Search This Blog

Sunday, August 10, 2014

Kothamalli Coconut Chutney

#கொத்தமல்லிதேங்காய்சட்னி : இன்று குதிரைவாலி இட்லியுடன் தொட்டுக்கொள்ள செய்த சட்னியின் செய்முறையை இங்கு காண்போம்.

கொத்தமல்லி தேங்காய் சட்னி


தேவையான பொருட்கள் :
1/2 கப்                                        கொத்தமல்லி
1/3 கப்                                         தேங்காய் துருவல்
2                                                   சிகப்பு மிளகாய்
1/2 Tsp                                         கடுகு
2 Tsp                                            உளுத்தம் பருப்பு
1/2 Tsp                                         கொத்தமல்லி விதை
1/4 Tsp                                         பெருங்காய தூள்
1/2 Tsp                                         உப்பு
2 Tsp                                           எலுமிச்சை சாறு
1 Tsp                                           எண்ணெய்

தாளிக்க :
1/2 Tsp                                        கடுகு
1/2 Tsp                                        உளுத்தம் பருப்பு
7                                                 கருவேப்பிலை
1 Tsp                                           எண்ணெய்

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
முதலில் கடுகு சேர்த்து இலேசாக வெடிக்க ஆரம்பித்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
உளுத்தம் பருப்பு சிவந்ததும் வாணலியிலிருந்து எடுத்து தனியே வைக்கவும்.
மிக்ஸியில் வறுத்த பொருட்களுடன் மற்ற அனைத்தையும் சேர்த்து அரைக்கவும்.


தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
உப்பு சரி பார்க்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

மறுபடியும் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகு வெடிக்கவிட்ட பின் உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து கடைசியாக கறுவேப்பிலை சேர்த்து வறுத்து சட்னியின் மேல் கொட்டவும்.

கொத்தமல்லி மணம் மூக்கை துளைக்குமே!

கொத்தமல்லி தேங்காய் சட்னி

ஆம்! சுவை மிகுந்த சட்னி தயார். இட்லி, தோசை, உப்புமா போன்ற டிபன் வகைகளுடன் சுவைத்து சாப்பிட ஏற்ற சட்னியாகும்.







மேலும் சில சட்னி வகைகள் முயற்சி செய்து பார்க்க
  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
பிரண்டை துவையல் நெல்லிக்காய் புதினா துவையல் பொடுதலை துவையல்
இஞ்சி துவையல் கரிசலாங்கண்ணி துவையல்



மற்ற சட்னி வகைகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.

சட்னி வகைகள்

இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.



2 comments:

  1. மிக அருமையான சட்னி. இதை நான் துவையலாக அரைப்பேன். செய்முறை விளக்கம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி. ஆம்! சாதத்துடன் பிசைந்து சாப்பிட துவையலாகவும் அரைக்கலாம். கொத்தமல்லி உபயோகித்து எந்த சமையல் செய்தாலும் அருமையாகத்தான் இருக்கும்!

      Delete