Search This Blog

Saturday, January 11, 2014

Pongal Thuvaiyal

#பொங்கல்துவையல் : பொங்கலை  சிற்றுண்டி சாலைகளில் தேங்காய் சட்னி, சாம்பார் ஆகியவற்றுடன் பரிமாறுவார்கள். வீடுகளில் பெரும்பாலும் தேங்காய் சட்னி பொங்கலுக்கு தொட்டுக்கொள்ள செய்யப்படுவது வழக்கம். ஆனால் நாங்கள் ஒருவிஷேசமான  தேங்காய் துவையலை பொங்கலுக்கு தொட்டுக் கொள்ள செய்வது வழக்கம். எனக்கு தெரிந்து என் பாட்டி காலம் தொட்டு பொங்கல் என்றால் இந்த துவையல்தான் செய்வார்கள். தேவையான பொருட்களை வறுத்து தேங்காயுடன் அம்மியில் பாட்டி அரைக்கும் போதே பக்கத்தில் உட்கார்ந்து அல்வா போல சாப்பிட்டவர்கள் உண்டு. அவ்வளவு அருமையான துவையல் இது.
என்னுடைய அம்மாவும் பொங்கல் என்றால் இந்த துவையல் தவிர வேறு எதுவும் செய்ய மாட்டார்கள். நான் பொங்கலுக்கு வெவ்வேறு துவையல்கள் செய்தாலும் இந்த விஷேச துவையலுடன் சாப்பிடும் போதுதான் திருப்தியாக இருக்கும். என்னுடைய மகளும் இந்த துவையலின் ருசிக்காகவே காலை உணவிற்கு பொங்கல் செய்ய சொல்வாள்.
எங்கள் வீட்டிற்கு வந்து பொங்கலுடன் இந்த துவையலை சேர்த்து யார் சாப்பிட்டாலும் எப்படி செய்வது என்று கேட்டு அன்று முதல் அவர்கள் வீட்டில் பொங்கலுக்கு தொட்டுக் கொள்ளும் சட்னி இந்த பொங்கல் துவையலாகத்தான் இருக்கும்.

பொங்கல் துவையல்

உங்களனைவரையும் மேலும் மேலும் இதன் மகிமையை பற்றி கூறி பொறுமை இழக்க வைக்காமல் இனி எப்படி செய்வது என பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :
1 Tsp                                          கடுகு
2                                                 சிகப்பு மிளகாய்
2 Tsp                                           உளுத்தம் பருப்பு
1 கோலி  குண்டு அளவு   புளி
1 சிறிய துண்டு                    பெருங்காயம்
1/3 கப்                                       தேங்காய் துருவல்
1/2 Tsp                                        உப்பு

 செய்முறை :
முதலில் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சூடாக்கி  கடுகு, சிகப்பு மிளகாய் மற்றும் பெருங்காயம் சேர்க்கவும். கடுகு எல்லாம் வெடித்ததும் எடுத்து தனியே வைக்கவும். கடுகு வெடிக்கும் நேரத்தில் சிகப்பு மிளகாயும் நன்கு வரு பட்டுவிடும்.
பின் உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.


மிக்சியில் மற்ற பொருட்களுடன் வறுத்த  பொருட்களையும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

பொதுவாக துவையல் என்றாலே தாளித்து கொட்டுவதில்லை.
அதே போல இதற்கு தாளிக்க தேவையில்லை.

சூடான பொங்கலை ஒரு தட்டில் எடுத்து நெய் விட்டு இந்த துவையலை தொட்டு சாப்பிட்டால்..... ம்ம்.... அதன் சுவையே தனிதான். மீண்டும் ஒரு கரண்டி பொங்கல் கட்டாயம் கேட்பீர்கள். துவையலும்தன்!!...

குறிப்பு :
கறுப்புத் தோலுடன் கூடிய உளுத்தம் பருப்பை கொண்டு இந்த துவையல் செய்தால் மிகுந்த சுவையுடன் இருக்கும்.

தேங்காய் கிடைக்காத இடத்தில் இருப்பவர்கள் தேங்காய் பவுடர் உபயோக படுத்தலாம். அரைக்கும் பொது சிறிது வெதுவெதுப்பான தண்ணீர் விட்டு அரைத்தால் நன்றாக இருக்கும்.




மேலும் சில சட்னி வகைகளின் சமையல் குறிப்புகள்
தேங்காய் சட்னி தேங்காய் சட்னி  சிகப்பு மிளகாயுடன் நெல்லிக்காய் சட்னி

No comments:

Post a Comment