ரசம் : தமிழர் சமையலில் மதிய உணவு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ரசம்தான். அடிப்படையில் ரசம் என்பது புளிப்பும் காரமும் சரி விகிதத்தில் கலந்து செய்யப்படும் சூப் என்றே கூறலாம். இதில் புளி, மிளகாய் மட்டுமல்லாமல் மிளகு, சீரகம் போன்ற உடலுக்கு நலம் தரக்கூடிய பொருட்கள் உபயோகப் படுத்தப்படுகிறது. ஒவ்வொருவரும் வெவ்வேறு முறையில் ரசம் செய்தாலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறைதான் அடிப்படையானது.
இனி எவ்வாறு செய்வது என பார்க்கலாம்.
கொடுக்கப்பட்டுள்ள அளவு தோராயமாக 2 கப் செய்ய போதுமானது. மூன்று பேருக்கு தாராளமாக போதும். நான்கு பேர் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் :
1 தக்காளி - நாட்டு தக்காளி நல்லது
2 பூண்டு பற்கள் நசுக்கி கொள்ளவும்
1 1/2 tsp உப்பு ( adjust )
நெல்லி அளவு புளி, தண்ணீரில் ஊற வைக்கவும்.
1 Tbsp வேக வைத்த துவரம் பருப்பு
1 சிட்டிகை மஞ்சத்தூள்
அரைக்க :
1/2 Tsp மிளகு
1/2 Tsp சீரகம்
1/4 Tsp மல்லி விதை ( தனியா )
1 அ 2 சிவப்பு மிளகாய்
6 கருவேப்பிலை
2 பற்கள் பூண்டு
தாளிக்க :
1 Tsp கடுகு
1 சிறிய துண்டு பெருங்காயம்
6 கருவேப்பிலை
1 Tsp நல்லெண்ணெய்
அலங்கரிக்க :
கொத்தமல்லி தழை சிறிது
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் பருப்பை 1 கப் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும்.
தக்காளியை துண்டுகளாக்கி போடவும். நசுக்கிய பூண்டு மற்றும்
உப்பு சேர்க்கவும்.
கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸ்யில் கொரகொரவென அரைத்து பாத்திரத்தில் சேர்க்கவும்.
மேலும் தண்ணீர் விட்டு மிக்ஸியை கழுவி அந்த தண்ணீரையும் சேர்க்கவும்.
அடுப்பை பற்ற வைத்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
புளியை கரைத்து வடிகட்டி அதையும் கொதிக்கும் ரசத்தில் சேர்க்கவும்.
பருப்பு மற்றும் புளி கரைக்க மற்றும் மிக்ஸியை கழுவி ஊற்றிய தண்ணீர் எல்லாம் சேர்த்து சுமார் 1 1/2 கப் முதல் 1 3/4 இருக்கலாம்.
ஆக மொத்தம் 2 கப்பிறகு குறைவாக தண்ணீர் சேர்க்கலாம்.
கொதித்து மேலே நுரை பொங்கி வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.
இப்போது அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
கடுகு வெடித்தபின் பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை போட்டு தாளித்து ரசத்தின் மேல் சேர்க்கவும்.
பரிமாறுவதற்கு முன் கொத்தமல்லி தழை சேர்க்கவும்.
சுவையான மணம் மிகுந்த ரசம் தயார்.
குறிப்பு :
எண்ணெய் சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
கடுகு வெடித்தபின் பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை போட்டு தாளித்து ரசத்தின் மேல் சேர்க்கவும்.
பரிமாறுவதற்கு முன் கொத்தமல்லி தழை சேர்க்கவும்.
சுவையான மணம் மிகுந்த ரசம் தயார்.
குறிப்பு :
- அவரவர் சுவைக்குத் தக்கபடி புளியின் அளவை கூட்டி குறைத்துக் கொள்ளவும்.
- காரம் அதிகம் விரும்புகிறவர்கள் மிளகு மற்றும் மிளகாயின் அளவை அதிகப் படுத்திக் கொள்ளவும்.
No comments:
Post a Comment