Search This Blog

Thursday, November 19, 2020

Vadavath_Thuvaiyal

 வடவத்துவையல் : இதனை வடகம் துவையல் என்றும் அழைப்பதுண்டு. 

வடவத்துவையல் [ Dried Onion Chutney ]

சின்ன வெங்காயம் விலை மலிவாக கிடைக்கும் போது வெங்காய வடவம் [ வெங்காய வடகம் ] செய்து வைப்பது தமிழர்களின் வழக்கம். இந்த வெங்காய வடவம் கூட்டு செய்யும் போது தாளித்து சேர்த்தால் அதன் சுவையே மிக அருமையாக இருக்கும். குழம்பு செய்யும் போது வெங்காய வடவம் தாளித்தால் தனித்துவமான சுவையுடன் இருக்கும்.

வெங்காய வடவம்

வெங்காய வடவத்தை எண்ணெயில் வறுத்து, தேங்காய், புளி, உப்பு மற்றும் வறுத்த சிகப்பு மிளகாயுடன் அம்மியில் அல்லது மிக்சியில் அரைத்தால் அருமையான துவையல் தயார்! 


தேவையானவை :
3 Tspவெங்காய வடவம்
4 - 5 Tspதேங்காய் துருவல்
கோலிகுண்டு அளவு புளி 
2 - 3சிகப்பு மிளகாய் [ adjust ]
1/2 Tspஉப்பு [ Adjust ]
2 Tspநல்லெண்ணெய்

செய்முறை :

ஒரு சிறிய கிண்ணத்தில் வெதுவெதுப்பான தண்ணீரில் புளியை ஊறவைக்கவும்.

அடுப்பின் மீது மிதமான தீயில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் சிகப்பு மிளகாயை போட்டு சிவக்க வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.

அடுத்து வெங்காய வடவத்தை போட்டு நன்கு பொறியும் வரை வறுத்து எடுத்து வைக்கவும்.

வறுத்த வடவமும் மிளகாயும் சூடு ஆறிய பிறகு மற்ற பொருட்களுடன் மிக்சியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்தெடுக்கவும்.

அம்மியில் அரைத்தால் கூடுதல் சுவையுடன் அருமையாக இருக்கும்.

உப்பு சரி பார்த்தபின் பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

வடவத் துவையல் பொங்கலுடன் தொட்டுக்கொண்டு சுவைக்க மிக அற்புதமான சட்னியாகும். 

சூடான சாதத்திலும் வடவத் துவையலை போட்டு  நல்லெண்ணெயுடன்  சேர்த்து பிசைந்து சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும்.

இட்லி மற்றும் தயிர் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிடவும் அருமையான இணையாகும்.




குறிப்பு : வெங்காய வடவத்தில் உப்பு சேர்த்து செய்திருப்பதால் துவையல் அரைக்கும் போது சிறிது குறைத்தே உப்பு சேர்க்கவும்.



மற்ற சட்னி வகைகள் சில
மாங்காய் சட்னி 1
மாங்காய் சட்னி 1
வல்லாரை சட்னி 1
வல்லாரை சட்னி 1
வல்லாரை பருப்பு துவையல்
வல்லாரை பருப்பு...
துரை துவையல்
துரை துவையல்
வல்லாரை தேங்காய் சட்னி
வல்லாரை தேங்காய்..
பிரண்டை துவையல்
பிரண்டை துவையல்


சட்னி வகைகள்

விதவிதமான சிற்றுண்டி வகைகள்




No comments:

Post a Comment