#அவல்சக்கரைபொங்கல் : சர்க்கரையை விட வெல்லம் உடலுக்கு நல்லது. வெல்லத்தை கொண்டு செய்யப்படும் இனிப்புகள் அனைத்தும் ஒரு நல்ல நறுமணத்துடன் இருக்கும்.
கோகுலாஷ்டமி அன்று எப்போதும்தான் அரிசி கொண்டு #சர்க்கரைபொங்கல் செய்கிறோமே, அவல் உபயோகித்து செய்து பார்க்கலாமே என்று முயற்சி செய்தேன். மிக மிக அருமையாக அமைந்தது. அதன் செய்முறையை இதோ இங்கே பதிவேற்றுகிறேன்.
தேவையான பொருட்கள் :
1/2 கப் அவல்
1/4 கப் பயத்தம் பருப்பு [ பச்சை பருப்பு ]
1 pinch பச்சை கற்பூரம்
சிறு துண்டு ஜாதிக்காய், தூளாக்கி வைக்கவும்.
1 pinch உப்பு
1 கப் பால் [ இன்னும் அதிகமாகவும் எடுத்துக்கொள்ளலாம்.]
1/2 கப் வெல்லம் [ தேவைக்கு ஏற்ப கூட்டி குறைக்கவும் ]
3 Tsp நெய்
5 முந்திரி பருப்பு
செய்முறை :
அடுப்பின் மீது வாணலியை வைத்து மிதமான தீயில் சூடேற்றவும்.
பருப்பை சிவக்க வறுக்கவும். சிவக்க வறுத்த பின்னர் ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும். ஒருமுறை கழுவிய பின்னர் குக்கரில் வேக வைக்கவும்.
குக்கரை மூடி வெயிட் பொருத்தவும். அதிக தீயில் மூன்று விசில்கள் வரும் வரை வைத்திருந்து பின்னர் தீயை குறைத்து 3 நிமிடங்கள் வேக வைத்த பின்னர் அடுப்பை அணைக்கவும். ஆவி அடங்கிய பின்னர் குக்கரை திறக்கவும்.
பருப்பை வறுத்த அதே வாணலியில் நெய் சிறிது ஊற்றி முந்திரி பருப்பை சிவக்க வறுத்தெடுக்கவும். தனியே எடுத்து வைக்கவும்.
பின்னர் அதே வாணலியில் 1 தேக்கரண்டி நெய் விட்டு அவலை சிவக்க வறுக்கவும். தனியே எடுத்து வைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தை 1/4 கப் தண்ணீர் அடுப்பில் சூடாக்கவும்.
வெல்லம் கரையும் வரை கரண்டியால் கலக்கவும்.
வெல்லம் தண்ணீரில் முழுவதுமாக கரைந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
வெல்லத்தின் மாசுக்களை நீக்க வடிகட்டி தனியே வைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் 1/2 கப் பாலை விட்டு சூடாக்கவும்.
பால் கொதிக்க ஆரம்பிக்கும் போது அவலை சேர்க்கவும்.
ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
அவல் மிருதுவாகும் வரை பாலில் வேக விடவும்.
அவல் மிருதுவானவுடன் வேகவைத்த பருப்பை சேர்த்து கிளறவும்.
இரண்டும் ஒன்றாக சேர்ந்து கலந்த பின் வடி கட்டிய வெல்ல கரைசலை சேர்த்து கலக்கவும். 1/4 கப் பாலையும் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும்.
இல்லாவிடில் அடி பிடிக்க ஆரம்பித்துவிடும்.
கிளற கிளற பாலை உள்வாங்கி விடும்.
மறுபடியும் மீதமுள்ள பாலை சேர்த்து கிளறவும்.
ஒன்று சேர்ந்தாற்போல வரும் போது சிறிது நெய்யும் ஜாதிக்காய் பொடியையும் சேர்த்து கலக்கவும்.
அடுப்பை அணைத்த பின்னர் பச்சை கற்பூரம் சேர்த்து கலக்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைத்து மேலே நெய் தடவி வைக்கவும்.
வறுத்து வைத்துள்ள முந்திரியையும் தூவி விடவும்.
சுவையான அவல் சக்கரை பொங்கல் தயார்.
சூடாக சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
சூடு ஆறிய பிறகும் துண்டுகளாக்கி சாப்பிடலாம். சுவை இன்னும் அருமையாக இருக்கும். செய்துதான் பாருங்களேன்!!

ஜாதிக்காய் பொடி சேர்ப்பது என்பதை நிறைய சமையல் குறிப்புகளில் பார்க்கிறேன். ஜாதிக்காய் பொடி எதற்கு சேர்ப்பது.? நான் உபயோகிப்பதில்லை. தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன்.
ReplyDeleteஒரு சின்ன கோரிக்கை.
உங்கள் கமெண்ட்ஸ் செட்டிங்சில் verification நீக்கி விட்டால் கமெண்ட்ஸ் எழுத ஈசியாக இருக்கும். கமெண்ட்ஸ் போஸ்ட் செய்யும் பொது நந்தி மாதிரி குறுக்கிடுகிறது
ராஜலக்ஷ்மி,
Deleteதங்கள் கோரிக்கையை முதலில் நிறைவேற்றி விட்டேன்.
முழு ஜாதிக்காய் கொட்டை பாக்கு போல இருக்கும்
ஜாதிக்காய் [ Nutmeg ] பொதுவாக வெல்லம் கொண்டு செய்யப்படும் உணவு வகைகளுக்கு வாசனைக்காக பிரத்யேகமாக சேர்க்கப் படுகிறது. ஜாதிக்காயும் ஏலக்காயும் சேர்த்தும் பொடி செய்து அத்தகைய இனிப்புகளுக்கு சேர்க்கும் போது சுவையும் மணமும் சிறிது தூக்கலாக எடுத்துக் கொடுக்கும்.
நான் பால் பாயசம் செய்யும் போதும் ஜாதிக்காய் பொடி அல்லது ஜாதி பத்திரியை பொடி செய்து சேர்ப்பது வழக்கம். ஜாதி பத்திரி [ Maze ] என்பது ஜாதிக்காயை மேலே மூடியிருக்கும் இலை ஆகும். கடைகளில் கிடைக்கும் ஜாதி பத்திரி ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
பிரியாணி செய்யும் போதும் ஜாதிக்காய் அல்லது ஜாதிபத்திரியை சேர்க்கும் போது மணம் நன்றாக இருக்கும்.
தங்கள் வருகைக்கு நன்றி
This comment has been removed by the author.
ReplyDelete