Search This Blog

Showing posts with label கறி. Show all posts
Showing posts with label கறி. Show all posts

Monday, September 3, 2018

Athalaikai-Curry

#அதலைக்காய்கறி : ஜூலை மாதம் முதல் வாரம் ஹூப்ளி நகரத்திற்கு சென்றிருந்தேன். அங்கு காய்கறி கடைத்தெருவிற்கு சென்றேன். அங்கு காய்கறி விற்பவர்கள் குவியல் குவியலாக பச்சை நிறத்தில் ஒரு காயை விற்க வைத்திருந்தார்கள். நான் முதலில் அவை பச்சை மிளகாயின் ஒரு வகையாக இருக்கும் என எண்ணினேன். பின்பு அருகில் சென்று பார்த்த போது பாகற்காயை போன்று மிக சிறு வடிவத்தில் இருப்பதைக் கண்டேன். காய் விற்றுக்கொண்டிருந்த வணிகர்களிடம் அதன் பெயரை வினவினேன். அதனை உபயோகித்து என்னென்ன செய்யலாம் எனவும் வினவினேன். அந்த காயிற்கு சொன்ன கன்னட பெயர் எனக்கு நினைவில் இல்லை. அவர்கள் இக்காயைக்கொண்டு குழம்பு மற்றும் கறி செய்யலாம் என சொன்னார்கள்.
புதிய காயின் சுவையை முயற்சி செய்யலாம் என வாங்கி வந்தேன். அதன் தோற்றம், சுவை மற்றும் மணம் பாகற்காயைப் போன்றே இருந்தது.
பின்பு கூகுளில் தேடிய போது தமிழில் இந்த காயின் பெயர் #அதலைக்காய் என்றறிந்தேன். இவ்வகை காய்கள் தமிழ் நாட்டின் தெற்கு மாவட்டங்களில் கிடைக்கும் என அறிந்துகொண்டேன். மேலும் நீரிழிவு மற்றும் குடல் புழுக்களை நீக்கவல்லது என அறிந்தேன். மேலதிக விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.
Athalaikai [ அதலைக்காய் ]

அதலைக்காயை உபயோகித்து பாகற்காய் மசாலா கறி போன்று செய்து சுவைத்தேன். அதன் சமையல் குறிப்பு இங்கு பகிர்ந்துள்ளேன்.

#Athalaikai [ #அதலைக்காய் ]


தேவையானவை :
150 gmஅதலைக்காய்
1 Tspகடலை எண்ணெய்
1 சிட்டிகைமஞ்சத்தூள்
1/4 Tspகடுகு
1/2 Tspஉளுத்தம் பருப்பு
1/2 Tspஉப்பு
அரைக்க :
1 1/2 Tbspதேங்காய் துருவல்
2 - 3சிகப்பு மிளகாய் [ அட்ஜஸ்ட் ]
1/2 Tspசீரகம்
1/2 Tspசோம்பு
1/4 Tspகொத்தமல்லி விதை
10 - 15கருவேப்பிலை
சிறிதளவுகொத்தமல்லி தழை
2 பற்கள்பூண்டு
1 medium sizeவெங்காயம், நறுக்கவும்
1/8 Tspஉப்பு

செய்முறை :
அதலைக்காயை கழுவி சுத்தம் செய்த பின்னர் ஒவ்வொரு காயையும் இரண்டாகவோ அல்லது நான்காகவோ நறுக்கி வைக்கவும். விதை சிறிது கடினமாக இருந்தால் நீக்கி விடவும்.

வெங்காயம் தவிர்த்து மற்ற அரைக்கவேண்டிய பொருட்கள் அனைத்தையும் மிக்சியில் போட்டு அளவான தண்ணீர் விட்டு அரைக்கவும்.
கெட்டியாக அரைப்பது நல்லது.
கடைசியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
ஒரு கிண்ணத்தில் இட்டு தனியே வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு வெடித்த பின்னர் உளுத்தம் பருப்பை இட்டு சிவக்க வறுத்த பிறகு வெட்டி வைத்துள்ள அதலைக்காயை சேர்க்கவும்.
மஞ்சத்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கலந்து விடவும்.
சிறிது தண்ணீர் தெளித்து மூடியால் மூடி வேக விடவும்.

காய் வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
பச்சை வாசனை போகும் வரை சிறிய தீயில் வைத்திருக்கவும்.
இடையில் அவ்வப்போது கிளறி விடவும்.
உப்பு சரி பார்க்கவும்.

தண்ணீர் வற்றி நன்கு வதங்கியவுடன் கொத்தமல்லி தழையை கிள்ளி போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
மேலும் சிறிது கொத்தமல்லி தழைகளை தூவி அலங்கரிக்கவும்.
சுவையான அதலைக்காய் கறி தயார்.

சாம்பார் மற்றும் ரசம் விட்டு பிசைந்து இக்கறியை தொட்டுக்கொண்டு சாப்பிட மிக அருமையாக இருக்கும்.








மேலும் சில அருமையான சமையல் குறிப்புகள் 
முயற்சி செய்து பார்க்க
சுண்டைக்காய்மசாலாகறி
சுண்டைக்காய்
மசாலாகறி
காலிப்ளவர் உருளை மசாலா கறி
காலிப்ளவர் உருளை மசாலா கறி
சேப்பங்கிழங்கு மசாலா கறி
சேப்பங்கிழங்கு மசாலா கறி
பலாமுசு மசாலா கறி
பலாமுசு
மசாலா கறி
கொள்ளு சுண்டல்
கொள்ளு
சுண்டல்

Monday, June 15, 2015

Onion-Curry

#வெங்காயகறி : மற்ற காய்கறிகளுடன் #வெங்காயம் சேர்த்து தொட்டுக்கொள்ள கறி செய்வது வழக்கம். வெங்காயம் மட்டுமே உபயோகித்து கறி செய்தால் எப்படி இருக்கும்?!!
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் எனது தாயார் பூரி செய்தால் மதிய உணவிற்கு டப்பாவில் எடுத்து செல்ல இந்த வெங்காய கறியை செய்து கொடுப்பார்கள். பூரி மசாலா எடுத்து சென்றால் பூரி மசாலாவில் ஊறி நசநசவென ஆகி விடும். அதனால் வெங்காய கறியை செய்து பூரியினுள் வைத்து சுருட்டி பூரி ரோல் வைத்து டப்பாவில் அடைத்து கொடுப்பார்கள். மிகவும் சுவையாக இருக்கும். சப்பாத்தியுடனும் வெங்காய கறி ரோல் செய்யலாம். ஆனால் வெங்காய கறி பூரி ரோல் மிகவும் சுவை மிகுந்த காம்பினேஷன் ஆகும்.
முதலில் வெங்காய கறியை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
அடுத்து பூரி மற்றும் சப்பாத்தி ரோல் செய்வது எப்படி என்றும் பார்ப்போம்.

வெங்காய கறி



தேவையான பொருட்கள் :
4 or 5வெங்காயம், மெல்லிய நீள துண்டுகளாக நறுக்கவும்
4 or 5கறுவேப்பிலை
1/4 Tspமஞ்சத்தூள்
1 Tspசாம்பார் பொடி
3/4 Tspஉப்பு
தாளிக்க :
3 Tspஎண்ணெய்
1/2 Tspகடுகு
1 Tspஉளுத்தம் பருப்பு
விருப்பட்டால் :
1/2 cupவெந்தய கீரை


செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் முதலில் கடுகு போட்டு வெடித்த பின்னர் உளுத்தம் பருப்பை சேர்க்கவும்.
பருப்பு பொன்னிறமானதும் வெங்காயம், சாம்பார் பொடி,  மஞ்சத்தூள் மற்றும் உப்பு  சேர்த்து வதக்கவும்.
அவ்வப்போது கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.
நன்கு வதங்கி பச்சை வாசனை போன பின் வெங்காயம் பளபளப்பாக வரும் வரை அடுப்பில் குறைந்த தீயில் வைத்திருக்கவும்.

வெங்காய கறி வெங்காய கறி
அடுப்பை அணைத்து விட்டு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். 

வெங்காய கறி

வெந்தய கீரை வெங்காய கறி :
வெந்தய கீரை எடுத்திருந்தால் கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
வெந்தய கீரையை கடைசியாக வெங்காய கறியை அடுப்பிலிருந்து இறக்கும் தருவாயில் சேர்க்கவும்.
ஒரு நிமிடம் கறியுடன் சேர்த்து வதக்கினால் போதுமானது.

அடுப்பை அணைத்து விட்டு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். 

Vengaya Venthayakeerai Curry [ Onion Fenugreek leaf Curry ] வெந்தய கீரை வெங்காய கறி
பூரி ரோல் மற்றும் சப்பாத்தி ரோல் செய்முறை :
பூரி தயாரித்த பின்னர் கையினால் அமுக்கி தட்டையாக்கி ஒரு தட்டில் வைக்கவும்.
அதன் மீது தயாரித்து வைத்துள்ள வெங்காய கறியை பரப்பவும்.
நன்கு இறுக்கமாக சுருட்டிய பின்னர் டிஷ்யு பேப்பரில் சுற்றி டப்பாவில் அடுக்கவும்.
இதே போல சப்பாத்தியின் மீது வைத்து இறுக்கமாக சுருட்டினால் சப்பாத்தி ரோல் தயார்.
poori rolls
வெங்காய கறி பூரி ரோல் சப்பாத்தி ரோல்




மற்ற சில சமையல் செய்முறைகள் : 
பூரி
பூரி
பூரி மசாலா
பூரி மசாலா
கொடி பசலை பூரி
கொடி பசலை பூரி
பாலக் சப்பாத்தி
சிகப்பு கீரை சப்பாத்தி
சிகப்பு கீரை சப்பாத்தி





Tuesday, November 25, 2014

Colacasia Curry

#சேப்பங்கிழங்குகறி : இந்த கிழங்கை பற்றி மேலும் அறிய கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
http://en.wikipedia.org/wiki/Taro

இந்த கிழங்கை கொண்டு சாம்பார் மற்றும் கறி செய்யலாம். கேரளாவில் இருந்த போது இக்கிழங்கை கொண்டு செய்யப்பட்ட வறுவலை சுவைத்திருக்கிறேன்.
இங்கு சேப்பங்கிழங்கு கறி செய்வதெப்படி என காணலாம்.

சேப்பங்கிழங்கு கறி


தேவையான பொருட்கள் :
1/4 kg                                         சேப்பங்கிழங்கு
1                                                 வெங்காயம், நீள துண்டுகளாக நறுக்கவும்
1                                                 தக்காளி, பொடியாக நறுக்கவும்
10                                               கறுவேப்பிலை

தேவையான பொடிகள் :
1 pinch                                        மஞ்சத்தூள்
1/2 Tsp                                        சிகப்பு மிளகாய் தூள் [ adjust ]
1/4 Tsp                                        சீரகத்தூள்

தாளிக்க :
4 Tsp                                           எண்ணெய்
1/2 Tsp                                       கடுகு
1 Tsp                                           உளுத்தம் பருப்பு
1 pinch                                      பெருங்காய தூள்

சிறிது கொத்தமல்லி தழை அலங்கரிக்க.

செய்முறை :
கிழங்கை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
அவை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு உப்பு சேர்க்கவும்.
குக்கரினுள் வைத்து மூன்று விசில் மற்றும் குறைந்த தீயில் ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
ஆவி அடங்கிய பின்னர் எடுத்து தோலை உறிக்க முடிந்தால் கிழங்கு வெந்து விட்டதாக அர்த்தம்.
இல்லாவிடின் மறுபடியும் சிறிது நேரம் வேக வைக்கவும்.

தோலை அகற்றி தனியே எடுத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகை வெடிக்க விட்ட பின்னர் உளுத்தம் பருப்பை சிவக்க வறுக்கவும்.
பெருங்காயத்தூள் சேர்த்த பின்னர் கறுவேப்பிலை, அதனை அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது வெளிர் நிறமாக மாறியவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியவுடன் மிளகாய் தூள், உப்பு மற்றும் சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.
கிழங்கை ஒரே அளவு துண்டுகளாக்கி சேர்த்து பிரட்டவும்.
நன்கு கிளறி விடவும்.
ஓரிரு நிமிடங்கள் ஒரு தட்டினால் மூடி வைக்கவும்.
தண்ணீர் சுண்டி கிழங்கின் மேல் தக்காளி கலவை நன்கு பூசினாற்போல வந்தவுடன் பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைத்து கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.


சேப்பங்கிழங்கு கறி தயார்.

சேப்பங்கிழங்கு கறி

கலந்த சாதம், சாம்பார் சாதம் மற்றும் ரசம் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.




மற்ற சமையல் குறிப்புகள்

சேப்பங்கிழங்கு மசாலா கறி






Wednesday, October 1, 2014

Sepangkizhangu Masala Curry

#சேப்பங்கிழங்குமசாலாகறி : #சேப்பங்கிழங்கு இங்கு ராய்ப்பூரில் தாராளமாக கிடைக்கும். இதனை அரபி என அழைக்கிறார்கள். இந்த கிழங்கை உபயோகித்து சாம்பார், மோர்குழம்பு மற்றும் #கறி செய்யலாம்.
இங்கு நான் இந்த கிழங்குடன் தேங்காய் கொண்டு தயாரித்த மசாலா சேர்த்து கறி எவ்வாறு செய்வது என பதிவிடப் போகிறேன்.



தேவையான பொருட்கள் :
6 - 8                                       சேப்பங்கிழங்கு
2 Tsp                                     எண்ணெய்
1/2 Tsp                                  கடுகு
1 Tsp                                     உளுத்தம் பருப்பு
1/4 கப்                                 காலிப்ளவர் துண்டுகள் [ இருந்தால் ]
3 - 4                                       காளான் [ இருந்தால் ]
1/2 Tsp                                  உப்பு

மசாலாவிற்கு :
1/4 கப்                                  தேங்காய் துருவல்
2                                             சிகப்பு மிளகாய்
1 Tsp                                      சீரகம்
1 Tsp                                      பெருஞ்சீரகம்
1 Tsp                                      மல்லித்தூள்
10                                          கறுவேப்பிலை
2 Tsp                                     கொத்தமல்லி
10 - 15                                  புதினா இலைகள்
2 பற்கள்                            பூண்டு
1                                           வெங்காயம்,தோல் நீக்கி பெரிய துண்டுகளாக்கவும்.
1/4 Tsp                                 உப்பு

செய்முறை :
கிழங்கை மண் போக கழுவி [ இங்கு கிழங்கு நன்கு கழுவப்பட்டே விற்கப்படும்.] குக்கரில் நேரிடையாகவோ அல்லது மற்றொரு பாத்திரத்தில் வைத்தோ வேகவைக்கவும். உப்பு சேர்த்து இரண்டு விசில்கள் வரும் வரை வேகவிடவும். வெந்ததும் தோலுரித்து வைக்கவும்.


வெங்காயம் நீங்கலாக மற்றனைத்தையும் மிக்ஸியில் தண்ணீர் விடாமல் முதலில் அரைக்கவும். பின்பு சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். கொரகொரவென அரைத்தால் போதுமானது.


கடைசியாக வெங்காய துண்டுகளை சேர்த்து ஒரு சுற்று சுற்றி உடனே நிறுத்தி விடவும். வெங்காயம் திப்பி திப்பியாக அரை பட்டால் போதும். தனியே எடுத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகை வெடிக்க விட்டு உளுத்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.
பருப்பு சிவந்தவுடன் காலிப்ளவர்,உப்பு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சத்தூள் சேர்த்து வதக்கி ஓரிரு நிமிடங்கள் தட்டால் மூடி வேகவைக்கவும்.


காலிப்ளவர் முக்கால் பாகம் வெந்தால் போதுமானது.
இப்போது வெந்த கிழங்கை ஒரே அளவு துண்டுகளாக்கி காளிப்ளவரோடு சேர்க்கவும்.


காளான் எடுத்திருந்தால் அதையும் சேர்த்து ஓரிரு மணித்துளிகள் வதக்கவும்.


அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.


மிதமான தீயில் வைத்து அடி பிடிக்காமல் அவ்வப்போது கிளறி விடவும்.


மசாலாவின் பச்சை வாசனை போகும் வரையும் தண்ணீர் சுண்டும் வரையும் அடுப்பில் வைத்திருக்கவும்.
தயாரானவுடன் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி மற்றும் கறுவேப்பிலை தூவி அலங்கரிக்கவும்.











மேலும் சில அருமையான சமையல் குறிப்புகள் 
முயற்சி செய்து பார்க்க
காலிப்ளவர் உருளை மசாலா கறி
காலிப்ளவர் உருளை மசாலா கறி
காலிப்ளவர் கொண்டைக்கடலை மசாலா கறி
காலிப்ளவர்கொண்டை .. மசாலா கறி
சுண்டைக்காய்மசாலாகறி
சுண்டைக்காய்
மசாலாகறி
பலாமுசு மசாலா கறி
பலாமுசு
மசாலா கறி
கொள்ளு சுண்டல்
கொள்ளு
சுண்டல்