Search This Blog

Showing posts with label பாலக் கீரை. Show all posts
Showing posts with label பாலக் கீரை. Show all posts

Friday, June 13, 2014

Palak Chappathy

#பாலக் #சப்பாத்தி : பாலக் கீரையில் உள்ள இரும்பு சத்து எளிதில் உடலில் சேரக்கூடியதாக இருப்பதால் ரத்த சோகை மற்றும் இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் இதனை தினமும் உண்ணுவது நல்லது.

மேலும் போலிக் ஆசிட் இருப்பதால் கர்ப்பிணிகள் இதனை எடுத்துக்கொள வேண்டும்.

பால் கொடுக்கும் தாய் மார்கள் பால் அதிகம் சுரக்க இந்த கீரையை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்வது நல்லது.

தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய புரத சத்து இருகிறது. அதனால் தினமும் எடுத்துகொண்டால்  இருதய கோளாறு மற்றும் ரத்த குழாய்கள் அடைப்பு போன்றவை வராமல் தடுக்கலாம்.

பாலக் மசியல், பாலக் கூட்டு மற்றும் பாலக் பருப்பு போன்ற உணவு வகைகள் செய்யலாம்.

மிக எளிதில் வேகக் கூடியது. அதனால் இந்த கீரையை உபயோகித்து  சப்பாத்தி செய்தேன். மிக நன்றாக வந்தது. அதனை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.



தேவையான பொருட்கள் :


2 கப்                                     கோதுமை மாவு [ multi grain whole wheat flour ]
1/2 Tsp                                  ஓமம்
1/2 Tsp                                  சீரகம்
1/4 Tsp                                  கருஞ்சீரகம்
3/4 Tsp                                  உப்பு [ அட்ஜஸ்ட் ]
2 Tsp                                     நல்லெண்ணெய்
1/2 கப்                                  பாலக் கீரை பொடியாக நறுக்கியது

சப்பாத்தி சுட்டெடுக்க தேவையான எண்ணெய்

செய்முறை :
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மாவை எடுத்துக்கொள்ளவும்.
மற்ற பொருட்களையும் சேர்க்கவும். முதலில் கையினால் பிசறி விடவும்.



பிறகு தண்ணீர் விட்டு பிசையவும்.
சிறிது கெட்டியான மாவாக பிசையவும்.


இப்போது 2 Tsp எண்ணெய் விட்டு நன்கு மிருதுவாகும் வரை பிசையவும்.
சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

கீரையில் நீர் சத்து அதிகம் உள்ளதால் நேரம் ஆக ஆக மாவு நீர்த்து போய் விடும். அதனால் பிசைந்தவுடன் சுட்டெடுப்பது நல்லது.

மாவு தொட்டு தொட்டு வட்ட வட்ட ரொட்டிகளாக திரட்டி வைக்கவும்.
அடுப்பில் தோசை கல்லை சூடாக்கவும்.


திரட்டிய மாவை சூடான கல்லில்  இட்டு ஒன்றிரண்டு துளிகள் எண்ணெய் விட்டு தடவி இரண்டு பக்கமும் சுட்டு எடுக்கவும்.


சூடாக கல்லில் இருந்து எடுத்தவுடனேயே காலிப்ளவர் காளான் குருமா அல்லது உருளைகிழங்கு மசாலாவுடன்  சுவைக்கவும்.


மற்ற சப்பாத்தி வகைகள் :

Buckwheat Roti 
சிகப்பு கீரை சப்பாத்தி 







Tuesday, December 3, 2013

Palak Keerai Masiyal

#பாலக்கீரைமசியல் : எல்லா வகையான கீரைகளும்  மசியலுக்கு ஏற்றதல்ல. முளை கீரை, அரை கீரை மற்றும் பாலக் கீரை போன்ற சில கீரைகளைக் கொண்டு மசியல் செய்தால் மட்டுமே  நல்ல சுவையுடன் இருக்கும். நான் வசிக்கும் சட்டிஸ்கரிலுள்ள ராய்ப்பூரில் ஒரு சிகப்பு முளை கீரை கிடைக்கிறது. அதில் கீரை மசியல் செய்தாலும் நன்றாக இருக்கிறது. ஆனால் கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருக்கும் போது ஒரு சிகப்பு தண்டு கீரை வாங்குவோம். அந்த கீரையில் மசியல் சுவையாக இருக்காது.


 வீட்டில் பெரியவர்கள் இருந்தால் மத்தை கொண்டு கடைந்தால்தான் கீரை மசியல் நன்றாக இருக்கும். மிக்ஸ்யில் இந்த காலத்தில் செய்வதால் சுவையே இல்லை என்பார்கள். ஆனால் நான் இங்கு கொடுக்கப்போகும் முறையில் செய்து பாருங்கள்!! நாம் சவால் விடலாம் மத்தால் அல்ல மிக்ஸ்யாலும் ( with mixie ) அதே சுவையை கொடுக்க முடியும் என்று!!

தேவையான பொருட்கள் :
பாலக் கீரை                           : 1 கைப்பிடி
பூண்டு  பற்கள்                       : 2
உப்பு                                           : 1/4 Tsp ( அட்ஜஸ்ட் )

செய்முறை :
குக்கரை அடுப்பில் வைத்து 1/2 கப் தண்ணீர் விடவும்.
கழுவிய கீரையை சேர்த்து மூடி வெயிட் வைத்து 1 விசில் வரை வேக விடவும்.
விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

குக்கரிலிருந்து நீராவியை உடனடியாக வெளியேற்றவும்.
வெயிட்டை சிறிது சிறிதாக தூக்கி நீராவியை வெளியேற்றவும்.
அல்லது குழாயின் அடியில் வைத்து தண்ணீரை குக்கரின் மேல் ஓட விடவும்.
நீராவி உடனே அடங்கி விடும்.

கீரையை எடுத்து தனியாக வைக்கவும்.
சூடு ஆறும் வரை பொறுத்திருக்கவும்.

கீரை வெந்த தண்ணீரை கீழே கொட்டி விடாதீர்கள்.
அதை ரசத்திலோ அல்லது சாம்பாரிலோ சேர்க்கலாம்.

மிக்ஸியில் உறித்த  பூண்டு பல்லை போட்டு ஒரு சுற்று சுற்ற விடவும்.
பிறகு திறந்து கீரையையும் உப்பையும் சேர்த்து சில மணித்துளிகள் அரைக்கவும்.

திப்பி திப்பியாக இருக்க வேண்டும். மைய அரைக்கக் கூடாது.

ஒரு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.


சூடான சாதத்தில் ஒன்றிரண்டு தேக்கரண்டி கீரை மசியலை போட்டு 1 Tsp நல்லெண்ணெய் விட்டு பிசைந்து முருங்கைக்காய் சாம்பார் அல்லது வத்தக்குழம்பு தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் ... சுவையே அலாதிதான்!!





சில சமையல் வகைகள் சமைத்து ருசிக்க

அரைக்கீரை மசியல்
அரைக்கீரை மசியல்
சிகப்பு முளை கீரை மசியல்
சிகப்பு கீரை மசியல்
பால் சாறு ( அ ) கழனி சாறு
பால் சாறு
முள்ளங்கி கீரை பொரியல்
முள்ளங்கிகீரை ..
முடக்கத்தான் கீரை தோசை
முடக்கத்தான் தோசை