#புளிக்கூழ் : இது அரிசி, புளி மற்றும் பருப்பு வகைகளை சேர்த்து செய்யப்படும் ஒரு புளிப்பு சுவையுடன் கூடிய காரம் ஆகும். இதனை சூடாக சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும். ஆறினாலும் அருமையாக இருக்கும்.
பொதுவாக மாலை நேர சிற்றுண்டியாகவே செய்யப்படும்.
இனி எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நெல்லி அளவு புளி, நீரில் ஊறவைக்கவும்
1/3 கப் அரிசி மாவு
2 அ 3 சிகப்பு மிளகாய்
சிறு துண்டு பெருங்காயம்
1/2 Tsp கடுகு
4 Tsp நிலக்கடலை
2 Tsp கடலை பருப்பு
1 Tsp உளுத்தம் பருப்பு
6 கருவேப்பிலை
4 Tsp நல்லெண்ணெய்
செய்முறை :
அரிசி மாவை 1/3 கப் தண்ணீர் விட்டு கரைத்து தனியே வைக்கவும்.
புளியை 1/2 கப் தண்ணீர் விட்டு கரைத்து வடி கட்டி தனியே எடுத்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு குறைந்த தணலில் சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
அதன் பின் மிளகாய் துண்டுகள், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் மற்றும் கடலை பருப்பு போட்டு சிறிது நேரம் வறுக்கவும்.
பிறகு கடலையை சேர்த்து வறுக்கவும்.
எல்லா பருப்பும் பொன்னிறமானதும் கருவேப்பிலையை சேர்க்கவும்.
உடனே புளி கரைசலை விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் தணலை குறைத்து அரிசி மாவு கரைசலை சேர்த்து சாரணியால் விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
கிளறாமல் விட்டால் கட்டி கட்டி ஆகிவிடும். அடியும் பிடித்து விடும்.
சிறிது நேரத்தில் வாணலியில் ஒட்டாமல் வரும் பொது எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி மேலே 1/2 Tsp எண்ணெய் விட்டு ஒரு தேக்கரண்டியால் ஒரே சீராக பரப்பி விடவும்.
சூடாக இருக்கும் போது துண்டுகள் போட முடியாது.
அப்படியே கிண்ணத்தில் எடுத்து தேக்கரண்டி கொண்டுதான் சாப்பிட வேண்டும்.
ஆறிய பின் துண்டுகள் போட்டு கேக் போல சாப்பிடலாம்.
இதன் ருசி மிக மிக அருமையாக இருக்கும். சூடாக இருக்கும் போதே மள மளவென காலியாகி விடும். துண்டுகளாக்க மிச்சம் ஒன்றும் தேறாது!!
மேலும் சில உணவு வகைகள் முயற்சி செய்து பார்க்க :

No comments:
Post a Comment