Search This Blog

Monday, September 3, 2018

Athalaikai-Curry

#அதலைக்காய்கறி : ஜூலை மாதம் முதல் வாரம் ஹூப்ளி நகரத்திற்கு சென்றிருந்தேன். அங்கு காய்கறி கடைத்தெருவிற்கு சென்றேன். அங்கு காய்கறி விற்பவர்கள் குவியல் குவியலாக பச்சை நிறத்தில் ஒரு காயை விற்க வைத்திருந்தார்கள். நான் முதலில் அவை பச்சை மிளகாயின் ஒரு வகையாக இருக்கும் என எண்ணினேன். பின்பு அருகில் சென்று பார்த்த போது பாகற்காயை போன்று மிக சிறு வடிவத்தில் இருப்பதைக் கண்டேன். காய் விற்றுக்கொண்டிருந்த வணிகர்களிடம் அதன் பெயரை வினவினேன். அதனை உபயோகித்து என்னென்ன செய்யலாம் எனவும் வினவினேன். அந்த காயிற்கு சொன்ன கன்னட பெயர் எனக்கு நினைவில் இல்லை. அவர்கள் இக்காயைக்கொண்டு குழம்பு மற்றும் கறி செய்யலாம் என சொன்னார்கள்.
புதிய காயின் சுவையை முயற்சி செய்யலாம் என வாங்கி வந்தேன். அதன் தோற்றம், சுவை மற்றும் மணம் பாகற்காயைப் போன்றே இருந்தது.
பின்பு கூகுளில் தேடிய போது தமிழில் இந்த காயின் பெயர் #அதலைக்காய் என்றறிந்தேன். இவ்வகை காய்கள் தமிழ் நாட்டின் தெற்கு மாவட்டங்களில் கிடைக்கும் என அறிந்துகொண்டேன். மேலும் நீரிழிவு மற்றும் குடல் புழுக்களை நீக்கவல்லது என அறிந்தேன். மேலதிக விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.
Athalaikai [ அதலைக்காய் ]

அதலைக்காயை உபயோகித்து பாகற்காய் மசாலா கறி போன்று செய்து சுவைத்தேன். அதன் சமையல் குறிப்பு இங்கு பகிர்ந்துள்ளேன்.

#Athalaikai [ #அதலைக்காய் ]


தேவையானவை :
150 gmஅதலைக்காய்
1 Tspகடலை எண்ணெய்
1 சிட்டிகைமஞ்சத்தூள்
1/4 Tspகடுகு
1/2 Tspஉளுத்தம் பருப்பு
1/2 Tspஉப்பு
அரைக்க :
1 1/2 Tbspதேங்காய் துருவல்
2 - 3சிகப்பு மிளகாய் [ அட்ஜஸ்ட் ]
1/2 Tspசீரகம்
1/2 Tspசோம்பு
1/4 Tspகொத்தமல்லி விதை
10 - 15கருவேப்பிலை
சிறிதளவுகொத்தமல்லி தழை
2 பற்கள்பூண்டு
1 medium sizeவெங்காயம், நறுக்கவும்
1/8 Tspஉப்பு

செய்முறை :
அதலைக்காயை கழுவி சுத்தம் செய்த பின்னர் ஒவ்வொரு காயையும் இரண்டாகவோ அல்லது நான்காகவோ நறுக்கி வைக்கவும். விதை சிறிது கடினமாக இருந்தால் நீக்கி விடவும்.

வெங்காயம் தவிர்த்து மற்ற அரைக்கவேண்டிய பொருட்கள் அனைத்தையும் மிக்சியில் போட்டு அளவான தண்ணீர் விட்டு அரைக்கவும்.
கெட்டியாக அரைப்பது நல்லது.
கடைசியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
ஒரு கிண்ணத்தில் இட்டு தனியே வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு வெடித்த பின்னர் உளுத்தம் பருப்பை இட்டு சிவக்க வறுத்த பிறகு வெட்டி வைத்துள்ள அதலைக்காயை சேர்க்கவும்.
மஞ்சத்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கலந்து விடவும்.
சிறிது தண்ணீர் தெளித்து மூடியால் மூடி வேக விடவும்.

காய் வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
பச்சை வாசனை போகும் வரை சிறிய தீயில் வைத்திருக்கவும்.
இடையில் அவ்வப்போது கிளறி விடவும்.
உப்பு சரி பார்க்கவும்.

தண்ணீர் வற்றி நன்கு வதங்கியவுடன் கொத்தமல்லி தழையை கிள்ளி போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
மேலும் சிறிது கொத்தமல்லி தழைகளை தூவி அலங்கரிக்கவும்.
சுவையான அதலைக்காய் கறி தயார்.

சாம்பார் மற்றும் ரசம் விட்டு பிசைந்து இக்கறியை தொட்டுக்கொண்டு சாப்பிட மிக அருமையாக இருக்கும்.








மேலும் சில அருமையான சமையல் குறிப்புகள் 
முயற்சி செய்து பார்க்க
சுண்டைக்காய்மசாலாகறி
சுண்டைக்காய்
மசாலாகறி
காலிப்ளவர் உருளை மசாலா கறி
காலிப்ளவர் உருளை மசாலா கறி
சேப்பங்கிழங்கு மசாலா கறி
சேப்பங்கிழங்கு மசாலா கறி
பலாமுசு மசாலா கறி
பலாமுசு
மசாலா கறி
கொள்ளு சுண்டல்
கொள்ளு
சுண்டல்

1 comment:

  1. உங்கள் பதிவுகளை http://valaippookkal.com தமிழ் திரட்டியில் இணைத்து உங்கள் எண்ணங்களையும், கருத்துகளையும் உலகமெங்கும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்

    ReplyDelete