Search This Blog

Saturday, January 25, 2014

Cauliflower Potato Masala Curry

#காலிப்ளோவேர்உருளைமசாலாகறி : இந்த பூவை கொண்டு மஞ்சூரியன், #காலிப்ளோவேர்  65, கறி, பொரியல், போன்ற பல வகையான உணவு வகைகள் சமைக்கப் படுகின்றன. இவை அனைத்தையும் விட தேங்காய் மசாலா அரைத்து உருளை கிழங்குடன் செய்யப்படும் கறி மிக மிக அருமையாக இருக்கும். இந்த உணவு வகை மதிய சமையலில் சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.



தேவையான பொருட்கள் :
 1/2 கப்                                       காலி ப்ளோவேர் அரிந்தது
1 பெரிய அளவு                     உருளை கிழங்கு வேக வைத்தது
1 Tbsp                                         பச்சை பட்டாணி

மசாலா அரைக்க :
2 Tbsp                                       தேங்காய் துருவல்
2                                               பச்சை மிளகாய்
1 Tsp                                         சீரகம்
1 Tsp                                         சோம்பு
1/4 Tsp                                     மல்லி விதை
3 பற்கள்                               பூண்டு
1 சிறிய அளவு                  வெங்காயம்
2 சிட்டிகை                          உப்பு
கொத்தமல்லி தழை மற்றும் கருவேப்பிலை விருப்பமான அளவு.

தாளிக்க :
1/2 Tsp                                    கடுகு
1 Tsp                                       உளுத்தம் பருப்பு
1 Tsp                                      எண்ணெய்

அலங்கரிக்க :
கொத்தமல்லி தழை சிறிதளவு.

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும். சூடானதும் கடுகை வெடிக்க விட்டு பின் உளுத்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.

பொன்னிறமானபின் சுத்தம் செய்து வெட்டி வைத்துள்ள  காலி ப்ளோவேர் துண்டுகளை சேர்க்கவும். சிறிது நேரம் வதக்கிய பின் பட்டாணியையும் சேர்த்து பிரட்டி விட்டு மூடியினால் மூடி வைத்து வேக விடவும்.

இப்போது மிக்சியில் வெங்காயம் நீங்கலாக மற்ற அனைத்தையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் முதலில் அரைக்கவும்.
பின் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

கடைசியாக வெங்காயம் சேர்த்து ஓரிரு சுற்று சுற்றி வெங்காயம் திப்பிதிப்பியாக இருக்குமாறு அரைத்துக் கொள்ளவும்.


இப்போது வாணலியில் காய் வெந்து விட்டதா என பார்க்கவும்.
வேகவைத்த உருளை கிழங்கின் தோலுரித்து கையினால் நசுக்கி ஒன்றிரண்டாக பிட்டு போடவும்.


அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும்.
நன்கு சாரணியால் கிளறி விடவும்.
பச்சை வாசனை போகும் வரையும், முழுவதுமாக  தண்ணீர் சுண்டும் வரையிலும் அவ்வப்போது கிளறி விட வேண்டும்.


எல்லாம் ஒன்று சேர்ந்து தயார் ஆவதற்கு கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் ஆகலாம்.

பின்பு ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து கொத்தமல்லி தழையால் அலங்கரிக்கவும்.


சுவையான காலி ப்ளோவேர் உருளை கிழங்கு மசாலா கறி தயார்.

  • மசாலா அரைக்கும் போது தண்ணீர் சிறிதளவே சேர்த்து அரைக்க வேண்டும். இல்லையெனில் தண்ணீர் சுண்டுவதற்காக மிகுந்த நேரம் அடுப்பில் வதக்க வேண்டி இருக்கும். மிகுந்த நேரம் கிளறினால் சுவையும் மாறுபடும். 
  • பச்சை பட்டாணிக்கு பதிலாக மொச்சை சேர்த்து செய்தாலும் நன்றாக இருக்கும்.
  • உருளை கிழங்கை நன்கு கழுவி குக்கரில் 3/4 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து  மூடி வெயிட் பொருத்தவும். அதிக தீயில் 3 அல்லது 4 விசில் வரும் வரை வேக வைத்து ஆவி அடங்கியவுடன் வெளியே எடுக்கவும்.








மேலும் சில அருமையான சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
சுண்டைக்காய்மசாலாகறி
சுண்டைக்காய்
மசாலாகறி
காலிப்ளவர் கொண்டைக்கடலை மசாலா கறி
காலிப்ளவர்கொண்டை .. மசாலா கறி
 சேப்பங்கிழங்கு மசாலா கறி
சேப்பங்கிழங்கு மசாலா கறி
பலாமுசு மசாலா கறி
பலாமுசு
மசாலா கறி
கொள்ளு சுண்டல்
கொள்ளு
சுண்டல்

No comments:

Post a Comment