Search This Blog

Saturday, December 28, 2013

Ragi Adai

#கேழ்வரகுஅடை : #கேழ்வரகு என்பதை பேச்சு வழக்கில் #கேவுரு என்றும் #கேப்பை என்றும் அழைப்படுகிறது. ஆங்கிலத்தில் பொதுவாக #Ragi என அழைக்கப்படுகிறது. இதற்கு ஆங்கிலத்தில் #FingerMillet  என்று பெயர்.
என் அம்மா அடிக்கடி இந்த #அடை செய்வது உண்டு. கேழ்வரகு மாவை கொண்டு கார அடையும் இனிப்பு அடையும் செய்யலாம். கார அடை செய்த அன்றே சாப்பிட்டு விடுவது நல்லது. வெங்காயம் சேர்த்து செய்வதால் கெட்டு போய் விடும் அபாயம் உண்டு. ஆனால் இனிப்பு அடையை இரண்டு மூன்று தினங்களுக்கு வைத்து சாப்பிடலாம்.
நான் இந்த கார கேவுரு அடையை டிபனாக செய்து மிகுந்த நாட்களாகி விட்டது. உண்மையாக சொன்னால் மறந்தே போய் விட்டேன். சென்ற வாரம் என் மகள் தான் கேவுரு அடை செய்ததாக சொன்னாள். அவள் சொன்னபிறகுதான் நாமும் செய்யலாமே என்று இரு தினங்களுக்கு முன் செய்தேன்.

கேழ்வரகு அடை [ ராகி அடை ]

இனி கேவுரு கார அடையை செய்வது எப்படி என பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :
1 கப்                              கேழ்வரகு மாவு
1 Tbsp                            ஓட்ஸ் [ விரும்பினால் ]
1 Tsp                              எண்ணெய்
1/2 Tsp                           எள்ளு
1/2 Tsp                           சீரகம்
1/4 Tsp                           ஓமம் ( விருப்பப்பட்டால் )
1/4 Tsp                           பெருங்காய பொடி ( விருப்பப்பட்டால் )
1                                     பெரிய வெங்காயம் ( பொடியாக நறுக்கவும்  )
2 அ  3                            பச்சை மிளகாய் ( பொடியாக நறுக்கவும் )


1 Tbsp                            காரட் துருவியது
1/2 Tsp                           உப்பு ( அட்ஜஸ்ட் )
15                                   கருவேப்பிலை (  பொடியாக நறுக்கவும்  )
4Tsp                               கொத்தமல்லி தழை  பொடியாக நறுக்கியது

தேவையான அளவு எண்ணெய் அடை சுடுவதற்கு.

செய்முறை :
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
கையினால் ஒன்றாக சேர்த்து பிசறி விடவும்.


பிறகு மிக மிக மிதமான சுடு தண்ணீரை ஊற்றி மாவை பிசைந்து கொள்ளவும்.
சிறிது கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும்.
மாவு தயார்.


இனி தோசை கல்லில் அடை எப்படி சுடுவது என பார்ப்போம்.
ஒரு சுத்தமான  வாழை இல்லை அல்லது பிளாஸ்டிக் தாள் எடுத்துக்கொள்ளவும். நான் தாள் எடுத்துக் கொண்டேன்.
அடுப்பில் தோசை கல்லை சூடாக்கவும்.
தாளின் மேல் எண்ணெய் தடவவும்.
ஒரு உருண்டை மாவை தாளின் மேல் வைக்கவும்.
கை விரல்களிலும் எண்ணெய் தடவிக் கொண்டு அடை தட்டவும்.


ஒரே மாதிரி தடிமனாக தட்ட வேண்டும்.
சூடான கல்லில் எண்ணெய் விட்டு தட்டி வைத்த அடையை கவனமாக எடுத்து போடவும்.
அடையின் மேல் 1/2 Tsp எண்ணெய் பரவலாக ஊற்றவும்.

கேழ்வரகு அடை [ ராகி அடை ]

திருப்பிப் போட்டு நன்றாக வெந்தவுடன் தட்டில் எடுத்து வைக்கவும்.
இதே போல ஒவ்வொன்றாக தட்டி சுட்டு எடுத்து அடுக்கவும்.

இதில் காரம் சேர்த்திருப்பதால் ஏதும் தொட்டுக் கொள்ள தேவையே இல்லை.


தேவையானால் தக்காளி சாஸ் அல்லது தேங்காய் சட்னி தொட்டுக் கொண்டு சுவைக்கலாம்.






முயற்சி செய்து பார்க்க மேலும் சில சமையல் குறிப்புகள் :

கேழ்வரகு [ ராகி ] குழிபணியாரம்
கேழ்வரகு [ ராகி ] குழிபணியாரம்
கேழ்வரகு தோசை [ ராகி தோசை ]
கேழ்வரகு தோசை [ ராகி தோசை ]
கேழ்வரகு புட்டு [ ராகி புட்டு ]
கேழ்வரகு புட்டு [ ராகி புட்டு ]





No comments:

Post a Comment