Search This Blog

Tuesday, September 16, 2014

Manathakkali Keerai Rice

#மணத்தக்காளிகீரைசாதம் : வாய்புண் மற்றும் வயிற்றுப்புண் ஆகியவற்றிற்கு #மணத்தக்காளிகீரை மற்ற எல்லா மருந்துகளை விட விரைவில் குணப்படுத்தவல்லது.
ஐந்தாறு மணதக்காளி கீரையையும் நல்லெண்ணையும்  வாயில் போட்டு மென்று முழுங்கி வந்தால் புண்கள் இரண்டு நாட்களில் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
இந்த கீரை சிறிது கசப்பு தன்மை உடையது.
இக்கீரையில் வைட்டமின் A , B , C ஆகியவையும் தாது பொருட்களான இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் ஆகியவையும் நிறைந்துள்ளது.
இக்கீரையை தேங்காய் பாலுடன் சாப்பிட்டால் புண்களை ஆற்றும் திறன் அதிகமாகிறது.
தேங்காய் பாலிலும் மிக முக்கியமான வைட்டமின்களும்  தாதுக்களும் நிறைந்துள்ளன. ஆனால் கொழுப்பு சத்து அதிகமாக உள்ளது.
அதனால் வாரத்திற்கு ஒருமுறை ஏதாவது உணவுடன் சிறிது தேங்காய் பால் சேர்த்துக்கொள்வது நல்லது.
இங்கு மணத்தக்காளிகீரையுடன் தேங்காய் பால் சேர்த்து ஒரு சுவையான சாதம் செய்வது எப்படி என காண்போம்.

மணத்தக்காளிகீரை சாதம்


தேவையான பொருட்கள் :

மணத்தக்காளி கீரை

1/2 cup                               பச்சரிசி
1 Tbsp                                காரட் துண்டுகள்
2 Tbsp                                குடைமிளகாய் துண்டுகள்
1                                        வெங்காயம், நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்
3 or 4 பற்கள்                  பூண்டு, பொடியாக நறுக்கவும்.
1 or 2                                பச்சை மிளகாய், இரண்டாக கீறிக்கொள்ளவும்
1 கப்                                மணத்தக்காளிகீரை [ black nightshade leaves ]
1/4  கப்                             மணத்தக்காளி[ black nightshade ]
1/2 cup                              தேங்காய் பால்
1 Tsp                                 உப்பு [ adjust ]

தாளிக்க :
1 Tsp                                சீரகம்
1/2 Tsp                             கருஞ்சீரகம்
3 Tsp                                நல்லெண்ணெய் [ till / sesame oil ]


செய்முறை :
அரிசியை ஒரு முறை களைந்து கழுவிய பின்னர் தண்ணீரில் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பின் மீது வைத்து சூடாக்கவும்.
சீரகம் மற்றும் கருஞ்சீரகத்தை வெடிக்க விட்ட பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து சில மணித்துளிகள் வதக்கவும்.
அடுத்து பூண்டு சேர்த்து வதக்கிய பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது வதங்கியவுடன் காரட் சேர்த்து வதக்கவும்.
ஊறுகின்ற அரிசியிலிருந்து தண்ணீரை வடித்து விடவும். அடுப்பின் தீயை பெரியதாக்கிய பின்னர் அரிசியை சேர்க்கவும்.
30 வினாடிகள் கிளறிக்கொண்டே இருக்கவும்.
பின்னர் தீயை குறைத்து கிளறவும்.
அரிசி நன்கு வெள்ளையாக நிறம் மாறியதும் மணத்தக்காளி விதைகளை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி விட்டபின் எல்லாவற்றையும் குக்கருக்கு மாற்றவும்.


தேங்காய் பால் 1/2 கப், தண்ணீர் 1/2 கப், கீரை, உப்பு சேர்க்கவும் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.

தேங்காய் பால்

மூடி போட்டு வெயிட் வைத்து அதிக தீயில் 3 விசில்கள் வரும் வரை வேக விடவும்.
தேங்காய் பால் 1/2 கப், தண்ணீர் 1/2 கப், கீரை, உப்பு சேர்க்கவும்

பின்னர் தீயை குறைத்து 3 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக விட்ட பின் அடுப்பை அணைத்து விடவும்.
ஆவி அடங்கிய பின்னரே திறக்க வேண்டும்.


ஆவி அடங்குவதற்குள் முன்பு தாளித்த அதே வாணலியில் 1/2 Tsp என்னை விட்டு சூடேறியதும் குடை மிளகாய் துண்டுகளை நன்கு வதக்கி எடுத்து வைக்கவும்.
குடை மிளகாய் துண்டுகளை வதக்கவும்

ஆவி அடங்கியபின்னர் குக்கரை திறந்து வதக்கிய குடைமிளகாயை சேர்த்து கிளறவும்.

ஆவி அடங்கியபின்னர் குக்கரை திறக்கவும் வதக்கிய குடைமிளகாயை சேர்த்து கிளறவும்.

சூடாக இருக்கும் போதே தயிர்பச்சடியுடன் அல்லது விருப்பமான குருமாவுடன் சுவைக்கவும்.

மணத்தக்காளிகீரை சாதம்









மேலும் சில சாத வகைகள் செய்து சுவைக்க

கருவேப்பிலை சாதம் சாமை பிசிபேளே பாத் முருங்கைக்கீரை சாதம் நெல்லிக்காய் சாதம் தேங்காய் பால் காய்கறி புலாவ்



No comments:

Post a Comment