Search This Blog

Wednesday, August 22, 2018

Sundaikkai-Vathakuzhambu

#சுண்டைக்காய்வத்தக்குழம்பு : #சுண்டைக்காய் கொண்டு மசாலா கறி செய்வதுண்டு. சுண்டைக்காய் கத்தரிக்காய் வகையை சேர்ந்தது. சிலவகை சுண்டைக்காய் சிறிது கசக்கும். ஆனால் #வத்தக்குழம்பு செய்யும் போது அதன் கசப்பு அதிகமாக தெரிவதில்லை.
இனி எவ்வாறு செய்வது என்பதை இங்கு காணலாம்.

Sundakkai vathakuzhambu


தேவையானவை :
1/4 கப்சுண்டைக்காய் [ pea eggplant ]
1/4 கப்பூண்டு உரித்தது
1/4 கப்சின்ன வெங்காயம்
1 சின்னதக்காளி, நறுக்கவும்
10 - 15கருவேப்பிலை
பெரியநெல்லி அளவுபுளி
பொடிகள் :
3 Tsp குவித்துசாம்பார் பொடி
1 Tspகொத்தமல்லி பொடி
1/2 Tspஅரைத்துவிட்ட குழம்புத்தூள் [ விரும்பினால் ]
2 சிட்டிகைமஞ்சத்தூள்
2 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
தாளிக்க :
3 Tspநல்லெண்ணெய்
1/2 Tspகடுகு
1/4 Tspவெந்தயம்
சிறு துண்டுபெருங்காயம்
2 Tspகடலைப்பருப்பு
3 Tspநிலக்கடலை
சிறு துண்டு வெல்லம் [ விரும்பினால் ]

செய்முறை :
புளியை சிறிது  சூடான தண்ணீரில் ஊற வைக்கவும்.
வெங்காயத்தையும் பூண்டையும் உறித்து சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
சுண்டைக்காய்களின் காம்பை நீக்கி கழுவிய பின்னர் இரு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து 2 Tsp எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விடவும் .
அதன் பின் கடலை பருப்பு, நிலக்கடலை போட்டு வறுக்கவும்.
பொன்னிறமானதும் வெந்தயம் மற்றும் பெருங்காயம் சேர்த்து வறுத்தபின்
கருவேப்பிலை, வெங்காயம், பூண்டு போட்டு மணம் வரும் வரை வதக்கவும்.
பிறகு தக்காளியை 1 நிமிடம் வதக்கவும்.
அடுத்து மஞ்சத்தூள் மற்றும் வெட்டிவைத்துள்ள சுண்டைக்காய் சேர்க்கவும்.
ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.

பின்னர் கொடுக்கப்பட்டுள்ள தூள்களை சேர்த்து சில வினாடிகள் பிரட்டி விட்டு முக்கால் கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து காய் வேகும் வரை கொதிக்க விடவும்.
கடைசியாக புளியை கரைத்து வடுகட்டி சேர்க்கவும்.
எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பிக்கும் வரை கொதிக்க விடவும்.
கடைசியாக உப்பு சரி பார்க்கவும்.
நான்கைந்து கருவேப்பிலையை கிள்ளி போட்டு அடுப்பை அணைக்கவும்.
பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

சாதத்தில் சுண்டைக்காய் வத்தக்குழம்பை விட்டு நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி ஊற்றி பிசைந்து விருப்பமான பொரியல் அல்லது கறியுடன் சுவைக்கவும்.
பருப்பு சாதத்திற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட மிக மிக அருமையாக இருக்கும்.
தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.

Sundakkai vathakuzhambu







சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

சேனை கிழங்கு வத்தக்குழம்பு
சேனை கிழங்கு வத்தக்குழம்பு
வத்தக்குழம்பு
வத்தக்குழம்பு
புளிக்கூழ்
புளிக்கூழ்
மணத்தக்காளி வத்தக்குழம்பு
மணத்தக்காளி வத்தக்குழம்பு
பஜ்ஜி
பஜ்ஜி


No comments:

Post a Comment