Search This Blog

Showing posts with label கோதுமை தோசை. Show all posts
Showing posts with label கோதுமை தோசை. Show all posts

Friday, June 13, 2014

Wheat Dosai

#கோதுமைதோசை : கேழ்வரகு, ரவா ஆகியவற்றை கொண்டு தோசை செய்வதெப்படி என பார்த்தோம்.
இங்கு கோதுமை மாவு உபயோகித்து தோசை செய்யும் முறையை பார்ப்போம்.

கோதுமை தோசை


தேவையான பொருட்கள் :
1/2 cup                            ஆப்பம் மாவு 
3/4 cup                            கோதுமை மாவு [ multi grain கோதுமை மாவும் உபயோகிக்கலாம் ]
1 Tbsp                             ரவா
1/2 Tsp                            உப்பு

மாவுடன் சேர்க்க வேண்டிய பொருட்கள் :
1/4 cup                            பாலக் கீரை  [ optional ]
1 small size                      வெங்காயம், பொடியாக நறுக்கவும்
10                                  கறுவேப்பிலை, பொடியாக நறுக்கவும்
1/2 Tsp                           சீரகம்
1/4 Tsp                           மிளகு துருவியது
1                                    பச்சை மிளகாய் ( விருப்பப்பட்டால் )

தோசை சுட தேவையான அளவு.

செய்முறை :
மாவு அனைத்தையும் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கலக்கவும்.
மாவு நீர்க்க இருக்க வேண்டும்.
கருவேப்பிலையை  பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
சீரகம், மிளகுத்தூள்  மற்றும் அறிந்து வைத்துள்ள வெங்காயத்தையும் கீரையையும்  சேர்த்து கலக்கவும்.


காரமாக வேண்டுமெனில் பச்சை மிளகாயை பொடியாக வெட்டி அதையும் சேர்க்கவும்.

இந்த மாவை ஒரு அரை மணி நேரம் ஊற விடவும்.

அடுப்பில் தோசை கல் வைத்து மிதமான தீயில் சூடு பண்ணவும்.
சூடு ஏறியதும் 1/4 தேக்கரண்டி எண்ணெய் பரப்பி விடவும்.
தோசை மாவை கரண்டியினால் முதலில் கல்லின் ஓரத்தில் ஒரு வட்டமாக  ஊற்ற ஆரம்பித்து மத்தியில் வந்து சேருமாறு முடிக்க வேணடும் .



அதாவது ஒரு பெரிய வட்டம் போட்டு அதை நிரப்ப வேண்டும்.
இதுவே இந்த  தோசை ஊற்றும் முறையாகும்.

தோசை மெல்லியதாக இருக்க வேண்டும்.
இங்கொன்றும் அங்கொன்றுமாக எண்ணெய் சொட்டு சொட்டாக தோசை மேல் விட்டு ஓரங்கள் சிவக்கும் வரை காத்திருக்கவும்.
பிறகு தோசை திருப்பியினால் திருப்பி வேக விடவும்.


பொன்னிறமாக வந்தவுடன் தட்டில் எடுக்கவும்.

கோதுமை தோசை

சட்னி யுடள் பரிமாறவும்.

கோதுமை தோசை

குறிப்பு :

  • ஆப்பம் மாவுக்கு பதில் இட்லி அல்லது தோசை மாவு உபயோகப்படுத்தலா.
  • அல்லது மாவுக்கு பதில் 1/4 கப் தயிரும் 1/4 கப் அரிசி மாவும் சேர்த்து மாவு தயாரிக்கலாம்.
  • ஆப்பம் மாவு வெந்தயம் கலந்து செய்யப்பட்டதால், உடலுக்கு நல்லது என்பதனால் இங்கு இந்த தோசை செய்ய உபயோகப்படுத்தி உள்ளேன். 
  • காரட் துருவி சேர்த்தும் தோசை தயாரிக்கலாம்.
  • அவ்வப்போது தண்ணீர் சேர்த்து மாவை நீர்க்க இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.






மேலும் சில சமையல் குறிப்புகள் 
முயற்சி செய்து பார்க்க :

ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை
நீர்தோசை
நீர்தோசை
முடக்கத்தான் தோசை
முடக்கத்தான் தோசை
குதிரைவாலி நீர் தோசை
குதிரைவாலிநீர்தோசை
ரவா தோசை
ரவா தோசை