குலசாமை இனிப்பு ரொட்டி :
#குலசாமை ஆங்கிலத்தில் பிரவுன் டாப் மில்லெட் [ Browntop Millet or sometimes American Millet ] என அழைக்கப்படுகிறது.
அறிவியல் பெயர் : Brachiaria ramosa or Urochloa ramosa
கன்னட பெயர் : Pedda sama or korle
மிகப்பழங்காலத்திலிருந்தே குலசாமை மக்களின் உணவாக இருந்த போதிலும் இடையில் இத்தானியம் உபயோகத்திலிருந்து மறைந்தே போய்விட்டது. தற்போது இத்தானியம் கர்நாடகத்தில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இதைத்தவிர தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் மஹாராஷ்ட்ரா மாநிலங்களில் சிற்சில இடங்களில் பயிரிடப்படுகின்றன. குலசாமை மிகவும் குறைந்த அளவிலே விளைவிக்கப்படுவதால் மற்ற சிறுதானியங்களை விட விலை கூடுதலாகவே இருக்கிறது.
குலசாமை பழுப்பு பச்சையுடன் கூடிய மஞ்சள் நிறம் கொண்டது.
இதன் நார்சத்து மற்ற அனைத்து சிறுதானியங்கள் மற்றும் மற்ற தானியங்களை விட மிக அதிக அளவில் கொண்டுள்ளது. அதிக நார்சத்து உடலின் நச்சுக்களை வெளியேற்ற மிகவும் உதவுகிறது.
அகில இந்திய சிறுதானிய ஆராய்ச்சி கழகத்தின் வலைதளத்தின் படி 100 கி குலசாமையில் அடங்கியுள்ள சத்துக்கள் :
நார்சத்து 12.5 கி, புரதச்சத்து 11.5 கி, தாதுப்பொருட்கள் [ minerals ] 4.21 கி, நியாசின் [ B 3 ] 18.5 mg, இரும்புசத்து 0.65 mg.
எல்லாவகையான சிறுதானியங்களையும் குறைந்தபட்சம் இரண்டு மணிநேரமாவது ஊறவைத்தபின்னர் சமைப்பது நல்லது. அவ்வாறு ஊறவைப்பதால் அத்தானியத்தின் முழுப்பலன்களும் உடலுக்குக் கிடைக்கிறது.
குலசாமையை ஊறவைக்க வேண்டுமாதலால் 2 மணிநேரம் முன்பே திட்டமிட வேண்டும்.
குலசாமை இனிப்பு ரொட்டி செய்முறை இரண்டு பகுதிகளைக் கொண்டது.
1. ஊறவைத்து அரைத்தெடுப்பது
2. ஆவியில் வேகவைத்து எடுப்பது
ஊறவைக்கும் நேரம் 2 மணி நேரம்
தயாரிக்க ஆகும் நேரம் 15 நிமிடங்கள்
ஆவியில் வேக ஆகும் நேரம் 15 - 18 நிமிடங்கள்
| தேவையானவை : | |
|---|---|
| 1/2 கப் + 1 Tbsp | குலசாமை - Browntop millet [ American Millet ] |
| 1/3 கப் | தேங்காய் துருவல் |
| 1/4 கப் | வெல்லம் [ adjust ] |
| 1/4 Tsp | உப்பு |
| 5 - 6 | உலர்ந்த பேரீச்சை [ Raisins ] |
| 5 - 6 | பாதாம் பருப்பு [ optional ] |
| 2 Tsp | சார பருப்பு [ Chironji ] |
| 8 - 10 | உலர்ந்த திராட்சை [ kismis ] |
| 2 - 3 | ஏலக்காய் |
| a small piece | ஜாதிக்காய் |
| 1/4 Tsp | இலவங்கப்பட்டை பொடி [ optional ] |
| 1 Tsp | சோம்பு [ Sounf ] |
| 1 Sachet [ 5 g ] | Eno Fruit salt |
1/2 Tsp நெய் வேகவைக்க பயன்படுத்தப்படும் பாத்திரத்தின் உள்ளே தடவுவதற்காக
செய்முறை :
ஊறவைத்து அரைத்தெடுப்பது :
ஒரு பாத்திரத்தில் 1/2 கப் குலசாமை [ browntop millet ] எடுக்கவும். தண்ணீரில் ஒருமுறை கழுவியபின் 1/2 கப் தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் 1 Tbsp குலசாமை [ browntop millet ] எடுத்து ஒருமுறை கழுவிய பின் 2 Tbsp நீர் விட்டு 1 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். 1 1/2 மணி நேரம் ஊறிய பிறகு குக்கரில் வைத்து ஒரு விசில் வரும்வரை அதிக தீயில் வைத்திருக்கவும். பின்னர் தீயைக் குறைத்து 8 நிமிடங்கள் வேகவிடவும்.
குக்கரின் ஆவி அடங்கியபின் வெந்த குலசாமையை வெளியே எடுத்து வைத்து ஆற விடவும்.
ஒரு கிண்ணத்தில் வெல்லத்தை நசுக்கிப்போட்டு 2 - 3 தேக்கரண்டி தண்ணீர் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும். கரண்டி கொண்டு வெல்லத்தை கரைத்து விடவும். வெல்லம் கரைந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு வடிகட்டி வைக்கவும். சூடு ஆறும் வரை பொறுத்திருக்கவும்.
மிக்சியின் பாத்திரத்தில் ஊறவைத்துள்ள குலசாமை, 2 Tbsp வேகவைத்த குலசாமை, 2 சிட்டிகை உப்பு சேர்த்து வெல்லம் கரைத்த தண்ணீர் விட்டு அரைத்தெடுக்கவும். சிறிது கொர கொரவென இருந்தால் போதும். அரைத்த மாவை ஒரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றவும். 1 - 2 தேக்கரண்டி தண்ணீர் விட்டு மிக்சி பாத்திரத்தில் ஒட்டியிருக்கும் மாவை கழுவி மாவில் ஊற்றவும். இட்லி மாவு பதம் போல இருந்தால் நல்லது. அதை விட சிறிது நீர்க்க இருந்தாலும் பரவாயில்லை.
மாவு தயாரிக்கும் முறை :
உலர்ந்த பேரீச்சம் பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
பாதாம் பருப்பை சிறு சிறு துண்டுகளாக்கவும்.
ஒரு அடிப்பகுதி தட்டையான பாத்திரத்தினுள்ளே நெய் தடவி தனியே வைக்கவும்.
இஞ்சி தட்டிப்போடும் சிறிய உரலில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையைப்போடவும். அதனுடன் ஏலக்காய் மற்றும் ஜாதிக்காய் சேர்த்து அதனுடைய உலக்கையால் இடித்து தூளாக்கவும். அதனை மாவுடன் சேர்க்கவும்.
மாவுடன் தேங்காய் துருவல், உலர்ந்த திராட்சை, உலர்ந்த பேரீச்சம் துண்டுகள், சோம்பு, இலவங்கப்பட்டைத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
மாவு இட்லி மாவு பதத்தில் இருத்தல் நலம்.
மாவை நன்கு கலந்துவிட்ட பின்னர் கடைசியாக Eno Salt ஐ சேர்த்து கலக்கவும். இந்த உப்பை போட்டவுடன் மாவு நன்கு நுரைத்துக்கொண்டு மேலெழும்பி வரும்.
இந்த மாவை நெய் தடவிய பாத்திரத்திற்கு மாற்றவும்.
ஆவியில் வேகவைக்கும் முறை :
இட்லி பாத்திரத்தில் 3 - 4 கப் தண்ணீர் விட்டு அதிக தீயில் சூடாக்கவும்.
அதனுள் ஆவியில் வேகவைக்கும் தட்டை பொருத்தவும்.
மாவின் மீது சார பருப்பு, பாதாம் பருப்பு துண்டுகள் ஆகியவற்றை தூவி விடவும்.
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் மாவு நிரப்பிய பாத்திரத்தை இட்லி பாத்திரத்தினுள் வைத்து மூடி அதிக தீயில் 12 - 15 நிமிடங்கள் வேக விடவும்.
15 நிமிடங்களுக்குப்பிறகு இட்லி பாத்திரத்தை திறந்து வெந்த ரொட்டியினுள் சுத்தமான ஈரமில்லாத கத்தி அல்லது பல் குத்தும் குச்சியினை செருகிப் பின்னர் வெளியே எடுத்துப் பார்க்கவும்.
கத்தியில் அல்லது பல் குத்தும் குச்சியில் மாவு ஒட்டாமல் வந்தால் அடுப்பை அணைத்துவிட்டு ஆவியில் வெந்த குலசாமை ரொட்டியை வெளியே எடுத்து வைக்கவும்.
மாறாக அவற்றில் மாவு ஒட்டிக்கொண்டிருந்தால் இன்னும் 2 - 3 நிமிடங்கள் மேலும் ஆவியில் வேக விடவும்.
ஆவியில் வெந்த ரொட்டியுடன் கூடிய பாத்திரத்தை அடுப்பு மேடை மீது அல்லது சாப்பிடும் மேசை மீது எடுத்து வைத்து ஆற விடவும்.
பத்து நிமிடங்கள் ஆறிய பின்னர் கத்தியால் துண்டுகளாக்கி ருசிக்கவும்.
சுவையான குலசாமை ரொட்டி - Browntop millet sweet bread தயார்.
சிறிது சூடாக இருக்கும் போதும் சுவைக்கலாம்.
நன்கு ஆறிய பின்னரும் சாப்பிடலாம்.
தேங்காய் சேர்த்திருப்பதால் ஒரு நாளுக்குள் சுவைத்திட வேண்டும்.
குறிப்பு : வேகவைத்த குலசாமை [ Browntop millet ] 2 Tbsp மட்டுமே சேர்த்து மாவு அரைக்கவேண்டும். அதற்கு அதிகமாக சேர்த்தால் ரொட்டி மிகவும் பிசுபிசு என ஆகிவிடும்.
|
|
|
||||||
|
|
|
மற்றும் பல சிற்றுண்டி வகைகளுக்கு
டிபன் வகைகள்
சிறுதானிய சமையல் முறைகள்
![குலசாமை இனிப்பு ரொட்டி [Browntop millet sweet bread] குலசாமை இனிப்பு ரொட்டி [Browntop millet sweet bread]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfeOr7-rB2dqr35tVey5Eg8nSEN5ZkY4HsGNyhTgc8IWupq_MHrjRMiwIpZwMcLkpEZZ9CwbRC3EF15iNDbSaKK4dd5JvZ2rs53RqFWzAUy9ZaZr4hjXhla25NbkW7MO7_OS_SrHPUeLQ/w400-h351/1-IMG_20200914_193651.jpg)





![குலசாமை இனிப்பு ரொட்டி [Browntop millet sweet bread] குலசாமை இனிப்பு ரொட்டி [Browntop millet sweet bread]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghwURmsL1NdpzAchmLBX2Mj30zQ7M0yafIH5Xpj9MZ0T49Xl3C0cR49hYlKbCs2EBCpQK3o096884gNXfaNjB6d4dXeiett_aG6luKNqIY5dk0trkR2WEomFQquzsbocMvWDm4EQUQ8b8/w400-h286/1-IMG_20200914_193438.jpg)

![குலசாமை ரொட்டி [ Browntop millet bread ] குலசாமை ரொட்டி [ Browntop millet bread ]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijgplfwzE0A41zyL2UAnwoaDAANoarPP2k2A257Qf8DH4nEu5uhSa67gM64HsB7K7B4zcLIiJrzwu5O-odTEIFxHzcVQJonmx_uuCbdPtiZ2PMuyPqfJWst0e5EIjeaSENI5U09PYncrU/s640/1-IMG_20200328_111409.jpg)
![குலசாமை [browntop millet]முடக்கத்தான் தோசை குலசாமை [ browntop millet ] முடக்கத்தான் தோசை](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEju5C7w__va7vcpIkSGoyAbdZEBUIEKvSEHWNOwx2p_nNHcpTiNXl379SmHPQwRAkpg9DQXeApbkuDrVeLV2aM6UYQeOZjbJ418AYfqCaGBZlx5L803OCrVUmzy6l_Pddho2qZJu8mTGBA/w400-h316/1-IMG_20200921_213013.jpg)
![குலசாமை [ browntop millet ] பொங்கல் குலசாமை [ browntop millet ] பொங்கல்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiM4Tb_PBcxlqPccyP7WnRGcxccPN_Ykcf2jt7ovSXj4FC22Six7NOjVU7iBAcnWdvxL0uT9vqu1BsdY2MtU1urJAGqPGQz-zeJZuLX4xMFqah8oVTYmQGYuYRR0hTX3ihLhxHW94zOdeo/w400-h350/1-IMG_20200929_100526.jpg)






![Tamil : Mudakathan keerai [ Mudakattan ] English : Heartseed vine or Balloon Vine Tamil : Mudakathan keerai [ Mudakattan ] English : Heartseed vine or Balloon Vine](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-dnJygos0XeSQ9jyR6MT8qCVEDd4gxgBgpQAXPj3YmlChYlNMPXj0SI_r5bW507WzsnxyfOauR-LH_BW_B3ds4Nh_WUs2aTuDgz2LPqc9N2f3qbxzEy_tneyUab_9ULFlBNDM0jDdLM8/s640/1-IMG_20200615_082339.jpg)






