Search This Blog

Wednesday, January 8, 2014

Rawa Idly

 #ரவாஇட்லி : முன்பெல்லாம் காலை சிற்றுண்டிக்காக ரவா இட்லி  செய்து கொண்டிருந்தேன். பிறகு இந்த டிபன் என்னுடைய காலை உணவு பட்டியலிலிருந்து மறைந்து போய் விட்டது. சில நாட்களுக்கு முன், என் மகள் தான்  http://www.sharmispassions.com/2012/07/rava-idli-recipe.html என்ற வலை தளத்தின்  சமையல் குறிப்பு படி ரவா இட்லி செய்ததாக கூறினாள். நானும் செய்து பார்க்கலாம் என களத்தில் இறங்கி விட்டேன். அதிலுள்ள  சமையல் குறிப்பை கருத்தில் எடுத்துக் கொண்டு என்னிடம் உள்ள பொருட்களுக்கு ஏற்றவாறு ரவா இட்லி செய்தேன். மிக மிக அருமையாக வந்தது. இதோ எப்படி என பார்ப்போம். 15 இட்லிகள் செய்ய அளவு சரியாக இருக்கும்.

ரவா இட்லி

தேவையான பொருட்கள் :
1 1/2 கப்                                       ரவா
1 கப்                                             தயிர்
1/2 Tsp                                          சமையல் சோடா
3/4 Tsp                                          உப்பு

ஊற வைக்க :
1 Tsp                                             உளுத்தம் பருப்பு
2 Tsp                                             கடலை பருப்பு

தாளிக்க :
5                                                   முந்திரி பருப்பு
1/2 Tsp                                          கடுகு
1 Tsp                                             கடலை பருப்பு
4 Tsp                                             நில கடலை இரண்டாக பிளந்தது
1 அ 2                                           பச்சை மிளகாய், பொடியாக அறியவும்
10 அ 15                                       கருவேப்பிலை, கிள்ளி வைக்கவும்
1 Tsp                                             இஞ்சி பொடியாக நறுக்கியது
1/4 Tsp                                          பெருங்காய பொடி ( விருப்பப்பட்டால் )
1 Tsp                                             நெய்
3 Tsp                                             எண்ணெய்

மாவுடன் கலக்க :
1/4 கப்                                         காரட் துருவியது
1                                                   வெங்காயம் பொடியாக நறுக்கவும் ( விருப்பப்பட்டால் )
1/4 கப்                                         குடை மிளகாய் பொடியாக நறுக்கியது ( விருப்பப்பட்டால் )
1 Tbsp                                           பச்சை பட்டாணி ( விருப்பப்பட்டால் )

செய்முறை :

ஊறவைக்க வேண்டிய பருப்பை கழுவி ஊற வைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ரவாவையும் உப்பையும் சேர்த்து தயிர் ஊற்றி கலந்து வைக்கவும். ஒரு அரை மணி நேரம் தனியாக வைக்கவும்.



அரைமணி நேரம் கழித்து அடுப்பில் வாணலியை வைத்து 1 Tsp நெய் ஊற்றி முந்திரியை இரண்டாக பிளந்து வறுத்தெடுக்கவும்.
தனியே ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
பிறகு 3 Tsp எண்ணெய் விட்டு சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
பிறகு கடலை பருப்பு மற்றும் நில கடலையை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
இப்போது பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை நன்கு வதக்கி எடுக்கவும்.


இப்போது கலந்து வைத்துள்ள மாவுடன் ஊற வைத்த பருப்பு, மாவுடன் கலக்க வேண்டியவை, மற்றும் தாளித்த பொருட்களை சேர்த்து நன்கு கலக்கவும்.


தேவை பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கவும். மாவு மிகவும் கெட்டியாகவோ அல்லது மிகவும் நீர்க்கவோ இருக்கக் கூடாது. மாவு

ரவா இட்லி மாவு

இட்லி பானையில் 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
மாவுடன் சமையல் சோடாவை நன்றாக கலந்து விடவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி ஒவ்வொரு குழியிலும் ஒரு கரண்டி மாவை ஊற்றவும்.
இட்லி பானையில் வைத்து மூடி ஆவியில் 10 நிமிடங்கள்  வேக வைக்கவும்.
ஒரு குச்சி கொண்டு இட்லியில் சொருகி பார்க்கவும். வெந்து விட்டால் மாவு குச்சியில் ஒட்டாமல் இருக்கும். வேகவில்லை என்றால் மேலும் 3 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
ஒரு தேக்கரண்டியால் இட்லியை எடுத்து பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து அடுக்கவும்.
பிறகு மறுபடியும் இட்லி தட்டில் எண்ணெய் தடவி மறு முறையும் மாவை ஊற்றி அடுப்பில் வேக வைத்து அடுத்த ஈடை எடுக்கவும்.

ஒவ்வொரு இட்லியின் மேலும் முந்திரியை வைத்து அலங்கரிக்கவும்.

ரவா இட்லி

ரவா இட்லியை பச்சை கொத்தமல்லி சட்னியுடன் அல்லது புதினா சட்னியுடன் அல்லது தேங்காய் சட்னியுடன் சுவைத்தால் அருமையாக இருக்கும்.

குறிப்பு : சமையல் சோடாவிற்கு பதில் Fruit Salt கலந்தும் ரவா இட்லியை செய்யலாம்.
1 கப் ரவாவுக்கு  1 1/2 Tsp  Fruit Salt என்ற விகிதத்தில் கலக்கவும்.




மற்ற இட்லி வகைகள்

சோள இட்லி
சோள இட்லி
இட்லி
இட்லி
கோதுமை ரவா இட்லி
கோதுமைரவா இட்லி
காஞ்சீபுரம் இட்லி
காஞ்சீபுரம் இட்லி
கம்பு இட்லி
கம்பு இட்லி
கள்ளாப்பம்
கள்ளாப்பம்
தொட்டுக்கொண்டு சாப்பிட

தொட்டுக்க


No comments:

Post a Comment