவைக்கேற்றவாறு அவ்வப்போது தீயை கூட்டி குறைத்து கொள்ளவும்.
பூரி கிழங்குடன் அல்லது பன்னீர் மசாலாவுடன் அல்லது குருமாவுடன் பரிமாறலாம்.
இங்கு தக்காளி வெண்டைக்காய் கறியுடன் பரிமாறப் பட்டுள்ளது.
இதையும் முயற்சி செய்யலாமே!!
- படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
- படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.
மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.
No comments:
Post a Comment