Search This Blog

Tuesday, February 2, 2016

Kanji-Dosai

#கஞ்சிதோசை : அரிசியையும் தேங்காய் துருவலையும் உபயோகித்து
ஆப்பம்கேரளாஸ்டைல் 2 போல ஒரு சிறு மாறுதலுடன் வித்தியாசமாக செய்யப்படும் ஒரு சுவையான தோசை இந்த கஞ்சி தோசை. இதன் தயாரிப்பு முறை  நீர்தோசை போன்று தோன்றினாலும் சிறிது வேறு படுகிறது.
இனி எப்படி செய்வது என காணலாம்.

kanji dosai


தேவையான பொருட்கள் :
2 கப்பச்சரிசி
1/2 கப்தேங்காய் துருவல் 
2 Tspஉப்பு
1 Tspசர்க்கரை [ விருப்பப்பட்டால் ]

தோசை சுட்டெடுக்க தேவையான அளவு நல்லெண்ணெய்

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை போட்டு நன்கு கழுவி தண்ணீர் விட்டு 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறிய பின்னர் மாவரைக்கும் இயந்திரத்தில் ஊறவைத்த அரிசி மற்றும் தேங்காய் துருவல்  ஆகியவற்றை தண்ணீர் விட்டு நன்கு மைய அரைத்து  எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

3/4 கப் முதல் 1 கப் வரை தண்ணீர் விட்டு மாவரைக்கும் இயந்திரத்தில் ஒட்டிக்கொண்டுள்ள மாவை கழுவி மற்றொரு அகலமான பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
அடுப்பை பற்ற வைத்து இந்த மாவு கழுவிய தண்ணீர் உள்ள பாத்திரத்தை சிறிய தீயில் சூடாக்கவும்.
தொடர்ந்து கை விடாமல் கலக்கிக் கொண்டே இருக்கவும்.
மாவு கலந்த தண்ணீர் சற்று நேரத்தில் கஞ்சி பதத்தை அடைந்து பளபளப்பாக மாறும்.
இப்போது அடுப்பை அணைத்து விட்டு ஆற விடவும்.
தயாரித்த கஞ்சியின் மேல் ஆடை படியாமல் இருக்க அவ்வப்போது கரண்டியால் கலக்கி விடவும்.

ஆறிய கஞ்சியை அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்க்கவும்.

உப்பு மற்றும் சர்க்கரையையும் சேர்த்து கலந்து 6 முதல் 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

அல்லது முதல் நாள் மாலை மாவு அரைத்து இரவு முழுவதும் புளிக்க விட்டு மறுநாள் காலை கஞ்சி தோசை தயாரிக்கலாம்.

அடுப்பின் மேல் தோசை கல்லை வைத்து மிதமான தீயில் சூடாக்கவும்.
சூடானதும் ஒரு சுத்தமான காய்ந்த மெல்லிய சிறு துண்டு துணியை எண்ணெயில் இலேசாக நனைத்து தோசை கல்லை தடவி விடவும்.
இப்போது மாவை கல்லின் ஓரத்தில் இருந்து ஒரு வட்டமாக ஊற்றி நடு வரை நிரப்பவும்.
மேலே சில துளிகள் நல்லெண்ணெய் விடவும்.

வெந்து ஓரங்கள் இலேசாக சிவக்க ஆரம்பித்து இருக்கும்.
திருப்பிப் போட தேவையில்லை.
தோசை திருப்பியினால் தோசையின் மேலே விட்ட எண்ணெயை மெதுவாக தடவி பரப்பி விடவும். இல்லையென்றால்  தோசை வர வரவென்று ஆகி விடும்.
பிறகு கல்லிலிருந்து எடுத்து தட்டில் வைக்கவும்.
இதே போல எண்ணெய் தடவி ஒவ்வொன்றாக சுட்டெடுக்கவும்.


பூண்டு மிளகாய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
தக்காளி சட்னி மற்றும் பூண்டு தக்காளி  சட்னியுடனும் நன்றாக இருக்கும்.

kanji dosai

குறிப்பு :
மாவை புளிக்க வைக்காமல் உடனேயும் தோசை தயாரிக்கலாம். சுவை சிறிது மாறுபடும்.





மேலும் சில உணவு வகைகள் முயற்சி செய்து சுவைக்க

மசால் தோசை
மசால் தோசை
ரவா இட்லி
ரவா இட்லி
ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை
கேவுரு அடை
கேவுரு அடை
ரவா தோசை
ரவா தோசை


இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழே உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.

No comments:

Post a Comment