#நெல்லிக்காய்மிட்டாய் : #நெல்லிக்காய் அதிக அளவில் கிடைக்கும் காலங்களில் நெல்லிக்காயை பதப் படுத்தி வைத்துகொண்டால் வருடம் முழுவதும் அதன் பயனை அடையலாம். நெல்லிக்காயில் வைட்டமின் C சத்து அதிக அளவில் இருப்பதனால் நோய் எதிர்க்கும் சக்தியை நமக்கு அளிக்கிறது. நெல்லிக்காயை ஏதேனும் ஒரு வகையில் நமது உணவில் பயன் படுத்தி அதன் பயனை முழுவதுமாக அடைய முயற்சி செய்ய வேண்டும்.
இன்று நெல்லிக்காயை கொண்டு ஒரு சுவையான மிட்டாய் தயார் செய்வது எப்படி என காணலாம்.
செய்முறை :
இன்று நெல்லிக்காயை கொண்டு ஒரு சுவையான மிட்டாய் தயார் செய்வது எப்படி என காணலாம்.
தேவையான பொருட்கள் : | |
---|---|
1/2 Kg | நெல்லிக்காய் [ Amla - Goose berry ] |
1 1/2 Cup | சர்க்கரை [ adjust ] |
1/2 Tsp | கருப்பு உப்பு [ adjust ] |
1/4 Tsp | உப்பு [ adjust ] |
1 Tsp | மிளகு |
செய்முறை :
நெல்லிக்காயை தண்ணீரில் இரண்டு மூன்று முறை நன்கு கழுவவும்.
சுத்தமான துணியினால் துடைத்து வைக்கவும்.
ஒரு சுத்தமான பிளாஸ்டிக் பையில் போட்டு கயறு கொண்டு பையை இறுக்க கட்டவும்.
குளிர்சாதன பெட்டியில் ப்ரீசரில் வைத்து இரண்டு நாட்களுக்கு பத்திர படுத்தவும்.
இரண்டாம் நாள் மாலையில் அல்லது மூன்றாவது நாள் காலை குளிர் சாதன பெட்டியிலிருந்து வெளியே எடுத்து சிறிது நேரம் ஆற விடவும்.
பின்னர் நடுவே உள்ள கொட்டையை நீக்கி விட்டு கத்தியால் ஒரே அளவுள்ள துண்டுகளாக்கவும்.
ப்ரீசரில் பத்திரபடுத்தியதால் நெல்லிக்காய் மிருதுவாக ஆகிஇருக்கும்.
மேலும் கொட்டையை நீக்கும் போதும் வெட்டும் போதும் நெல்லிக்காயிலிருந்து தண்ணீர் சொட்டும்.
அதனால் கீழே ஒரு பெரிய தட்டு வைத்துக்கொண்டு செய்யவும்.
ப்ரீசரில் பத்திரபடுத்தியதால் நெல்லிக்காய் மிருதுவாக ஆகிஇருக்கும்.
மேலும் கொட்டையை நீக்கும் போதும் வெட்டும் போதும் நெல்லிக்காயிலிருந்து தண்ணீர் சொட்டும்.
அதனால் கீழே ஒரு பெரிய தட்டு வைத்துக்கொண்டு செய்யவும்.
ஒரு நீண்ட தேக்கரண்டியால் கலக்கி விடவும்.
நெல்லிக்காய் சர்க்கரை தண்ணீரில் ஊற விட்டது போல ஆகி விடும்.
மூன்றாம் நாள் காலை வெய்யிலில் காய வைக்கவும்.
இளகிய தண்ணீர் மிக நீர்க்கவும் அதிகமாகவும் இருந்தால் பாதியை ஒரு கிண்ணத்தில் வடித்து எடுத்து விடவும்.
வடித்தெடுத்த சர்க்கரை தண்ணீரை இனிப்பு பானம் செய்ய உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.
இளகிய தண்ணீர் சிறிதளவாயின் அப்படியே வெய்யிலில் காய விடவும்.
அவ்வப்போது தேக்கரண்டியால் கிளறி விடவும்.
வெய்யிலின் சூட்டில் நாம் அடுப்பில் வைத்து சர்க்கரை பாகு காய்ச்சுவது போல முதலில் பிசுபிசுப்பாக இருக்கும்.
பின்னர் காய காய கம்பி பதம் வரும்
பிறகு சர்க்கரை தண்ணீர் கெட்டி பட்டு நெல்லிக்காயின் மேல் ஒரு படலமாக படிந்து விடும்.
நன்கு காயும் வரை தினமும் வெய்யிலில் வைத்து காய வைக்கவும்.
நன்கு காய்ந்ததும் சுத்தமான ஈரம் இல்லாத பாட்டிலில் எடுத்து வைத்து பத்திர படுத்தவும்.
சுவையான கருப்பு உப்பின் மணமும் மிளகின் காரமும் கொண்ட நெல்லிக்காய் மிட்டாய் தயார்.
தினமும் சுவைக்கவும்.
சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
|
|
|
||||||
|
|
No comments:
Post a Comment