Search This Blog

Showing posts with label beet root. Show all posts
Showing posts with label beet root. Show all posts

Monday, January 23, 2017

Beetroot-Vazhaithandu-Aval-Upma

#பீட்ரூட்வாழைத்தண்டுஅவல்உப்புமா : நெல்லை ஊறவைத்து சூடான வாணலியில் வறுத்தெடுத்து உடனே கல்லில் போட்டு உலக்கையால் தட்டி எடுத்து உமி நீக்கினால் #அவல் தயார். இப்போது அவல் தயாரிக்க மின்சாரத்தில் இயங்கும் உலக்கை இயந்திரம் வந்து விட்டது. அதனால் அவல் மெல்லியதாகவும் கெட்டியாகவும் கிடைக்கிறது. மெல்லியதாக இருக்கும் அவல் பால் ஊற்றி அல்லது வெள்ளம் தேங்காயுடன் கலந்து சாப்பிட அருமையாய் இருக்கும். கெட்டி அவல் உப்புமா செய்ய நன்றாக இருக்கும்.
முன்பே பல காய்கறிகளை சேர்த்து அவல் உப்புமா செய்முறையை பார்த்திருக்கிறோம். இப்போது பீட்ரூட் மற்றும் வாழைத்தண்டு சேர்த்து #உப்புமா செய்யும் விதத்தை காண்போம்.



தேவையானவை :
1 கப்கெட்டி அவல்
வெங்காயம், பொடியாக நறுக்கவும்
1/4 கப்பீட்ரூட்  துருவியது
1 Tbspபச்சை பட்டாணி வேக வைத்தது
1/4 கப்வாழைத்தண்டு மெல்லியதாக அரிந்தது
1 or 2பச்சை மிளகாய்
2 pinchமஞ்சத்தூள்
1/4 Tspசீரகத்தூள்
1/4 Tspமிளகாய்த்தூள் [ அட்ஜஸ்ட் ]
1/2 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
1/2 Tspஎலுமிச்சை சாறு [ அட்ஜஸ்ட் ]
தாளிக்க :
1/2 Tspகடுகு
1 Tspஉளுத்தம் பருப்பு
2 Tbspநிலக்கடலை
1/4 Tspபெருங்காயத்தூள்
2 Tspநல்லெண்ணெய்
அலங்கரிக்க :
1 Tbspகேரட் துருவியது
1 Tbspகொத்தமல்லி தழை

செய்முறை :
ஒரு அகன்ற பாத்திரத்தில் கெட்டி அவலை எடுத்துக்கொள்ளவும்.
தண்ணீர் விட்டு ஓரிரு முறை கழுவவும்.
அதில் 1/2 Tsp உப்பு தூவி 1/4 கப் தண்ணீர் விட்டு கலந்து வைக்கவும்.
அடுத்து அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடேற்றவும்.
எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு வெடிக்க விடவும்.
கடுகு வெடித்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் நிலக்கடலை சேர்த்து வறுக்கவும்.
வறுபட்டதும் பெருங்காயத்தூள் சேர்த்து கருவேப்பிலை கிள்ளி போட்டு கீறி வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து 1/2 நிமிடம் வதக்கவும்.
இப்போது நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கி வெளிர் நிறமாக மாறியதும் பீட்ரூட், வாழைத்தண்டு மற்றும் பட்டாணியை சேர்த்து வதக்கவும்.
தேவையான உப்பு மற்றும் 2 சிட்டிகை மஞ்சத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து விடவும்.
தட்டு போட்டு மூடி 2 நிமிடங்கள் வேக விடவும்.
இரண்டு நிமிடங்களுக்கு பிறகு உப்பு போட்டு பிசறி வைத்துள்ள அவலை சேர்த்து மிதமான தீயில் நன்கு கிளறி விடவும்.
உப்பு சரி பார்த்து தேவையெனில் உப்பு சேர்க்கவும்.
1/2 Tsp எலுமிச்சை சாறு [ விருப்பப்பட்டால் ] சேர்த்து நன்கு கலந்து விடவும்.
வாணலியை மூடி போட்டு மூடி வைக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டிலேயே மூன்று நிமிடங்கள் மூடி வைக்கவும்.
பின்னர் திறந்தாள் சூடான சுவையான பீட்ரூட் வாழைத்தண்டு அவல் உப்புமா தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.
விரும்பினால் தேங்காய் சட்னியுடன் சுவைக்கலாம்.
தக்காளி சாஸ் தொட்டுக்கொண்டும் சுவைக்கலாம்.
குறிப்பு : அவலின் தன்மைக்கு [ கெட்டித் தன்மை ] ஏற்ப உப்பு சேர்த்து பிசறி வைக்க தண்ணீரின் அளவை கூட்டி குறைத்துக்கொள்ளவும்.






மேலும் சில சுவை மிகுந்த உணவுக் குறிப்புகள்

Aval kesari Aval upma Lemon Aval
Aval sakkarai pongal Puli sundal

பல வகையான சமையல் செய்முறைகள்


Tuesday, December 24, 2013

Beetroot Thuvatal

பீட்ரூட் பொரியலை  சாதாரணமாக காரட் துருவியில் பீட்ரூட்டை துருவி பின் பொரியலில் உபயோகப் படுத்துவோம். ஆனால் இங்கு பீட்ரூட்டை முதலில் வேக வைத்து பின் துருவியொ அல்லது  சின்ன சின்ன துண்டுகளாக வெட்டியோ பொரியல் செய்ய உபயோகப்  படுத்தப் படுகிறது. இவ்வாறு செய்யும் போது சுவை சிறிது மாறுபடுகிறது. ஆனால் நன்றாக இருக்கும். இனி  எப்படி செய்வது என பார்க்கலாம்.

பீட்ரூட் பொரியல்

தேவையான பொருட்கள் :
1                                             பீட்ரூட் ( நடுத்தர அளவு )
1                                             பெரிய வெங்காயம் ( சிறியது )
1                                             பச்சை மிளகாய்
1/2 Tsp                                   சாம்பார் மிளகாய் தூள்
1/2 Tsp                                   கடுகு
1 Tsp                                      உளுத்தம் பருப்பு
1 Tsp                                      எண்ணெய்
2 Tsp                                      தேங்காய் துருவல்
கொத்தமல்லி தழை அலங்கரிக்க

செய்முறை :
 குக்கரை எடுத்து 1 கப் தண்ணீர் சேர்க்கவும்.
பீட்ரூட்டை நன்றாக மண் போக கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

பீட்ரூட் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து மூன்று விசில் வரும்வரை வேக வைக்கவும்.


வெந்த பீட்ரூட்டை வெளியில் எடுத்து தோலை நீக்கவும்.


சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.


வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விட்டு பின் உளுத்தம் பருப்பை சேர்க்கவும்.

பருப்பு சிவந்தவுடன் பச்சை மிளகாயை நீள  வாக்கில் அரிந்து சேர்க்கவும்.
இலேசாக வதக்கிய பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பள பளப்பாக வதங்கியவுடன் சாம்பார் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி அறிந்து வைத்துள்ள பீட்ரூட்டை சேர்க்கவும்.

ஏற்கனவே பீட்ரூட்டை வேக வைத்துவிட்டதால் அதிக நேரம் அடுப்பில் கிளறிக்கொண்டிருக்க வேண்டாம்.
தேங்காய் துருவலை சேர்த்து சில வினாடிகள் கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தழையினால் அலங்கரிக்கவும்.

சாம்பார் சாதம் மற்றும் ரசம் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.




மேலும் பீட்ரூட்டைக்  கொண்டு  தயாரிக்க :

காரட் பீட்ரூட் பொரியல் 
பீட்ரூட் பொரியல் 





Friday, November 22, 2013

Carrot Beetroot Poriyal

காரட் பீட்ரூட் பொரியல் : இரண்டுமே எளிதில் வேகக்கூடியதால் சேர்த்து பொரியல் செய்யலாம். கலந்து செய்யும்  பொரியல் பீட்ரூட்டின் கலரில்தான் இருக்கும். இரண்டுமே இனிப்பு சுவையுடயதாகையால் பொரியலும் சிறிது இனிப்பு தூக்கலாக இருக்கும். அதற்கு ஏற்ப காரத்தை விருப்பப்படி கூட்டி கொள்ளவும்.

காரட் பீட்ரூட் பொரியல்

தேவையான பொருட்கள் :


பீட்ரூட் துருவியது                   : 1/2 Cup


காரட் துருவியது                      : 1/2 Cup


பெரிய வெங்காயம்                  : 1 சிறியது
சாம்பார் பொடி                           : 3/4 Tsp ( அட்ஜஸ்ட் )
கொத்தமல்லி தழை                 : சிறிது
உப்பு                                              : 1/2 Tsp ( அட்ஜஸ்ட் )
தேங்காய் துருவல்                    : 2 Tsp

தாளிக்க :

கடுகு                                            : 1/4 Tsp
உளுத்தம் பருப்பு                        : 1 Tsp
எண்ணெய்                                   : 1/2 Tsp

செய்முறை :

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணையை விட்டு சூடு பண்ணவும்.
சரியான சூடு ஏறியதும் கடுகை வெடிக்க விடவும்.
பின் உளுத்தம் பருப்பை பொன்னிறமாகும் வரை காத்திருந்து வெங்காய துண்டுகளை சேர்க்கவும்.
வெங்காய மணம் வர ஆரம்பித்ததும் சாம்பார் பொடியை சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.
இப்போது  காரட் மற்றும் பீட்ரூட்டை சேர்க்கவும்.
உப்பு சேர்த்து நன்கு கலக்கும் படி கிளறவும்.
தட்டு போட்டு மூடி வேக வைக்கவும்.
இரண்டு அல்லது மூன்று நிமிடங்களிலேயே வெந்து விடும்.
நீண்ட நேரம் வேக வைக்க வேண்டாம்.
வெந்தவுடன் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி இறக்கவும்.


அதற்குரிய பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

காரட் பீட்ரூட் பொரியல்

இந்த பொரியல் ரசம் சாதத்துடனும் சாம்பார் சாதத்துடனும் சாப்பிட அருமையாக இருக்கும்.