#வாழைத்தண்டுபொரிகலவை [ #வாழைத்தண்டுசாட் ] : #சாட் என்பது கேரட், வெங்காயம், தக்காளி, கொத்துமல்லி தழை மற்றும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சாட் மசாலா பொடி போன்றவற்றுடன் பொரி சேர்த்து கலக்கி செய்யப்படும் ஒரு உணவு வகை. அதனை பொரி கலவை என்று தமிழில் கூறலாம். இங்கு அதனுடன் வாழைத்தண்டை பொடியாக நறுக்கி சேர்த்துள்ளேன். வாழைத்தண்டு நார் சத்து நிறைந்த உணவு. வாழைத்தண்டு கொண்டு பொதுவாக வாழைத்தண்டு பொரியல் மற்றும் தயிர் பச்சடி மட்டுமே செய்வது வழக்கம். இங்கு வாழைத்தண்டை உபயோகித்து சாட் செய்யும் முறையை காணலாம்.
தேவையானவை : | |
---|---|
1/2 கப் | அரிசிப் பொரி |
1/2 கப் | சோளப் பொரி |
1/3 கப் | கேரட் சீவியது |
1/2 கப் | வாழைத்தண்டு பொடியாக நறுக்கியது |
1 | தக்காளி, பொடியாக நறுக்கவும் |
1 | வெங்காயம், பொடியாக நறுக்கவும் |
1/4 கப் | கொத்தமல்லி பொடியாக நறுக்கியது |
தூள் & சாஸ் : | |
1/2 Tsp | கொத்தமல்லிதூள் |
1/2 Tsp | சீரகத்தூள் |
2 சிட்டிகை | மஞ்சத்தூள் |
1/4 Tsp | மிளகாய்த்தூள் |
1/4 Tsp | சாட் தூள் |
1/4 Tsp | உப்பு |
1/2 Tsp | கருப்பு உப்பு [ ராக் சால்ட் ] |
1/2 Tsp | இனிப்பு & புளிப்பு புளி சாஸ் |
1/4 Tsp | தேன் |
செய்முறை :
பொரி நீங்கலாக கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும்.
பின்பு பொரி இரண்டையும் சேர்த்து கலக்கவும்.
உப்பு மற்றும் காரம் சரி பார்க்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைத்து கொத்தமல்லி தழை தூவி சுவைக்கவும்.
கலந்தவுடன் சாப்பிட்டு விடவும். இல்லையெனில் தண்ணீர் விட்டு நசநசவென ஆகிவிடும்.
குறிப்பு : மிளகாய்தூளுக்கு பதிலாக மிளகுத்தூளை சேர்த்துக்கொள்ளலாம்.
சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
|
|
|
||||||
|
|
No comments:
Post a Comment