Search This Blog

Wednesday, September 24, 2014

Arisi Kara Pidi Kozhukattai

#அரிசிகாரபிடிகொழுக்கட்டை: விநாயகர் சதுர்த்தி அன்று  #மோதகம் செய்தது போக மேல் மாவு மீதம் இருந்தது. அதனை கடுகு, மிளகாய் மற்றும் பருப்பு தாளித்து நார்சத்தை மேம்படுத்த மேலும் சில பொருட்களை சேர்த்து ஆவியில் வேக வைத்து பிடி கொழுக்கட்டை செய்து ருசித்தோம். எப்படி என இனி காணலாம்.



தேவையான பொருட்கள் :
1/2 கப்                                            மோதகம் மேல் மாவு [அல்லது 1/2 கப் அரிசி மாவு]
1 tbsp                                              ஓட்ஸ்
1 tbsp                                              அமராந்த் விதைகள்
1/4 cup                                             தேங்காய் துருவல்
1/4 Tsp                                             சிகப்பு மிளகாய் தூள் [தேவையானால்]
1/2 Tsp                                             உப்பு

தாளிக்க :
1 Tsp                                                கடுகு
1 Tsp                                                உளுத்தம் பருப்பு
2 Tsp                                                கடலை பருப்பு
3 Tsp                                                நில கடலை
1 or 2                                               சிகப்பு மிளகாய், உடைத்து வைக்கவும்
10 or 12                                            கறுவேப்பிலை
1/4 Tsp                                             பெருங்காய தூள்
2 Tsp                                                எண்ணெய்

செய்முறை :
கொடுக்கப்பட்டுள்ள எல்லா வற்றையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
மேலும் சிறிது தண்ணீர் தெளித்து மாவை பிசைந்து வைக்கவும்.
மிகவும் கெட்டியாகவும் இருக்கக் கூடாது.
தளரவும் இருக்கக் கூடாது.
அரை மணி நேரம் ஊற விடவும்.
அமராந்த் விதைகள் ஊறினால்தான் வெந்தவுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

அரை மணி நேரம் கழித்து அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

முதலில் கடுகு தாளித்து, உடைத் மிளகாய் துண்டுகள் மற்றும் பெருங்காய தூள் சேர்த்த பின்னர் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கடலை ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.
பருப்பு சிவந்த பின்னர் கருவேப்பிலையை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
வறுத்தவற்றை மாவுடன் சேர்த்து கலந்து வைக்கவும்.

அடுப்பில் இட்லி பானையை வைத்து 3 கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
இட்லி தட்டின் மேல் எண்ணெய் தடவிவைக்கவும்.


இப்போது மாவை கையில் பிடித்து கொழுகட்டையாக்கி இட்லி தட்டின் மேல் அடுக்கவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் இட்லி பானையில் வைத்து 5 முதல் 7 நிமிடங்கள் வரை ஆவியில் வேக விடவும்.
வெந்ததும் எடுத்து சுவைக்க வேண்டியதுதான்.

பரிமாறும் தட்டில் வைத்து சட்னியுடன் பரிமாறவும்.


கொழுகட்டையே காரமும் சுவையும் கூடியதாக இருப்பதால் தொட்டுக் கொள்ள ஏதும் இன்றி கூட சுவைக்கலாம்.




No comments:

Post a Comment