Search This Blog

Showing posts with label lunch box. Show all posts
Showing posts with label lunch box. Show all posts

Monday, June 15, 2015

Onion-Curry

#வெங்காயகறி : மற்ற காய்கறிகளுடன் #வெங்காயம் சேர்த்து தொட்டுக்கொள்ள கறி செய்வது வழக்கம். வெங்காயம் மட்டுமே உபயோகித்து கறி செய்தால் எப்படி இருக்கும்?!!
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் எனது தாயார் பூரி செய்தால் மதிய உணவிற்கு டப்பாவில் எடுத்து செல்ல இந்த வெங்காய கறியை செய்து கொடுப்பார்கள். பூரி மசாலா எடுத்து சென்றால் பூரி மசாலாவில் ஊறி நசநசவென ஆகி விடும். அதனால் வெங்காய கறியை செய்து பூரியினுள் வைத்து சுருட்டி பூரி ரோல் வைத்து டப்பாவில் அடைத்து கொடுப்பார்கள். மிகவும் சுவையாக இருக்கும். சப்பாத்தியுடனும் வெங்காய கறி ரோல் செய்யலாம். ஆனால் வெங்காய கறி பூரி ரோல் மிகவும் சுவை மிகுந்த காம்பினேஷன் ஆகும்.
முதலில் வெங்காய கறியை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
அடுத்து பூரி மற்றும் சப்பாத்தி ரோல் செய்வது எப்படி என்றும் பார்ப்போம்.

வெங்காய கறி



தேவையான பொருட்கள் :
4 or 5வெங்காயம், மெல்லிய நீள துண்டுகளாக நறுக்கவும்
4 or 5கறுவேப்பிலை
1/4 Tspமஞ்சத்தூள்
1 Tspசாம்பார் பொடி
3/4 Tspஉப்பு
தாளிக்க :
3 Tspஎண்ணெய்
1/2 Tspகடுகு
1 Tspஉளுத்தம் பருப்பு
விருப்பட்டால் :
1/2 cupவெந்தய கீரை


செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் முதலில் கடுகு போட்டு வெடித்த பின்னர் உளுத்தம் பருப்பை சேர்க்கவும்.
பருப்பு பொன்னிறமானதும் வெங்காயம், சாம்பார் பொடி,  மஞ்சத்தூள் மற்றும் உப்பு  சேர்த்து வதக்கவும்.
அவ்வப்போது கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.
நன்கு வதங்கி பச்சை வாசனை போன பின் வெங்காயம் பளபளப்பாக வரும் வரை அடுப்பில் குறைந்த தீயில் வைத்திருக்கவும்.

வெங்காய கறி வெங்காய கறி
அடுப்பை அணைத்து விட்டு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். 

வெங்காய கறி

வெந்தய கீரை வெங்காய கறி :
வெந்தய கீரை எடுத்திருந்தால் கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
வெந்தய கீரையை கடைசியாக வெங்காய கறியை அடுப்பிலிருந்து இறக்கும் தருவாயில் சேர்க்கவும்.
ஒரு நிமிடம் கறியுடன் சேர்த்து வதக்கினால் போதுமானது.

அடுப்பை அணைத்து விட்டு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். 

Vengaya Venthayakeerai Curry [ Onion Fenugreek leaf Curry ] வெந்தய கீரை வெங்காய கறி
பூரி ரோல் மற்றும் சப்பாத்தி ரோல் செய்முறை :
பூரி தயாரித்த பின்னர் கையினால் அமுக்கி தட்டையாக்கி ஒரு தட்டில் வைக்கவும்.
அதன் மீது தயாரித்து வைத்துள்ள வெங்காய கறியை பரப்பவும்.
நன்கு இறுக்கமாக சுருட்டிய பின்னர் டிஷ்யு பேப்பரில் சுற்றி டப்பாவில் அடுக்கவும்.
இதே போல சப்பாத்தியின் மீது வைத்து இறுக்கமாக சுருட்டினால் சப்பாத்தி ரோல் தயார்.
poori rolls
வெங்காய கறி பூரி ரோல் சப்பாத்தி ரோல்




மற்ற சில சமையல் செய்முறைகள் : 
பூரி
பூரி
பூரி மசாலா
பூரி மசாலா
கொடி பசலை பூரி
கொடி பசலை பூரி
பாலக் சப்பாத்தி
சிகப்பு கீரை சப்பாத்தி
சிகப்பு கீரை சப்பாத்தி





Sunday, November 16, 2014

Kuthiraivaali Kothamalli Rice

#குதிரைவாலிகொத்தமல்லிசாதம் : #குதிரைவாலி #சிறுதானியம் வகைகளுள் ஒன்றாகும். இதற்கு ஆங்கிலத்தில் Barnyard Millet  என பெயர்.
இதனுடைய அறிவியல் பெயர் : Echinochloa frumantacea .
மற்ற சிறு தானியங்களை போல தாது உப்புக்கள் நிறைந்துள்ளது.
இதன் நார்சத்து மற்ற சிறு தானியங்கள் மற்றும் தானியங்களைக் காட்டிலும் அதிக அளவில் நிறைந்துள்ளது.

இதனை கொண்டு சில உணவு வகைகள் செய்யும் முறையை முன்பே பார்த்திருக்கிறோம். அவையாதெனில், குதிரைவாலி பொங்கல், குதிரைவாலி இட்லி, குதிரைவாலி வாழைப்பூ புலாவு , குதிரைவாலி உப்புமா .
இங்கு குதிரைவாலியுடன் கொத்தமல்லி சேர்த்து ஒரு #கலந்தசாதம் செய்வதெப்படி என காண்போம்.

குதிரைவாலி கொத்தமல்லி சாதம்

1/2 cup                                   குதிரைவாலி [ Barnyard millet ]
10                                           சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கவும்.
or
1                                            வெங்காயம், பொடியாக நறுக்கவும்.
6 cloves                                  பூண்டு, பொடியாக நறுக்கவும்.
1/2 cup                                  கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது.
1/2 Tsp                                  மிளகு சீரகபொடி 
1/2 Tsp                                  உப்பு 

To Temper :
1/2 Tsp                                  சீரகம்
2 Tsp                                     நெய்
2 Tsp                                     நல்லெண்ணெய் [ till / sesame oil ]

செய்முறை :
குக்கரில் அரிசியை கழுவி சேர்த்து 1 கப் தண்ணீர் விடவும்.
மூடி போட்டு வெயிட் வைத்து 3 விசில் வரும் வரை அதிக தீயில் வேக விடவும்.
பின்னர் தீயை குறைத்து 3 நிமிடங்கள் வேக விடவும்.
ஆவி அடங்கிய பின்னர் திறந்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி 1 Tsp நல்லெண்ணெய் ஊற்றி காற்றாடியின் கீழே வைத்து ஆற விடவும்.

குதிரைவாலி சாதம்

அடுப்பில் வாணலியை வைத்து 1 Tsp எண்ணெய் விட்டு சீரகத்தை வெடிக்க விடவும்.
பின்னர் வெங்காயத்தையும் பூண்டையும் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
பிறகு கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும்.
மிளகு சீரகப்பொடி மற்றும் உப்பு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி விட்டு அடுப்பை அணைத்து விடவும்

.

இதனை ஆறவிட்ட குதிரைவாலி சாதத்தின் மேல் கொட்டவும்.
நெய் விட்டு தேக்கரண்டியல் மென்மையாக கலந்து விடவும்.
உப்பு மற்றும் மிளகு காரம் சரி பார்க்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

குதிரைவாலி கொத்தமல்லி சாதம்

விருப்பமான பொரியல் அல்லது தயிர் பச்சடியுடன் சுவைக்கவும்.


குதிரைவாலி கொத்தமல்லி சாதம்

இதனை மற்ற கலந்த சாதங்களை போல மதிய உணவிற்காக டிபன் டப்பாவில் அடைத்து எடுத்துச் செல்லலாம். நன்கு ஆற விட்ட பிறகு அடைத்து மூடி போட்டு மூடி எடுத்துச் செல்வது நலம்.

வேறு சில சமையல் குறிப்புகள் :
குதிரைவாலி வாழைப்பூ புலாவ் குதிரைவாலி புளியோதரை வரகரிசி புளியோதரை

Sunday, August 3, 2014

Podi Dosai

#பொடிதோசை : #தோசை சுடும் போது மேலே பொடி தூவி சுட்டு எடுத்தால் பொடி தோசை தயார். நன்கு எண்ணெய் விட்டு மெத்தென்று சுட்டெடுத்தால் மதிய உணவிற்காக எடுத்து செல்ல அருமையான உணவாகும்.

பொடி தோசை
பொடி தோசை - ஆளி விதை பொடியுடன்
தேவையான பொருட்கள் :
இட்லி மாவு அல்லது தோசை மாவு

பாலக் அல்லது பசலை கீரை [ விருப்பப்பட்டால் ]

நல்லெண்ணெய்

செய்முறை :
கீரையை நல்ல தண்ணீரில் இரு முறை கழுவி நீரை வடித்துவிடவும்.
பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்து கலக்கவும்.
அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடாக்கவும்.
தோசை கல்லின் மேல் இரண்டு மூன்று சொட்டுகள் எண்ணெய் விடவும்.
ஒரு சிறு துணியை கொண்டு கல் முழுவதும் பரவுமாறு எண்ணெயை தடவி விடவும்.
தோசை கல்லின் நடுவில் மாவை வைத்து வட்டமாக கரண்டியின் அடிபாகத்தால் ஒரே அளவு தடிமன் கொண்டதாக வட்டவடிவத்தில் பரப்பவும்.
மேலே பொடியை தூவவும்.


பின்னர் தோசையின் மேல் நல்லெண்ணெய் தாராளமாக ஊற்றவும்.
தோசையின் ஓரங்கள் இலேசாக சிவக்க ஆரம்பித்ததும் தோசை திருப்பியினால் திருப்பி போடவும்.


வெந்தவுடன் தட்டில் எடுத்து அடுக்கவும்.

பொடி தோசை - ஆளி விதை பொடியுடன் 

இதே முறையில் ஒவ்வொரு தோசையாக சுட்டெடுக்கவும்.

மாவில் கீரை சேர்க்காமல் பொடி தோசை  :

மேலே குறிப்பிட்டுள்ள படி செய்ய வேண்டும்.
தோசை கல்லில் எண்ணெய் தடவி மாவை நடுவில் வைத்து வட்டமாக பரப்பிய பின்னர் மிளகாய் பொடியை மேலே தூவவும்.
தோசையின் மேல் நல்லெண்ணெய் ஊற்றவும்.


ஓரங்கள் சிவந்தவுடன் திருப்பிப் போட்டு வெந்தவுடன் எடுத்து தட்டில் அடுக்கவும்.



பொடி தோசை - மிளகாய் பொடியுடன் 

மதிய உணவிற்காக எடுத்து செல்வதாக இருந்தால் தோசை ஆற வைத்த பின்னர் எடுத்து உணவு எடுத்து செல்லும் பாத்திரத்தில் எடுத்து அடுக்கவும்.
மதிய உணவிற்காக தோசை சுடும் பொது நல்லெண்ணையை சிறிது தாராளமாக ஊற்றி சுட்டெடுக்கவும்.
அப்போதுதான் காய்ந்து போகாமல் இருக்கும். சாப்பிடும் போதும் தொண்டையை அடைக்காமல் இருக்கும்.




மேலும் சில சமையல் முறைகள் முயற்சி செய்து பார்க்க :

தோசை மாவு
தோசை மாவு
தோசை
தோசை
கம்பு தோசை
கம்பு தோசை
மசால் தோசை
மசால் தோசை
ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை






இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.


Friday, July 25, 2014

Jeera Rice

#சீரகசாதம் : சீரக சாதம் எளிமையாகவும் மிக சுலபமாகவும் செய்ய கூடியது. நான் வசிக்கும் ராய்ப்பூரில் மதிய உணவு மற்றும் இரவு உணவு ஆகியவற்றில் பூரி அல்லது ரொட்டியுடன் சீரக சாதமே பரிமாறப்படுகிறது.

இந்த சீரக சாதத்தின் மேல் பருப்பு விட்டு சாப்பிடுகிறார்கள்.
இனி எவ்வாறு செய்வது என காணலாம்.

சீரக சாதம்

தேவையான பொருட்கள் :
1/2 கப்                                      பாசுமதி அரிசி அல்லது பச்சரிசி
1 Tsp                                         சீரகம்
1                                               அன்னாசி மொக்கு
1                                               ப்ரிஞ்சி இலை
1 அங்குல                            இலவங்க பட்டை துண்டு
1 Tbsp                                      பச்சை பட்டாணி [ இருந்தால் ]
2 Tsp                                        நெய் அல்லது எண்ணெய்
1 Tsp                                        வெள்ளை மிளகுத்தூள் [ விரும்பினால் ]

செய்முறை :

அரிசியை ஒரு முறை கழுவி நீரை வடித்து விட்டு நல்ல தண்ணீரில் ஊற வைக்கவும்.

அடுப்பில் குக்கரை வைத்து நெய் விட்டு சூடாக்கவும்.
சீரகத்தை முதலில் வெடிக்க விடவும்.
பின்னர் மற்ற வாசனை பொருட்களை போட்டு வறுக்கவும்.

ஊறிக்கொண்டிருக்கும் அரிசியில் இருந்து தண்ணீரை வடித்து விட்டு குக்கரில் சேர்க்கவும்.

சிறிது நேரம் வறுக்கவும். நன்கு வெள்ளை நிறமாக அரிசி மாறியவுடன் பட்டாணியை சேர்க்கவும்.

தேவையான அளவு உப்பு மற்றும் 1 கப் தண்ணீர் சேர்க்கவும்.
கரண்டியால் நன்கு கலக்கிய பின்னர் மூடி வெயிட் பொருத்தவும்.

அதிக தீயில் 3 விசில் வரும் வரையும், பின்னர் சிறிய தீயில் 3 நிமிடங்கள் வரையும் வேக விடவும்.
அடுப்பை அணைத்து விடவும்.

நீராவி முழுவதுமாக வெளியேறும் வரை காத்திருக்கவும்.
இதற்கு சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் ஆகும்.

சீரக சாதம்

பின்னர் திறந்து மிளகு தூளை சேர்த்து கரண்டியால் கிளறி பரிமாறும் தட்டில் எடுத்து வைக்கவும்.
இங்கு சுரைக்காய் மோர் குழம்புடன் பரிமாறப் பட்டுள்ளது.

சீரக சாதம்

தங்களுக்கு விருப்பமான குருமா அல்லது பன்னீர் மசாலாவுடனும் சுவைக்கலாம்.




Friday, May 9, 2014

Podi Idly

#பொடிஇட்லி : மதிய உணவிற்காக கட்டி எடுத்துச் செல்ல இட்லி மிளகாய் பொடி தடவிய #இட்லி ஒரு அருமையான உணவாகும். சரியான முறையில் எண்ணெய் மற்றும் இட்லி மிளகாய் பொடி தடவி ஆற வைத்து டிபன் பத்திரத்தில் அல்லது பொட்டலம் கட்டி எடுத்து சென்றால் இரண்டு தினங்களுக்கு கூட கெடாமல் இருக்கும். இனி எப்படி என காணலாம்.


தேவையான பொருட்கள் ;
இட்லி தேவையான எண்ணிக்கை
இட்லி மிளகாய் பொடி தேவையான அளவு
நல்லெண்ணெய் தேவையான அளவு
எடுத்து வைக்க மூடியுடன் கூடிய டிபன் பாத்திரம்.

செய்முறை :
சிறிது சூடாக இருக்கும் இட்லியின் இரண்டு புறமும் நன்கு எண்ணெய் தடவவும்.
பின்னர் மேல் பக்கத்தில் ஒரு தேக்கரண்டி [அவரவர் காரத்திற்கேற்ப ] வைத்து 1/2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து தடவவும்.


பின் பக்கமும் அதே போல மிளகாய் பொடி தடவி வைக்கவும்.


நன்கு ஆறிய பின்னர் டிபன் பாத்திரத்தில் எடுத்து அடுக்கவும்.
மூடியால் மூடுவதற்கு முன் இட்லி நன்கு ஆறி விட்டதா என உறுதி செய்த பின்னரே மூட வேண்டும்.

வாழை இலைகொண்டும் கட்டி வைக்கலாம்.



மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
இட்லி மாவு குதிரைவாலி இட்லி இட்லி சுடும் முறை
இட்லி உப்புமா சோள இட்லி

தொட்டுக்கொண்டு சாப்பிட

தொட்டுக்க



இந்த சமையல் செய்முறை விளக்கம்  மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.