#கொண்டக்கடலைசுண்டல் : நவராத்திரி என்றதும் உடனே ஞாபகத்துக்கு வருவது கொலுவும் சுண்டலும்தான். பருப்பு வகைகளை ஊறவைத்து வேக வைத்து செய்யப்படும் பொரியல் #சுண்டல் என அழைக்கப்படுகிறது.
சைவ உணவு உட்கொள்ளுபவர்களுக்கு பருப்பு வகைகளிலிருந்துதான் புரத சத்து கிடைக்கிறது.
இங்கு கொண்டக்கடலை கொண்டு சுவையான சுண்டல் எப்படி செய்வது என பார்ப்போம்.
சைவ உணவு உட்கொள்ளுபவர்களுக்கு பருப்பு வகைகளிலிருந்துதான் புரத சத்து கிடைக்கிறது.
இங்கு கொண்டக்கடலை கொண்டு சுவையான சுண்டல் எப்படி செய்வது என பார்ப்போம்.
| தேவையான பொருட்கள் : | |
|---|---|
| 1/2 கப் | கொண்டக்கடலை [ chickpea ] |
| 1/2 Tsp | கடுகு |
| 1 Tsp | உளுத்தம் பருப்பு |
| 2 or 3 | சிகப்பு மிளகாய், உடைத்து வைக்கவும் |
| 2 சிட்டிகை | பெருங்காயத்தூள் |
| 1/4 Tsp | மிளகாய் தூள் [ தேவையானால் ] |
| 1/2 Tsp | உப்பு [ சரி பார்க்கவும் ] |
| 10 - 12 | கறுவேப்பிலை |
| 1 or 2 Tbsp | தேங்காய் துருவல் |
| 1 Tsp | எண்ணெய் |
செய்முறை :
கொண்டக்கடலையை நன்கு சுத்தமாக கழுவிய பின்னர் 6 முதல் 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
நன்கு ஊறிய கொண்டக்கடலையை குக்கரில் எடுத்துக்கொள்ளவும்.
முக்கால் கப் தண்ணீர் விட்டு 1/2 Tsp உப்பு சேர்த்து மூடி வெயிட் பொருத்தி ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.
கொண்டக்கடலை நன்கு ஊறியிருப்பதனால் ஒரு விசிலிலேயே நன்கு வெந்து விடும்.
ஆவி அடங்கிய பிறகு ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாகவும்.
தணலை அதிகமாகவே வைத்துக்கொள்ளவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
அடுத்து சிகப்பு மிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து சிவக்க வறுக்கவும்.
பருப்பு சிவந்த பின் கறுவேப்பிலை சேர்க்கவும்.
சில மணி துளிகளுக்குப் பிறகு பெருங்காய தூள் மற்றும் மிளகாய் தூளை சேர்த்தவுடன் வேகவைத்த கொண்டக்கடலையை சேர்த்து கிளறவும்.
உப்பு சரி பார்த்து தேவையெனில் சிறிது சேர்க்கவும்.
கடைசியாக தேங்காய் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
துருவிய காரட் கொண்டு அலங்கரிக்கவும்.
புரதம் நிறைந்த அருமையான மாலை உணவாகும்.
சாம்பார் மற்றும் ரசம் ஊற்றி பிசைந்த சாதத்துடனும் சுவைக்க அருமையாக இருக்கும்.
மேலும் சில சமையல் குறிப்புகள்

![ஆப்பம் [ ஆப்பம் கேரளா ஸ்டைல் 2 ] ஆப்பம் [ ஆப்பம் கேரளா ஸ்டைல் 2 ]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMTDAw2aUS6wRxnwYS1TWTO7Y732yrdR7VeFf44XRfnD2nb1Pzy9XgnBHvJVy6yreK9m1G28OdHYwr5TwjQ-A2yx1A3jZj8m2yw4_5IeUEtzpGj_E4L33ETuKnyAFg31L-ww1iikxayXc/s640/1-2013-05-04+09.58.16.jpg)

![Appam maavu [ Appam batter ] Appam maavu [ Appam batter ]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcSxvaxpIE4nNzbNcBas8bCfOxNJF_aBMdgi2KVuHWN4ba3bMdrCGXV0jSkC58O1zz3rSpzSS_nxYlpbh1Odvg6FT9aSAgPAgFDdhd_XzKRNJ60p6EYNl6QrxjeRcwe38alciIaJQCZLI/s400/1-2013-05-02+19.10.02.jpg)

![Appam Chatty [ Appam making kadai ] Appam Chatty [ Appam making kadai ]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhp_0WF0VQK2YVALESbOLAIlhAxQgWV8Xou9Qw3Gzg8lSttf-UvwCYzkiKr2nrHIkO1oH5xGrgilDhdDORCtloqsnWg3gdPn98LtKFsY2LpDfWP0C8hH3fV18MF75nW1cANQcAYdLLDwrU/s400/1-2012-11-22+11.04.10.jpg)