#கொள்ளுசுண்டல் : ஆங்கிலத்தில் Horse Gram என அழைக்கப்படுகிறது. குதிரை வெகு தூரம் ஓட கால்களில் வலிமை தேவை. எலும்புகளும் உறுதியாக இருக்க வேண்டும். அதற்காகவே குதிரைக்கு #கொள்ளு உணவாக கொடுக்கப்படுகிறது. அப்படி பார்க்கும் போது கொள்ளு உடல் வலிமைக்கும் எலும்புகளின் வலிமைக்கும் மிக மிக அத்தியாவசியமானது.
இது உடலின் கொழுப்பை குறைப்பதற்கும் பயன் படுகிறது.
மேலும் அறிய கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை அழுத்தவும்.
கொள்ளு உண்பதின் பயன்கள்
இங்கு முளை கட்டிய கொள்ளு உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. முளை கட்டுவதனால் தானியத்தின் அல்லது பருப்பின் புரத சத்தும் மற்ற விட்டமின்களும் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உடலில் இலகுவாக உறிஞ்சப்படுகிறது.
கொள்ளை கழுவி எட்டு முதல் பத்து மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் ஒரு மூடி போட்டு மறுபடியும் 8 முதல் 10 மணி நேரம் வைத்திருக்கவும்.
முளை வந்த பிறகு குளிர் சாதன பெட்டியில் பத்திர படுத்தலாம்.
ஒரு நாளைக்கு ஒரு முறை வெளியில் எடுத்து சுத்தமான தண்ணீரால் கழுவி விட்டு மறுபடியும் பத்திர படுத்தவும்.
இவ்வாறு செய்வதால் பருப்பிலிருந்து துர் நாற்றம் வராமல் இருக்கும்.
மூன்று முதல் நான்கு நாட்களுக்கு குளிர் சாதன பெட்டியில் வைத்து பயன் படுத்தலாம்.
இப்போது சுண்டல் செய்வது எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
1/2 கப் கொள்ளு முளை கட்டியது
1/2 Tsp உப்பு
1/4 Tsp பெருங்காய தூள்
1/2 Tsp கடுகு
1 Tsp உளுத்தம் பருப்பு
1 அ 2 சிகப்பு மிளகாய்
1/4 Tsp மிளகாய் தூள் [தேவையானால் ]
6 கறுவேப்பிலை
2 Tsp தேங்காய் துருவல்
1/2 Tsp எண்ணெய்
சிறிது கொத்தமல்லி மற்றும் வெங்காயம் அலங்கரிக்க.
செய்முறை :
கொள்ளு வேக சிறிது அதிக நேரம் தேவை. குக்கரில் வேக வைப்பது அவசியம்.
குக்கரில் கொள்ளு சேர்த்து 1/2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து மூடி வெயிட் பொருத்தவும்.
அதிக தீயில் ஒரு வந்ததும் தீயை குறைத்து விடவும்.
இவ்வாறு குறைந்த தீயில் 10 நிமிடங்கள் வேக விடவும்.
ஆவி அடங்கிய பின்னர் எடுத்து வேறு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
வேக வைத்த தண்ணீரை கீழே கொட்டி விட வேண்டாம். ரசம் செய்ய பயன் படுத்தலாம்.
அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கவும்.
எண்ணெய் விட்டு கடுகை வெடிக்க விடவும்.
பின்னர் மிளகாயை கிள்ளி சேர்க்கவும்.
அதன் பின்னர் உளுத்தம் பருப்பை சேர்த்து சிவக்க வறுக்கவும்.
சிவந்த பின்னர் கறுவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து பிறகு வேகவைத்த கொள்ளை சேர்க்கவும்.
நன்கு கலந்து விடவும்.
காரம் தேவை என்றால் மிளகாய் பொடியை சேர்த்து கிளறவும்.
தண்ணீர் சுண்டும் வரை அதிக தீயில் அடியில் தீ பிடிக்காமல் கிளறி தேங்காய் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைத்து வெங்காய துண்டுகளை தூவி அலங்கரிக்கவும்.
மாலை நேர சிற்றுண்டிக்கு மிக அருமையான சுண்டல்.
மதிய உணவின் போதும் சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

|
|
|
|
|
No comments:
Post a Comment