#அடை வகைகள் : தமிழ் மக்களுக்கு பிடித்தமான புரத சத்து நிறைந்த ஒரு பலகாரம்தான் அடை. புழுங்கரிசி [ இட்லி அரிசி ], பச்சரிசி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, பயத்தம் பருப்பு ஆகியவற்றை குறிப்பிட்ட விகிதத்தில் ஊறவைத்து அரைத்து எடுத்து வைக்க வேண்டும். அரைத்த மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அரைத்த மாவில் பொடியாக அரிந்த வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை தாராளமாக போட்டு கலக்கி சூடான தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டெடுத்தால் அடை தயார். அடை தோசையைப்போல் மெல்லியதாக இல்லாமல் சிறிது தடிமனாக சுட்டெடுக்க வேண்டும்.
அடை சிறிது தடிமனாக பரப்பி சுடப்படுவதால் தோசையை விட வேக சிறிது அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.
தோசையைப்போல் அல்லாமல் சிறிது அதிகமாக அடையின் மீதும் சுற்றியும் எண்ணெய் விட்டு சுட்டெக்க வேண்டும்.
இதைத் தவிர மெல்லியதாக வெட்டிய சுரைக்காய், பரங்கிக்காய், சௌசௌ முதலியவற்றையும், முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை போன்ற கீரை வகைகளையும் சேர்த்தும் அடை செய்யலாம்.
துரித கதியில் அடை செய்ய அரிசிமாவு, கடலை மாவு, பயத்தம் மாவு போன்ற இன்ன பிற உலர்ந்த மாவு வகைகளை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து தண்ணீர் விட்டு கலக்கி மேற்சொன்ன காய்கறிகள் அல்லது கீரை கொண்டும் அடை செய்யலாம்.
அடையை கல்லிலிருந்து சூடாக எடுத்து தட்டில் இட்டு தாராளமாக நெய்யை அடையின் மீது பரப்பி
அவியல் அல்லது
தேங்காய் சட்னியுடன் சுவைத்தால் அற்புதமாக இருக்கும்.
அடையை
சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும்.
அடை வெல்லமும் சுவையான இணைகள்.
இது எதுவுமே இல்லாமல் அப்படியே சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.
இங்கு அடை வகைகளின் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. இணைப்பை அழுத்தி பதிவை படித்து பின் செய்து சுவைத்து மகிழவும்.
 |
அடை |
|
 |
சைவ ஆம்லெட் |
|
 |
அமராந்த் அடை |
|
 |
கம்பு காலிப்ளவர் அடை |
|
 |
கேழ்வரகு அடை |
|
 |
பரங்கிக்காய் அடை |
|
![பெசரட்டு [ பயத்தம்பருப்பு அடை ] பெசரட்டு [ பயத்தம்பருப்பு அடை ]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2S7_4jToqgOwv5T1OjqYPBrM-Yk7veSp89N7VkORlsl-_jfjuH-ukrWL9TGbNKU3sLxDU6IS0o1p6-H34DP0dfMtLfoZS3xRu1fTVzDMqaghhvu8TxC25aUcTP1PwFrbR6RK0cEpx9eA/s640/1-DSCN9043.JPG) |
பெசரட்டு [ பயத்தம்பருப்பு அடை ] |
|
 |
சிறுபயறு பெசரட்டு |
|
 |
வாழைப்பூ பசலை அடை |
|
 |
வாழைப்பழ இனிப்பு அடை |
|
 |
சௌசௌ அடை |
|
அடைக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட சட்னி வகைகள் மற்றும் சாம்பார் / குழம்பு வகைகள் ஆகியவற்றிற்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
தொட்டுக்க
அட, அடைல இத்தனை இருக்கா?! நன்றிப்பா
ReplyDelete