Search This Blog

Wednesday, December 11, 2013

Saamai Arisi Pongal

#சாமைஅரிசிபொங்கல் : #சாமைஅரிசி யை ஆங்கிலத்தில் #LittleMillet என்று  அழைக்கப்படுகிறது. ஹிந்தியில் குட்கி என அழைக்கிறார்கள். இதன் அறிவியல் பெயர் Panicum miliare ஆகும்.
சாமை அரிசியை பற்றி அறிய சொடுக்கவும் இணைப்பை சாமை.

The Nutritional composition per 100 gm : 
Protein                                  7.7 %
Fat                                        4.7 %
Fibre                                     7.6 %
Calcium [ mg/100 gm ]         17 %
Iron [ mg/100gm protein ]     9.3 %

அரிசியில் செய்வது போலவே சாமையை உபயோகித்தும் பொங்கல் செய்யலாம். அருமையாக இருக்கும். சாமை அரிசியில் கற்கள் மிகுந்து இருக்கும். அதனால் தண்ணீர் விட்டு அரித்து எடுத்துக்கொள்ளவும். இனி எப்படி செய்வது என பாப்போம்.

சாமை அரிசி பொங்கல்

தேவையான பொருட்கள் :
சாமை அரிசி                                  : 3/4 கப்
பயத்தம் பருப்பு                              : 1/4 Cup
பச்சை மிளகாய்                            : 1 அ 2 ( விருப்பப்பட்டால் )
சீரகம்                                               : 1 1/2 Tsp
மிளகு                                              : 1 Tsp
மிளகுத்தூள்                                   : 1 Tsp
கருவேப்பிலை                               : 10 - 15
பூண்டு பல்                                       : 3
மஞ்சத்தூள்                                     : 3 சிட்டிகை
உப்பு                                                  : 1 Tsp ( அட்ஜஸ்ட் )

தாளிக்க :
சீரகம்                                                          : 1 Tsp
மிளகு                                                         : 1 Tsp
கருவேப்பிலை                                         : 8
முந்திரி பருப்பு                                         : 5
நெய்                                                           : 2 Tsp

செய்முறை :
கழுவி அரித்து வைத்துள்ள சாமை அரிசியுடன்  பருப்பையும் நன்றாக கழுவி குக்கரில் எடுத்துக் கொள்ளவும்.
மற்ற பொருட்களையும் சேர்க்கவும்.
3 1/2 கப் தண்ணீர்ஊற்றவும்.


ஒரு கரண்டியினால் கலக்கி விடவும்.
குக்கரை மூடி விசிலை பொருத்தவும்.
அடுப்பில் அதிக தீயில் 3 விசில் வரை வேக விடவும்.
மேலும் 5 நிமிடங்கள் சிறிய தீயில் வேக வைத்து இறக்கவும்.
ஆவி அடங்கியவுடன் மூடியை திறந்து கரண்டியினால் கிண்டவும்.

எண்ணெய்  சட்டியை அடுப்பில் மிதமான தீயில் வைத்து நெய் ஊற்றி முதலில் முந்திரி துண்டுகளை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு சீரகம், மிளகு, பச்சை மிளகாய் துண்டுகள் மற்றும் கருவப்பிலை வறுத்து எடுக்கவும்.

வறுத்த பொருட்களை பொங்கலுடன் சேர்த்து கிண்டவும்.
சூடான சுவையான பொங்கல் தயார்.

பரிமாறும் தட்டில் இட்டு அதன் மேல் நெய் விட்டு துவையலுடன் பரிமாறவும்.






மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
சாமை உப்புமா
சாமை
உப்புமா
சாமை பிசிபெளேபாத்
சாமை 
பிசிபெளேபாத்




No comments:

Post a Comment