Search This Blog

Showing posts with label கொள்ளு. Show all posts
Showing posts with label கொள்ளு. Show all posts

Tuesday, June 10, 2014

Kollu Rasam

#கொள்ளு #ரசம் : ஆங்கிலத்தில் கொள்ளு  Horse gram என அழைக்கப்படுகிறது. உடலில் சேரும் கொழுப்பை குறைக்க கொள்ளு உதவுகிறது.
சோயாவில் உள்ள புரதத்திற்கு இணையான புரதம் கொள்ளுவில் நிறைந்துள்ளது. மேலும் இதன் மூலம் கிடைக்கும் புரதம் அசைவ உணவிலிருந்து கிடைக்கும் புரதத்திற்கு இணையானது.
இருமல் மற்றும் சளி காய்ச்சல் போன்றவற்றிற்கும் அருமருந்தாக கொள்ளு விளங்குகிறது.
வாரத்தில் ஓரிரு முறை எடுத்துக் கொள்வது நல்லது.



தேவையான பொருட்கள் :
3 Tbsp                                கொள்ளு
1 Tsp                                   மிளகு
1/2 Tsp                                சீரகம்
1/4 Tsp                                மல்லி விதை
4 பற்கள்                            பூண்டு
1/4 inch                                 இஞ்சி துண்டு
2 or 3                                   சிகப்பு மிளகாய்
12                                        கறுவேப்பிலை
1                                          தக்காளி, 8 துண்டுகளாக்கவும்
2 pinches                              மஞ்சத்தூள்
2 or 3 Tsp                            எலுமிச்சை சாறு
1 1/2 Tsp                             உப்பு
கொத்தமல்லி தழை கடைசியில் சேர்க்க


தாளிக்க :
1/2 Tsp                              கடுகு
6                                        கருவேப்பிலை

ஒரு கப் ரசம் செய்ய தேவையான அளவு கொடுக்கப்பட்டுள்ளது.

செய்முறை :
முதல் நாள் இரவே கொள்ளை கழுவிய பின்னர் ஒரு பாத்திரத்தில் ஊறவைக்கவும்.
மறுநாள் ஊறிய தண்ணீரை ரசம் வைக்கப்போகும் பாத்திரத்தில் வடித்து தனியே வைக்கவும்.
குக்கரில் கொள்ளை போட்டு 1/2  தண்ணீர் விட்டு 1/4 Tsp உப்பு சேர்த்து மூடி வெயிட் வைத்து அடுப்பில் அதிக தீயில் சூடாக்கவும்.
ஒரு விசில் வந்ததும் தீயை குறைத்து 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
ஆவி அடங்கிய பின் திறந்து வேகவைத்த தண்ணீரையும் ஊறவைத்த தண்ணீருடன் சேர்த்து விடவும்.
மிக்ஸியில் வேகவைத்த கொள்ளு, மிளகு, சீரகம், மல்லி, பூண்டு, இஞ்சி, மிளகாய் மற்றும் 5 கறுவேப்பிலை ஆகியவற்றை தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்து பாத்திரத்தில் சேர்க்கவும்.
மிக்ஸியையும் சிறிது தண்ணீர் விட்டு கழுவி அதையும் சேர்க்கவும்.
உப்பு, மஞ்சத்தூள் மற்றும் தக்காளி,சேர்த்து கொதிக்க விடவும்.


காரம் அதிகமாக இருக்கவேண்டும் என விரும்புவர்கள் ஒரு பச்சை மிளகாயையும் கீறி சேர்க்கலாம்.
கொதித்து நுரை பொங்கி மேலே வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.


அடுப்பை அணைத்த பின்னர் எலுமிச்சை சாறை சேர்க்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகை வெடிக்க விட்டபின்னர் கருவேப்பிலையை வறுத்து ரசத்தின் மேல் சேர்க்கவும்.
பரிமாறும் முன் கொத்தமல்லி தழை சேர்க்கவும்.


சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம்.
அப்படியே சூப் போன்றும் பருகலாம்.



இதையும் செய்து பார்க்கலாமே

கொள்ளு சுண்டல் 




Saturday, May 10, 2014

Kollu Sundal

#கொள்ளுசுண்டல் : ஆங்கிலத்தில் Horse Gram  என அழைக்கப்படுகிறது. குதிரை வெகு தூரம் ஓட கால்களில் வலிமை தேவை. எலும்புகளும் உறுதியாக இருக்க வேண்டும். அதற்காகவே குதிரைக்கு #கொள்ளு உணவாக கொடுக்கப்படுகிறது. அப்படி பார்க்கும் போது கொள்ளு உடல் வலிமைக்கும் எலும்புகளின் வலிமைக்கும் மிக மிக அத்தியாவசியமானது.
இது உடலின் கொழுப்பை குறைப்பதற்கும் பயன் படுகிறது.
மேலும் அறிய கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை அழுத்தவும்.
கொள்ளு உண்பதின் பயன்கள்

இங்கு முளை கட்டிய கொள்ளு உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. முளை கட்டுவதனால் தானியத்தின் அல்லது பருப்பின் புரத சத்தும் மற்ற விட்டமின்களும் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உடலில் இலகுவாக உறிஞ்சப்படுகிறது.
கொள்ளை கழுவி எட்டு முதல் பத்து மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் ஒரு மூடி போட்டு மறுபடியும் 8 முதல் 10 மணி நேரம் வைத்திருக்கவும்.
முளை வந்த பிறகு குளிர் சாதன பெட்டியில் பத்திர படுத்தலாம்.

முளை கட்டிய கொள்ளு

ஒரு நாளைக்கு ஒரு முறை வெளியில் எடுத்து சுத்தமான தண்ணீரால் கழுவி விட்டு மறுபடியும் பத்திர படுத்தவும்.
இவ்வாறு செய்வதால் பருப்பிலிருந்து துர் நாற்றம் வராமல் இருக்கும்.
மூன்று முதல் நான்கு நாட்களுக்கு குளிர் சாதன பெட்டியில் வைத்து பயன் படுத்தலாம்.

இப்போது சுண்டல் செய்வது எப்படி என பார்ப்போம்.

முளை கட்டிய கொள்ளு சுண்டல்

தேவையான பொருட்கள் :
1/2 கப்                                        கொள்ளு முளை கட்டியது
1/2 Tsp                                         உப்பு
1/4 Tsp                                         பெருங்காய தூள்
1/2 Tsp                                         கடுகு
1 Tsp                                            உளுத்தம் பருப்பு
1 அ 2                                          சிகப்பு மிளகாய்
1/4 Tsp                                         மிளகாய் தூள் [தேவையானால் ]
6                                                  கறுவேப்பிலை
2 Tsp                                           தேங்காய் துருவல்
1/2 Tsp                                        எண்ணெய்
சிறிது கொத்தமல்லி மற்றும் வெங்காயம் அலங்கரிக்க.

செய்முறை :
கொள்ளு வேக சிறிது அதிக நேரம் தேவை. குக்கரில் வேக வைப்பது அவசியம்.
குக்கரில் கொள்ளு சேர்த்து 1/2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து மூடி வெயிட் பொருத்தவும்.
அதிக தீயில் ஒரு  வந்ததும் தீயை குறைத்து விடவும்.
இவ்வாறு குறைந்த தீயில் 10 நிமிடங்கள் வேக விடவும்.
ஆவி அடங்கிய பின்னர் எடுத்து வேறு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

வேக வைத்த தண்ணீரை கீழே கொட்டி விட வேண்டாம். ரசம் செய்ய பயன் படுத்தலாம்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கவும்.
எண்ணெய் விட்டு கடுகை வெடிக்க விடவும்.
பின்னர் மிளகாயை கிள்ளி சேர்க்கவும்.
அதன் பின்னர் உளுத்தம் பருப்பை சேர்த்து சிவக்க வறுக்கவும்.
சிவந்த பின்னர் கறுவேப்பிலை, பெருங்காயம்  சேர்த்து பிறகு வேகவைத்த கொள்ளை சேர்க்கவும்.

நன்கு கலந்து விடவும்.
காரம் தேவை என்றால் மிளகாய் பொடியை சேர்த்து கிளறவும்.
தண்ணீர் சுண்டும் வரை அதிக தீயில் அடியில் தீ பிடிக்காமல் கிளறி தேங்காய் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைத்து வெங்காய துண்டுகளை தூவி அலங்கரிக்கவும்.

முளை கட்டிய கொள்ளு சுண்டல்

மாலை நேர சிற்றுண்டிக்கு மிக அருமையான சுண்டல்.
மதிய உணவின் போதும் சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.




மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

பயறு சுண்டல்
பயறு 
சுண்டல்
கொண்டக்கடலை சுண்டல்
கொண்டக்கடலை சுண்டல் 
கொள்ளு ரசம்
கொள்ளு 
ரசம்
 சேப்பங்கிழங்கு மசாலா கறி
சேப்பங்கிழங்கு மசாலா கறி
பலாமுசு மசாலா கறி
பலாமுசு
மசாலா கறி