#சேனைகிழங்குவத்தக்குழம்பு : வெகு நாட்களுக்குப் பிறகு #சேனைகிழங்கு வாங்கி வந்தேன். கார கறி செய்தது போக சொற்ப அளவு #கிழங்கு மீதம் இருந்தது. அதனை உபயோகித்து #வத்தக்குழம்பு செய்தேன். எப்படி என இனி பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
சின்ன நெல்லிக்காய் அளவு புளி
1/2 கப் சேனை கிழங்கு துண்டுகள்
7 சின்ன வெங்காயம்
20 பற்கள் பூண்டு
4 அ 5 வெண்டைக்காய் [ இருந்தால் ]
1/2 முருங்கைக்காய் [ இருந்தால் ]
1 Tsp மணத்தக்காளி வற்றல் [ இருந்தால் ]
1 சிறிய அளவு தக்காளி
1 Tsp கடுகு
2 Tsp நிலக்கடலை
1 Tsp கடலை பருப்பு
1/4 Tsp வெந்தயம்
10 இலைகள் கருவேப்பிலை
1/4 Tsp பெருங்காய தூள்
1 Tsp மல்லி தூள்
1/2 Tsp சீரகத்தூள்
3 Tsp குவித்து சாம்பார் தூள்
1/4 Tsp மஞ்சத்தூள்
2 Tsp உப்பு
3 Tsp நல்லெண்ணெய்
1 Tsp ( விருப்பப்பட்டால் ) வெல்லம்
செய்முறை :
புளியை சிறிது சூடான தண்ணீரில் ஊற வைக்கவும்.
வெங்காயத்தையும் பூண்டையும் உறித்து சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து 2 Tsp எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விடவும் .
அதன் பின் வற்றல் போட்டு வறுக்கவும்.
வற்றல் நன்றாக பொறிந்ததும் கடலை பருப்பு, நிலக்கடலை போட்டு வறுக்கவும்.
பொன்னிறமானதும் வெந்தயம் மற்றும் பெருங்காயம் சேர்த்து சிறிது வறுத்தபின் குக்கரில் எடுத்து போடவும்.
மீண்டும் அதே எண்ணெய் சட்டியில் 1 Tsp எண்ணெய் சேர்த்து வெங்காயம், பூண்டு போட்டு மணம் வரும் வரை வதக்கவும்.
பிறகு தக்காளியை 1 நிமிடம் வதக்கவும்.
கொடுக்கப்பட்டுள்ள தூள்களை சேர்த்து சில வினாடிகள் பிரட்டி விட்டு குக்கரில் எடுத்து போடவும்.
புளியை 1 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி குக்கரில் விடவும்.
மேலும் 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
உப்பை சேர்த்து கொதிக்கவிடவும். விரும்பினால் ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்க்கலாம்.
குக்கரை மூடி வெயிட் வைத்து 1 விசில் வரும் வரை அதிக தீயில் வேகவிடவும்.
ஆவி அடங்கியவுடன் திறந்து வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.
சுவையான வத்தக் குழம்பு தயார்.
சூடான சாதத்தில் பருப்பும் நெய்யும் சேர்த்து பிசைந்து வத்தக் குழம்பு தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் சுவையே அலாதிதான்.
அதே போல கீரை மசியலும் நல்லெண்ணையும் சேர்த்து பிசைந்த சாதத்திற்கும் வத்தக் குழம்பு தொட்டுகொள்ள நன்றாக இருக்கும்.
சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

சாதத்தில் தேவையான அளவு வத்தக் குழம்பு ஊற்றி நல்லெண்ணெயுடன் பிசைந்து பிரியமான துவட்டலுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.
சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
|
|
|
||||||
|
|
No comments:
Post a Comment