#சேப்பங்கிழங்குமசாலாகறி : #சேப்பங்கிழங்கு இங்கு ராய்ப்பூரில் தாராளமாக கிடைக்கும். இதனை அரபி என அழைக்கிறார்கள். இந்த கிழங்கை உபயோகித்து சாம்பார், மோர்குழம்பு மற்றும் #கறி செய்யலாம்.
இங்கு நான் இந்த கிழங்குடன் தேங்காய் கொண்டு தயாரித்த மசாலா சேர்த்து கறி எவ்வாறு செய்வது என பதிவிடப் போகிறேன்.
தேவையான பொருட்கள் :
6 - 8 சேப்பங்கிழங்கு
2 Tsp எண்ணெய்
1/2 Tsp கடுகு
1 Tsp உளுத்தம் பருப்பு
1/4 கப் காலிப்ளவர் துண்டுகள் [ இருந்தால் ]
3 - 4 காளான் [ இருந்தால் ]
1/2 Tsp உப்பு
மசாலாவிற்கு :
1/4 கப் தேங்காய் துருவல்
2 சிகப்பு மிளகாய்
1 Tsp சீரகம்
1 Tsp பெருஞ்சீரகம்
1 Tsp மல்லித்தூள்
10 கறுவேப்பிலை
2 Tsp கொத்தமல்லி
10 - 15 புதினா இலைகள்
2 பற்கள் பூண்டு
1 வெங்காயம்,தோல் நீக்கி பெரிய துண்டுகளாக்கவும்.
1/4 Tsp உப்பு
செய்முறை :
கிழங்கை மண் போக கழுவி [ இங்கு கிழங்கு நன்கு கழுவப்பட்டே விற்கப்படும்.] குக்கரில் நேரிடையாகவோ அல்லது மற்றொரு பாத்திரத்தில் வைத்தோ வேகவைக்கவும். உப்பு சேர்த்து இரண்டு விசில்கள் வரும் வரை வேகவிடவும். வெந்ததும் தோலுரித்து வைக்கவும்.
வெங்காயம் நீங்கலாக மற்றனைத்தையும் மிக்ஸியில் தண்ணீர் விடாமல் முதலில் அரைக்கவும். பின்பு சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். கொரகொரவென அரைத்தால் போதுமானது.
கடைசியாக வெங்காய துண்டுகளை சேர்த்து ஒரு சுற்று சுற்றி உடனே நிறுத்தி விடவும். வெங்காயம் திப்பி திப்பியாக அரை பட்டால் போதும். தனியே எடுத்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகை வெடிக்க விட்டு உளுத்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.
பருப்பு சிவந்தவுடன் காலிப்ளவர்,உப்பு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சத்தூள் சேர்த்து வதக்கி ஓரிரு நிமிடங்கள் தட்டால் மூடி வேகவைக்கவும்.
காலிப்ளவர் முக்கால் பாகம் வெந்தால் போதுமானது.
இப்போது வெந்த கிழங்கை ஒரே அளவு துண்டுகளாக்கி காளிப்ளவரோடு சேர்க்கவும்.
காளான் எடுத்திருந்தால் அதையும் சேர்த்து ஓரிரு மணித்துளிகள் வதக்கவும்.
அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
மிதமான தீயில் வைத்து அடி பிடிக்காமல் அவ்வப்போது கிளறி விடவும்.
மசாலாவின் பச்சை வாசனை போகும் வரையும் தண்ணீர் சுண்டும் வரையும் அடுப்பில் வைத்திருக்கவும்.
தயாரானவுடன் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி மற்றும் கறுவேப்பிலை தூவி அலங்கரிக்கவும்.
மேலும் சில அருமையான சமையல் குறிப்புகள்

No comments:
Post a Comment