Search This Blog

Showing posts with label gooseberry. Show all posts
Showing posts with label gooseberry. Show all posts

Monday, January 19, 2015

Nellikkai-Pudhina-Thuvaiyal

#நெல்லிக்காய்புதினாதுவையல் : அரசன் அதியமான் ஔவையாருக்கு நெல்லிக்கனி அளித்த வரலாறை நாம் அனைவரும் அறிவோம். அதியமான் ஔவையாருக்கு ஏன் நெல்லிக்கனி அளித்தார் தெரியுமா?? ஔவையார் நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக வாழ்ந்து தமிழுக்கு மேலும் மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான்!.... நெல்லிக்கனி நோய் வராமல் தடுப்பதற்கும் என்றும் இளமையாக இருப்பதற்கும் பேருதவியாக இருக்கிறது. மற்ற அனைத்து கனிகளுடன் ஒப்பிடும் போது மிக அதிக அளவு வைட்டமின் C தன்னகத்தே அடக்கியுள்ளது.
புதினாவின் வாசனைக்காக நமது சமையலில் உபயோகப்படுத்துகிறோம். ஆனால் இந்த புதினாவில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது.
இவ்விரண்டுடன் கொத்தமல்லி சேர்த்து ஒரு அருமையான துவையல் எவ்வாறு செய்யலாம் என காண்போம்.
பொதுவாக துவையலுக்கு புளி சேர்த்து அரைப்பது வழக்கம். ஆனால் நெல்லிக்காயில் புளிப்பு சுவை இருப்பதனால் புளி சேர்க்கப்படவில்லை. ஆனால் எலுமிச்சை சாறு கொடுக்கப்பட்டிருக்கிறதே என யோசிக்கிறீர்களா??!!
புதினா சிறிது நிறம் மாறும் தன்மை கொண்டது. அதனை தடுப்பதற்காகவும் மேலும் சுவையை சமன் படுத்துவதற்காகவும் எலுமிச்சை சாறு பயன் படுத்தப்பட்டுள்ளது.
இனி செய்முறையை காண்போம்.

நெல்லிக்காய் புதினா துவையல் [ Amla Mint Chutney ]

தேவையான பொருட்கள் :
2                                          நெல்லிக்காய்
1/2 கப்                                புதினா இலைகள்
1/4 கப்                                கொத்தமல்லி தழை நறுக்கியது
1 1/2 Tsp                             உளுத்தம் பருப்பு தோலுடன்
2 or 3                                  சிகப்பு மிளகாய்
1 Tsp                                  பச்சை கொத்தமல்லி விதைகள் ( கிடைத்தால் )*
சிறிய துண்டு                இஞ்சி [ விருப்பப்பட்டால் ]
1Tsp                                    எலுமிச்சை சாறு
3 Tsp                                   தேங்காய் துறுவல்
1 Tsp                                   உப்பு
1 Tsp                                   கடுகு
1 Tsp                                   எண்ணெய்

*பச்சை கொத்தமல்லி விதைகள் மார்கெட்டில் கிடைக்காவிடின் அதற்குப் பதிலாக நாம் பொதுவாக சமையலுக்கு உபயோகப் படுத்தும் கொத்தமல்லி விதையை பயன்படுத்தலாம்.

செய்முறை :
நெல்லிக்காயை நான்கு கழுவிய பின்னர் கொட்டையை நீக்கி விட்டு அரிந்து வைத்துக் கொள்ளவும்.
கொத்தமல்லி மற்றும் புதினாவையும் மண் போக அலசி தண்ணீரை வடித்து விடவும்.
இஞ்சியை கழுவி தோல் நீக்கி துண்டுகளாக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
முதலில் சிகப்பு மிளகாயையும் உளுத்தம் பருப்பையும் வறுக்கவும்.
உளுத்தம் பருப்பு சிவந்தவுடன் ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
 அதே வாணலியில் மேலும் அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு இஞ்சி துண்டுகளை போட்டு சிறிது சிவக்கும் வரை வதக்கவும்.
இஞ்சி சிவந்த பின் பச்சை கொத்தமல்லி விதைகளை இஞ்சியுடன் சேர்த்து அரை நிமிடம் வதக்கிய பின் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் எண்ணெய் விடாமல் நெல்லிக்காய் துண்டுகளை சற்றே சிவக்கும் வரை வதக்கி எடுக்கவும்.
அடுப்பை அணைத்து விடவும்.
சூடாக இருக்கும் வாணலியில் புதினாவை ஒரு நிமிடம் வதக்கி எடுக்கவும்.
வறுத்த மற்றும் வதக்கிய பொருட்களை ஆற விடவும்.


வதக்கிய பொருட்கள் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களையும் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
உப்பு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றின் சுவையை சரி பார்க்கவும்.


பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சிறிது கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.
சுவையும் மணமும் மிகுந்த துவையல் தயார்.

நெல்லிக்காய் புதினா துவையல் [ Amla Mint Chutney ]


சூடான சாதத்தில் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாம்பாரை தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் சுவை அபாரமாக இருக்கும்.
பொங்கல் மற்றும் உப்புமா போன்ற சிற்றுண்டிகளுக்கும் ஏற்ற துவையல் ஆகும்.
தயிர் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் சுவையோ சுவை!!
செய்து சுவைத்து பாருங்கள்!!







சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

நெல்லிக்காய் தயிரில் ஊறியது
நெல்லிக்காய் தயிரில் ஊறியது
நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய் தேனில் ஊறியது
நெல்லிக்காய் தேனில் ஊறியது
நெல்லிக்காய் ஜாம்
நெல்லிக்காய் 
ஜாம்
நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய் ஊறுகாய்






Monday, December 29, 2014

Nellikkai-Mittai

#நெல்லிக்காய்மிட்டாய் : #நெல்லிக்காய் அதிக அளவில் கிடைக்கும் காலங்களில் நெல்லிக்காயை பதப் படுத்தி வைத்துகொண்டால் வருடம் முழுவதும் அதன் பயனை அடையலாம். நெல்லிக்காயில் வைட்டமின் C சத்து அதிக அளவில் இருப்பதனால் நோய் எதிர்க்கும் சக்தியை நமக்கு அளிக்கிறது. நெல்லிக்காயை ஏதேனும் ஒரு வகையில் நமது உணவில் பயன் படுத்தி அதன் பயனை முழுவதுமாக அடைய முயற்சி செய்ய வேண்டும்.
இன்று நெல்லிக்காயை கொண்டு ஒரு சுவையான மிட்டாய் தயார் செய்வது எப்படி என காணலாம்.

நெல்லிக்காய் மிட்டாய்

தேவையான பொருட்கள் :
1/2 Kgநெல்லிக்காய் [ Amla - Goose berry ]
1 1/2 Cupசர்க்கரை  [ adjust ]
1/2 Tspகருப்பு உப்பு  [ adjust ]
1/4 Tspஉப்பு  [ adjust ]
1 Tspமிளகு

செய்முறை :
நெல்லிக்காயை தண்ணீரில் இரண்டு மூன்று முறை நன்கு கழுவவும்.
சுத்தமான துணியினால் துடைத்து வைக்கவும்.
ஒரு சுத்தமான பிளாஸ்டிக் பையில் போட்டு கயறு கொண்டு பையை இறுக்க கட்டவும்.
குளிர்சாதன பெட்டியில் ப்ரீசரில் வைத்து இரண்டு நாட்களுக்கு பத்திர படுத்தவும்.
இரண்டாம் நாள் மாலையில் அல்லது மூன்றாவது நாள் காலை குளிர் சாதன பெட்டியிலிருந்து வெளியே எடுத்து சிறிது நேரம் ஆற விடவும்.
பின்னர் நடுவே உள்ள கொட்டையை நீக்கி விட்டு கத்தியால் ஒரே அளவுள்ள துண்டுகளாக்கவும்.
ப்ரீசரில் பத்திரபடுத்தியதால் நெல்லிக்காய் மிருதுவாக ஆகிஇருக்கும்.
மேலும் கொட்டையை நீக்கும் போதும் வெட்டும் போதும் நெல்லிக்காயிலிருந்து தண்ணீர் சொட்டும்.
அதனால் கீழே ஒரு பெரிய தட்டு வைத்துக்கொண்டு செய்யவும்.  

மிக்ஸி பாத்திரத்தில் கருப்பு உப்பு, மிளகு மற்றும் சர்க்கரையை போட்டு பொடிக்கவும்.
பொடித்த சர்க்கரை கலவையை வெட்டி வைத்துள்ள நெல்லிக்காயின் மேல் கொட்டவும்.
ஒரு நீண்ட தேக்கரண்டியால் கலக்கி விடவும்.

நெல்லிக்காயில் உள்ள தண்ணீரை இழுத்துக் கொண்டு சர்க்கரை கரைய ஆரம்பிக்கும்.
நெல்லிக்காய் சர்க்கரை தண்ணீரில் ஊற விட்டது போல ஆகி விடும்.
மூன்றாம் நாள் காலை வெய்யிலில் காய வைக்கவும்.
இளகிய தண்ணீர் மிக நீர்க்கவும் அதிகமாகவும் இருந்தால் பாதியை ஒரு கிண்ணத்தில் வடித்து எடுத்து விடவும்.
வடித்தெடுத்த சர்க்கரை தண்ணீரை இனிப்பு பானம் செய்ய உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.
இளகிய தண்ணீர் சிறிதளவாயின் அப்படியே வெய்யிலில் காய விடவும்.
அவ்வப்போது தேக்கரண்டியால் கிளறி விடவும்.
வெய்யிலின் சூட்டில் நாம் அடுப்பில் வைத்து சர்க்கரை பாகு காய்ச்சுவது போல முதலில் பிசுபிசுப்பாக இருக்கும்.
பின்னர் காய காய கம்பி பதம் வரும்
பிறகு சர்க்கரை தண்ணீர் கெட்டி பட்டு நெல்லிக்காயின் மேல் ஒரு படலமாக படிந்து விடும்.
நன்கு காயும் வரை தினமும் வெய்யிலில் வைத்து காய வைக்கவும்.
நன்கு காய்ந்ததும் சுத்தமான ஈரம் இல்லாத பாட்டிலில் எடுத்து வைத்து பத்திர படுத்தவும்.
சுவையான கருப்பு உப்பின் மணமும் மிளகின் காரமும் கொண்ட நெல்லிக்காய் மிட்டாய் தயார்.
தினமும் சுவைக்கவும்.

Nellikkai Mittai [ Amla Candy ]
நெல்லிக்காய் மிட்டாய் செய்வதற்காக நெல்லிக்காயை வெட்டுவதிலிருந்து சர்க்கரையில் ஊறும் போது பாதி காய்ந்து கொண்டிருக்கும் போது போன்ற வெவ்வேறு நிலைகளிலும் சுவைக்கவும். ஒவ்வொரு நிலையிலும் சுவை அருமையாக இருக்கும்.

நெல்லிக்காய் மிட்டாய்




சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

நெல்லிக்காய் தயிரில் ஊறியது
நெல்லிக்காய் தயிரில் ஊறியது
நெல்லிக்காய் புதினா துவையல்
நெல்லிக்காய் புதினா துவையல்
நெல்லிக்காய் தேனில் ஊறியது
நெல்லிக்காய் தேனில் ஊறியது
நெல்லிக்காய் ஜாம்
நெல்லிக்காய் 
ஜாம்
நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய் ஊறுகாய்




Wednesday, January 29, 2014

Nellikkai Urugai

#நெல்லிக்காய்ஊறுகாய் : #நெல்லிக்காய் வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்த கனியாகும்.
நெல்லிக்காயை எத்தனை நாள் வெயிலில் உலர்த்தினாலும் இதன் குணமும், சுவையும் சற்றும் மாறுவதில்லை. இதனை பற்றி மேலும் அறிய 

நெல்லிக்காய்.

இங்கு நெல்லிக்காயை பயன் படுத்தி ஊறுகாய் எவ்வாறு செய்யலாம் என காண்போம்.

நெல்லிக்காய்ஊறுகாய்


தேவையான பொருட்கள் :


7 அ 8                                            நெல்லிக்காய்
2 நெல்லி அளவு                     புளி, தண்ணீரில் ஊறவைக்கவும்.
1 சிறு துண்டு                           பெருங்காயம்
1 Tsp                                              கடுகு
1/4 Tsp                                           மஞ்சத்தூள்
2 Tsp [அட்ஜஸ்ட் ]                   மிளகாய் தூள்
2 Tsp                                              உப்பு
1/2 Tsp                                          வெந்தயம்
1 Tsp                                             பச்சை மல்லி விதை ( இருந்தால் )
6 Tsp                                             நல்லெண்ணெய்

செய்முறை :
நெல்லிக்காயை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் 1 கப்  தண்ணீர் விட்டு அதில் இந்த பாத்திரத்தை வைத்து மூடி விடவும்.


வெயிட் பொருத்த வேண்டாம்.
அடுப்பில் அதிக தீயில் முதலில் சூடேற்றவும்.
ஆவி வர ஆரம்பித்ததும் தீயை குறைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேக விடவும்.
பிறகு வெளியில் எடுத்து நடுவில் உள்ள கொட்டையை நீக்கி விடவும்.
சூடு ஆறிய பின் மிக்சியில் அறைத்தெடுத்து  தனியே வைக்கவும்.
புளியை மிக குறைந்த தண்ணீர் விட்டு கரைத்து கெட்டியான கரைசலாக பிழிந்து எடுத்து தனியே வைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெந்தயத்தை வறுத்து பொடி செய்து தனியே வைக்கவும்.


அடுப்பில் உள்ள அதே  வாணலியில் மீதமுள்ள  எண்ணெயை  விட்டு சூடாக்கவும். சூடானதும் கடுகை வெடிக்க விடவும். பிறகு பெருங்கயத்தை பொரிய விடவும்.
மஞ்சத்தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள நெல்லிக்காயை சேர்த்து 5 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கவும்.
இப்போது  உப்பு மற்றும்  மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
அதன் பின் புளி கரைசலை விட்டு கிளறி விடவும்.
அவ்வப்போது அடி பிடிக்காமல் இருக்க கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.
புளி தண்ணீர்  சுண்டியதும் பச்சை கொத்தமல்லி விதைகளை சேர்க்கவும்.
கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.

சிறிது நேரம் கழித்து ஊற்றிய எண்ணெய் வெளியே கக்க ஆரம்பிக்கும்.
ஊறுகாயும் வாணலியில் ஒட்டாமல் உருண்டு வரும்.
அந்த நேரத்தில் பொடித்து வைத்துள்ள வெந்தயத்தை சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைத்து விடவும்.

நன்கு ஆறிய பின் ஒரு பாட்டிலில் எடுத்து வைக்கவும்.
குளிர் சாதன பெட்டியில் வைத்து பத்திரப் படுத்தலாம்.






சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

நெல்லிக்காய் தயிரில் ஊறியது
நெல்லிக்காய் தயிரில் ஊறியது
நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய் புதினா துவையல்
நெல்லிக்காய் புதினா துவையல்
தேன் நெல்லிக்காய்
நெல்லிக்காய் தேனில் ஊறியது
நெல்லிக்காய் சட்னி
நெல்லிக்காய்
சட்னி


Monday, January 13, 2014

Nellikkai Chutney

#நெல்லிக்காய்சட்னி : நெல்லிக்காயில் வைட்டமின் C மிக அதிகமாக இருக்கிறது. #நெல்லிக்காய் பண்டைய காலம் முதல் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகமாக உபயோகப் படுத்தப்பட்டு வந்துள்ளது. அதனால் நமது அன்றாட உணவில் நெல்லிக்காய் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. மேலும் நெல்லிக்காயின் மருத்துவ குணங்களை பற்றி அறிய
 http://en.wikipedia.org/wiki/Phyllanthus_emblica#Traditional_uses_of_amlaki 

இதனை கொண்டு எவ்வாறு சட்னி செய்யலாம் என பார்ப்போம்.

நெல்லிக்காய் சட்னி

தேவையான பொருட்கள் :
2 அ 3                                             நெல்லிக்காய்
2 அ 3                                             சிகப்பு மிளகாய் ( அட்ஜஸ்ட் )
3 Tbsp                                            தேங்காய் துருவல் 
1 1/2 Tsp                                        உளுத்தம் பருப்பு 
1 சிறிய துண்டு                       பெருங்காயம் 
1 கோலி குண்டு அளவு       புளி 
1/2 Tsp                                          உப்பு 
2 Tsp                                             எண்ணெய் 

செய்முறை :
நெல்லிக்காயை கழுவி சுத்தம் செய்து ஒரு சின்ன பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
குக்கரில் 1 கப் தண்ணீர் விட்டு நெல்லிக்காய் உள்ள பாத்திரத்தை குக்கரினுள் வைக்கவும்.


மூடி வெயிட் போட வேண்டாம். 
ஆவி வந்ததும் தீயை குறைத்து 5 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
நெல்லிக்காய் விதையை நீக்கிய பிறகு  சின்ன துண்டுகளாக நறுக்கி தனியே வைக்கவும்.
அல்லது இட்லி பானையில் முழு நெல்லிக்காயை ஆவியில் வேக வைத்து எடுத்து வைக்கவும். சூடு ஆறிய பின்னர் நடுவில் உள்ள விதையை நீக்கி விடவும்.




வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்  விட்டு  மிளகாய் மற்றும்  பெருங்காயம் வறுத்தெடுக்கவும்.
பின்னர் உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
இப்போது தேவையானால் எண்ணெய்  விட்டு நெல்லிக்காய் போட்டு வதக்கி எடுக்கவும்.
சூடு ஆறியதும் வறுத்த பொருட்களுடன் கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து மிக்சியில் அரைத்தெடுக்கவும்.

உப்பு சரி பார்க்கவும்.

நெல்லிக்காய் சட்னி

பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
இந்த சட்னி பொங்கல், உப்புமா மற்றும் சுண்டல் போன்ற டிபன் வகைகளுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
சாதத்துடன் சேர்த்து சிறிது நல்லெண்ணையுடன் பிசைந்து சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

குறிப்பு :
நெல்லிக்காய்க்கு புளிப்பு சுவை உள்ளதால் புளியின் அளவை சிறிது குறைத்தே சேர்த்துக்கொள்ளவும்.
சுவைகளை சமன் செய்ய சிறிதளவு வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம்.