Search This Blog

Showing posts with label பீட்ரூட் பொரியல். Show all posts
Showing posts with label பீட்ரூட் பொரியல். Show all posts

Tuesday, December 24, 2013

Beetroot Thuvatal

பீட்ரூட் பொரியலை  சாதாரணமாக காரட் துருவியில் பீட்ரூட்டை துருவி பின் பொரியலில் உபயோகப் படுத்துவோம். ஆனால் இங்கு பீட்ரூட்டை முதலில் வேக வைத்து பின் துருவியொ அல்லது  சின்ன சின்ன துண்டுகளாக வெட்டியோ பொரியல் செய்ய உபயோகப்  படுத்தப் படுகிறது. இவ்வாறு செய்யும் போது சுவை சிறிது மாறுபடுகிறது. ஆனால் நன்றாக இருக்கும். இனி  எப்படி செய்வது என பார்க்கலாம்.

பீட்ரூட் பொரியல்

தேவையான பொருட்கள் :
1                                             பீட்ரூட் ( நடுத்தர அளவு )
1                                             பெரிய வெங்காயம் ( சிறியது )
1                                             பச்சை மிளகாய்
1/2 Tsp                                   சாம்பார் மிளகாய் தூள்
1/2 Tsp                                   கடுகு
1 Tsp                                      உளுத்தம் பருப்பு
1 Tsp                                      எண்ணெய்
2 Tsp                                      தேங்காய் துருவல்
கொத்தமல்லி தழை அலங்கரிக்க

செய்முறை :
 குக்கரை எடுத்து 1 கப் தண்ணீர் சேர்க்கவும்.
பீட்ரூட்டை நன்றாக மண் போக கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

பீட்ரூட் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து மூன்று விசில் வரும்வரை வேக வைக்கவும்.


வெந்த பீட்ரூட்டை வெளியில் எடுத்து தோலை நீக்கவும்.


சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.


வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விட்டு பின் உளுத்தம் பருப்பை சேர்க்கவும்.

பருப்பு சிவந்தவுடன் பச்சை மிளகாயை நீள  வாக்கில் அரிந்து சேர்க்கவும்.
இலேசாக வதக்கிய பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பள பளப்பாக வதங்கியவுடன் சாம்பார் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி அறிந்து வைத்துள்ள பீட்ரூட்டை சேர்க்கவும்.

ஏற்கனவே பீட்ரூட்டை வேக வைத்துவிட்டதால் அதிக நேரம் அடுப்பில் கிளறிக்கொண்டிருக்க வேண்டாம்.
தேங்காய் துருவலை சேர்த்து சில வினாடிகள் கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தழையினால் அலங்கரிக்கவும்.

சாம்பார் சாதம் மற்றும் ரசம் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.




மேலும் பீட்ரூட்டைக்  கொண்டு  தயாரிக்க :

காரட் பீட்ரூட் பொரியல் 
பீட்ரூட் பொரியல் 





Tuesday, November 26, 2013

Beetroot Stir Fry

பீட்ரூட் பொரியல் : பல பேருக்கு இதன் நிறத்தினாலும் இனிப்பு சுவையாலும் பீட்ரூட் பொரியல் பிடிப்பதில்லை. ஆனால் காரத்தை சிறிது அதிகப்படுத்தி செய்தால் சுவையாக இருக்கும். பீட்ரூட் மிக்க சத்து நிறைத்தது. மேலும் பொட்டாசியம் , மக்னீசியம் , பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் நிரம்பியது. பீட்டா கரோடின் அதிக அளவு கொண்டது. அதனால் உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்வது நன்று.

பீட்ரூட் பொரியல்

இதுவும் முன்பே தந்துள்ள காரட் பீட்ரூட் பொரியல் போலவே செய்ய வேண்டும். எந்த பொருளை பீட்ரூடினுடன் சேர்த்தாலும் சிகப்பு நிறமாக  மாறி விடுவதால் பச்சை மிளகாய் அல்லது சிகப்பு மிளகாய்க்கு பதிலாக சாம்பார் பொடியை சேர்ப்பது நல்லது.

தேவையான பொருட்கள் :
பீட்ரூட் துருவியது                                   : 1 கப்
வெங்காயம் அறிந்தது                             : 3 Tsp


சாம்பார் பொடி                                            : 1 Tsp
உப்பு                                                                 : 1/2 Tsp
கொத்தமல்லி தழை சிறிது.

தாளிக்க :
கடுகு                                                          : 1/2 Tsp
உளுத்தம் பருப்பு                                   : 1 Tsp
எண்ணெய்                                               : 1/2 Tsp

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.
எண்ணெய சூடானதும் கடுகு வெடிக்க விடவும்.
பின்னேர் உளுத்தம் பருப்பை சிவக்க வறுக்கவும்.
இப்போது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது நிறம் மாறியதுமே பீட்ரூட் துருவலை சேர்க்கவும்.
உப்பையும் சேர்த்து நன்கு கிளறி பீட்ரூட் வேகும் வரை மூடி வைக்கவும்.
வெந்தவுடன் ஒரு கிண்ணத்தில் எடுத்து கொத்தமல்லி தழையினால் அலங்கரிக்கவும்.

பீட்ரூட் பொரியல்

மதிய உணவில் ரசம் சாதம் மற்றும் சாம்பார் சாதத்திற்கு நன்றாக இருக்கும்.