Search This Blog

Saturday, September 6, 2014

Tea

#Tea - #டீ - #தேநீர்  : முதன்முதலில் தேநீர் அருந்தும் பழக்கம் சீனர்களிடையே துவங்கியது. அவர்கள் தேநீரை அதன் மருத்துவ குணத்திற்காக பருகினார்கள். பின்னர் காலப் போக்கில் உலகில் பெரும்பான்மையானவர்கள் அருந்தும் ஒரு பானமாக ஆகிவிட்டது.
ஆங்கிலேயர்கள் தேநீர் அருந்தும் பழக்கத்தை இந்தியாவில் அறிமுகப் படுத்தினார்கள். பெரும்பாலும் பால் சேர்க்காமலேயே தேநீர் அருந்தப் படுகிறது. ஆனால் நாம்தான் பால் சேர்த்து தேநீரை சுவைக்கிறோம்.
இங்கு வட இந்தியாவில் பாலில் டீயையும் டீ மசாலா, இஞ்சி  மற்றும் ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து தேநீர் தயாரிக்கிறார்கள். இந்த முறையில் தயாரிக்கப் படும் தேநீரில் மசாலா சுவை தேநீரின் சுவையை மறைத்தே விடுகிறது.
ஆனால் நான் தேநீரில் மசாலா சேர்த்தாலும் இரண்டு நிமிடங்களுக்குள் வடி கட்டி விடுவேன். இதுபோல் தயாரிக்கப் படும் தேநீர் நல்ல தேநீர் மணத்துடன் சேர்க்கப்படும் மசாலா தூளின் மணமும் சிறிது கலந்து சுவையுடன் இருக்கும்.தேநீர் குடித்த திருப்தி கிடைக்கும்.
இனி தேநீர் எவ்வாறு செய்வது என பார்க்கலாம்.

தேநீர்

தேவையான பொருட்கள் :
இரண்டு தேநீர் கோப்பைகளுக்கான அளவு.
2 Tsp                                     தேநீர் இலைகள் [ டீ பொடி ]
1/2 அங்குல                      இஞ்சி [ விருப்பப்பட்டால் ]
2 Tsp                                      சர்க்கரை
1 கப்                                    தண்ணீர்
3/4 கப்                                  பால்


செய்முறை :
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
கொதித்த தண்ணீரில் தேநீர் இலைகளையும் நசுக்கிய இஞ்சியையும் சேர்க்கவும்.


மூடியினால் 2 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.


இரண்டு நிமிடம் ஆவதற்கு சில மணித்துளிகள் முன்பாகவே ஒரு தம்ளரில் வடிகட்டிவிடவும்.

தேநீர் டிகாஷனை வடிகட்டவும்

அடுப்பில் மற்றொரு பாத்திரத்தில் பாலை காய்ச்சவும்.

பால் காய்ச்சவும்


தேநீர் டிகாஷன் மற்றும் பால்

பால் பொங்கியவுடன் தேநீர் டிகாஷன் மற்றும் சர்க்கரை சேர்த்து ஆத்தவும்.

தேநீர் டிகாஷன்,பால் மற்றும் சர்க்கரை சேர்த்து ஆத்தவும்

தம்ப்ளரில் தேநீரை நுரை பொங்க ஊற்றவும்.

தம்ப்ளரில் தேநீரை நுரை பொங்க ஊற்றவும்

டபராவினுள் தேநீருடன் கூடிய தம்ப்ளரை வைத்து பரிமாறவும்.

டபராவில் தேநீரை பரிமாறவும்

சுவையான தேநீர் தயார்.

குறிப்பு:
இஞ்சியுடன் ஏலக்காய் சேர்த்தும் நசுக்கி போட்டு மசாலா தேநீர் தயாரிக்கலாம்.





மேலும் சில பானங்கள்

Green Tea with Mint
Green Tea with Tulsi
Lemon Ginger Juice
Panakam


No comments:

Post a Comment