#புளிசுண்டல் : இந்த பலகாரத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நானும் கேள்விப்பட்டதேயில்லை திருமணத்திற்கு முன்பு வரை! ஒரு சமயம் என்ன சிற்றுண்டி செய்யலாம் என எனது கணவரை கலந்து ஆலோசித்த போது இந்த புளிசுண்டல் பற்றி கூறினார்கள். அவர் கூறியபடி செய்தேன். என் மகளுக்கு மிகவும் பிடித்துப் போனது.
புளியோதரை போலவே இதன் சுவை இருக்கும். ஆனால் புளிப்பு சுவை சற்று மிதமாக இருக்கும். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப புளியின் அளவை கூட்டி குறைத்துக்கொள்ளலாம். மேலும் புளியோதரைக்கு சாதம் தனியாக கவனமுடன் வேக வைத்து ஆற விடவேண்டும். புளிகாச்சல் தனியாக செய்து வைக்கவேண்டும். ஆனால் புளி சுண்டலை அரைமணி நேரத்திற்குள் செய்து முடித்து விடலாம். இதற்கு உபயோகப் படுத்தப்படும் எண்ணெயின் அளவும் புளியிதரையை ஒப்பிடும் போது மிகக் குறைவே!!
இதோ இதன் சமையல் குறிப்பு.
தேவையான பொருட்கள் :
1 கப் பச்சரிசி
நெல்லி அளவு புளி,சுடுதண்ணீரில் ஊற வைக்கவும்
1/8 கப் கடலை பருப்பு
1/8 கப் நிலக்கடலை
2 அ 3 சிகப்பு மிளகாய்
10 - 15 கறுவேப்பிலை
1 Tsp கடுகு
சிறு துண்டு பெருங்காயம்
1 1/2 Tsp உப்பு
3 Tsp நல்லெண்ணெய்
1/4 Tsp மஞ்சத்தூள்
1/4 Tsp மிளகாய் தூள் [தேவையானால் ]
குறிப்பு : புளி சுண்டலை வேக வைக்க மொத்தம் 2 கப் திரவம் தேவை.
புளி கரைசல் 1/2 கப் இருக்குமாயின் தண்ணீர் 1 1/2 கப் எடுத்துக்கொள்ள வேண்டும்.
புளி கரைசல் + தண்ணீர் அளவு = 2 கப் தேவை.
அதற்கு ஏற்றவாறு தண்ணீர் அளவை கூட்டி குறைத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை :
புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி அளந்து தனியே எடுத்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கவும்.
அரிசியை போட்டு கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
அரிசியை இவ்வாறு வறுத்துக் கொண்டிருக்கும் போது நல்ல வெள்ளை நிறத்திற்கு மாறும்.
அப்போது ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் எண்ணெய் விடவும்.
மிதமான தீயில் சூடாக்கவும்.
முதலில் கடுகை வெடிக்க விடவும். அதன் பிறகு பெருங்காயம் மற்றும் சிகப்பு மிளகாயை கிள்ளி சேர்க்கவும்.
உடனேயே கடலை பருப்பையும் நிலகடலையையும் சேர்த்து வறுக்கவும்.
கடலை பருப்பு சிவந்தவுடன் கருவேப்பிலை, மஞ்சத்தூள் மற்றும் சிகப்பு மிளகாய் தூள் சேர்த்தவுடன் புளி கரைசலை அளந்து சேர்க்கவும்.
தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும்.
தீயை அதிகப் படுத்தி கொதிக்கவிடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் அரிசியை ஒரு முறை கழுவி விட்டு சேர்க்கவும்.
மூடி போட்டு தீயை குறைத்து வேக விடவும்.
அரசி வேக 10 நிமிடங்கள் ஆகும்.
இடையிடையே மூடியை திறந்து கிளறி விடவும்.
மூடி போட்டு வேக விட்ட பின்னர் எட்டு நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து சாத பருக்கைகளை நசுக்கி விடாமல் கிளறி விட்டு மூடி விடவும்.
சரியாக வெந்த பின் அடுப்பை அணைத்து விட்டு ஓரிரு நிமிடங்கள் அடுப்பின் சூட்டிலேயே மூடி போட்டு வைத்திருக்கவும்.
பின்னர் பரிமாறும் தட்டில் எடுத்து வைத்து சுவைக்கவும்.
மதிய உணவிற்கு எடுத்து செல்ல ஏற்ற உணவாகும்.
ஆற விட்ட பின் மூடி எடுத்து செல்லவும்.
தொட்டுக்கொள்ள ஏதேனும் பொரியல் அல்லது வற்றல் உபயோகப்படுதலாம்.
மேலும் சில அருமையான சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

|
|
|
||||||
|
|
No comments:
Post a Comment