#சிகப்புகீரைவடை : #கீரை என்றாலே சிறு பிள்ளைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சாப்பிடுவார்கள். உருட்டி மிரட்டிதான் சாப்பிட வைக்க வேண்டும். அதையே அவர்களுக்கு பிடித்தமான உணவில் தெரியாமல் கலந்து கொடுத்தால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சாப்பிடுவார்கள் அல்லவா?!! நமக்கும் சாப்பிட்டு விட்டார்களே என்ற திருப்தி கிடைக்கும்.
இங்கு சிகப்பு கீரையை உபயோகித்து வடை செய்யும் முறையை காண்போம்.
இதற்கு தேவையான உளுந்து மாவை இட்லிக்கு அரைக்கும் போது 1/2 கப் எடுத்துக் கொண்டுள்ளேன்.
தேவையான பொருட்கள் :
1/2 கப் உளுந்து மாவு
2 Tbsp ரவா
1 Tbsp அரிசி மாவு
1/4 கப் சிகப்பு கீரை, கழுவி பொடியாக நறுக்கியது
1/4 கப் காலி ப்ளவர் பொடியாக நறுக்கியது
1 Tbsp வெங்காயம் பொடியாக நறுக்கியது
1 Tsp கருவேப்பிலை பொடியாக நறுக்கியது
2 Tsp கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
1/2 Tsp பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
1 Tsp சீரகம்
1/2 Tsp உப்பு
எண்ணெய் பொரிப்பதற்கு
விருப்பமானால் இஞ்சி துண்டுகளை சேர்க்கலாம்.
செய்முறை :
மாவுடன் ரவா கலந்து அரைமணி நேரம் குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்.
அரை மணி நேரம் கழிந்த பின்னர் உப்பு, சீரகம், ஓமம் மற்றும் அரிசி மாவை சேர்க்கவும்.
இரண்டு பக்கமும் திருப்பி விட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
எண்ணெய் வடிய டிஷ்யு காகிதத்தின் மேல் எடுத்து வைக்கவும்.
சிகப்பு கீரை மட்டுமல்லாமல் முளை கீரை, சிறு கீரை ஆகியவற்றை உபயோகித்தும் கீரை வடை செய்யலாம். கீரை வடையை சூடாக சாப்பிட்டால் மிக அருமையாக இருக்கும்.

கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.
அடுப்பில் எண்ணெய் சட்டியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடேற்றவும்.
மாவை கலந்து வைக்கவும். சிறிது நீர்க்க இருந்தால் சிறிது அரிசி மாவைகலக்கிக் கொள்ளலாம்.
கையை ஈரப்படுத்திக் கொண்டு வட்டமாக தட்டி நடுவில் ஓட்டை இட்டு, எண்ணெய் நன்கு சூடானதும், போடவும்.
மாவை கலந்து வைக்கவும். சிறிது நீர்க்க இருந்தால் சிறிது அரிசி மாவைகலக்கிக் கொள்ளலாம்.
கையை ஈரப்படுத்திக் கொண்டு வட்டமாக தட்டி நடுவில் ஓட்டை இட்டு, எண்ணெய் நன்கு சூடானதும், போடவும்.
இரண்டு பக்கமும் திருப்பி விட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
எண்ணெய் வடிய டிஷ்யு காகிதத்தின் மேல் எடுத்து வைக்கவும்.
மாலை சிற்றுண்டிக்கு மிகவும் ஏற்றதாகும்.
தேங்காய் சட்னி அல்லது தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
சிகப்பு கீரை மட்டுமல்லாமல் முளை கீரை, சிறு கீரை ஆகியவற்றை உபயோகித்தும் கீரை வடை செய்யலாம். கீரை வடையை சூடாக சாப்பிட்டால் மிக அருமையாக இருக்கும்.
No comments:
Post a Comment