Search This Blog

Showing posts with label palak. Show all posts
Showing posts with label palak. Show all posts

Friday, June 13, 2014

Palak Chappathy

#பாலக் #சப்பாத்தி : பாலக் கீரையில் உள்ள இரும்பு சத்து எளிதில் உடலில் சேரக்கூடியதாக இருப்பதால் ரத்த சோகை மற்றும் இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் இதனை தினமும் உண்ணுவது நல்லது.

மேலும் போலிக் ஆசிட் இருப்பதால் கர்ப்பிணிகள் இதனை எடுத்துக்கொள வேண்டும்.

பால் கொடுக்கும் தாய் மார்கள் பால் அதிகம் சுரக்க இந்த கீரையை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்வது நல்லது.

தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய புரத சத்து இருகிறது. அதனால் தினமும் எடுத்துகொண்டால்  இருதய கோளாறு மற்றும் ரத்த குழாய்கள் அடைப்பு போன்றவை வராமல் தடுக்கலாம்.

பாலக் மசியல், பாலக் கூட்டு மற்றும் பாலக் பருப்பு போன்ற உணவு வகைகள் செய்யலாம்.

மிக எளிதில் வேகக் கூடியது. அதனால் இந்த கீரையை உபயோகித்து  சப்பாத்தி செய்தேன். மிக நன்றாக வந்தது. அதனை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.



தேவையான பொருட்கள் :


2 கப்                                     கோதுமை மாவு [ multi grain whole wheat flour ]
1/2 Tsp                                  ஓமம்
1/2 Tsp                                  சீரகம்
1/4 Tsp                                  கருஞ்சீரகம்
3/4 Tsp                                  உப்பு [ அட்ஜஸ்ட் ]
2 Tsp                                     நல்லெண்ணெய்
1/2 கப்                                  பாலக் கீரை பொடியாக நறுக்கியது

சப்பாத்தி சுட்டெடுக்க தேவையான எண்ணெய்

செய்முறை :
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மாவை எடுத்துக்கொள்ளவும்.
மற்ற பொருட்களையும் சேர்க்கவும். முதலில் கையினால் பிசறி விடவும்.



பிறகு தண்ணீர் விட்டு பிசையவும்.
சிறிது கெட்டியான மாவாக பிசையவும்.


இப்போது 2 Tsp எண்ணெய் விட்டு நன்கு மிருதுவாகும் வரை பிசையவும்.
சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

கீரையில் நீர் சத்து அதிகம் உள்ளதால் நேரம் ஆக ஆக மாவு நீர்த்து போய் விடும். அதனால் பிசைந்தவுடன் சுட்டெடுப்பது நல்லது.

மாவு தொட்டு தொட்டு வட்ட வட்ட ரொட்டிகளாக திரட்டி வைக்கவும்.
அடுப்பில் தோசை கல்லை சூடாக்கவும்.


திரட்டிய மாவை சூடான கல்லில்  இட்டு ஒன்றிரண்டு துளிகள் எண்ணெய் விட்டு தடவி இரண்டு பக்கமும் சுட்டு எடுக்கவும்.


சூடாக கல்லில் இருந்து எடுத்தவுடனேயே காலிப்ளவர் காளான் குருமா அல்லது உருளைகிழங்கு மசாலாவுடன்  சுவைக்கவும்.


மற்ற சப்பாத்தி வகைகள் :

Buckwheat Roti 
சிகப்பு கீரை சப்பாத்தி 







Monday, December 23, 2013

Mushroom Palak Soup

#காளான்பாலக்சூப்  #மஷ்ரூம்பாலக்கீரைசூப் : #சூப் பை தமிழில் சத்தான கஞ்சி என கூறலாம். அந்தந்த காலங்களில் கிடைக்கும் காய்கறிகள், கீரை வகைகள் ஆகியவற்றை சில உடைத்த தானிய வகைகளுடன் சேர்த்து கொதிக்க வைத்து மிளகுடன் சேர்த்து பருகும் போது தேவையான சத்துக்கள் நம் உடலில் சேர்கிறது. சூப்பை செய்தவுடன் சூடாக பருகுவது அவசியம். மறுபடி மறுபடி கொதிக்க வைத்தால் சூப்பில் சேர்த்துள்ள காய் மற்றும் கீரை அதிகமாக வெந்து அதன் சத்து நமக்கு கிடைக்காமல் போக வாய்ப்பு அதிகம்.
சூப் கஞ்சி பதத்திற்கு கொண்டு வருவதற்காக பெரும்பாலும் சோள மாவு அல்லது சில சமயங்களில் மைதா மாவு சேர்க்கப் படுகிறது. அதற்கு பதிலாக உடைத்த கோதுமை, ஓட்ஸ், உடைத்த மக்காசோளம், உடைத்த கம்பு போன்ற தானிய வகைகளை சேர்ப்பதால் நார்சத்து அதிக அளவில் கிடைக்கும்.

 #பாலக்கீரை யும் காளானும் புத்தம் புதியதாக நேற்று மாலை வாங்கி வந்தேன். உடனே ஏதாவது செய்து சாப்பிடலாம்  என யோசித்த போது.... சூப் செய்யலாம் என முடிவெடுத்தேன். இனி எப்படி செய்வது  என பார்ப்போம்.

காளான் பாலக் சூப்


தேவையான பொருட்கள் :
காளான் பாலக் கீரை

1 Tbsp                                    ஓட்ஸ்
2 அ 3                                     பட்டன் காளான் ( button mushroom )
1/2 கப்                                   பொடியாக நறுக்கிய பாலக் கீரை
2 Tsp                                       பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை
2 Tsp                                       பொடியாக நறுக்கிய வெங்காயம்
1 Tsp                                       பொடியாக நறுக்கிய பூண்டு
1/2 Tsp                                    உப்பு
1/4 Tsp                                    வெண்ணெய்

சுவை கூட்ட :
தேவையான அளவு மிளகுதூள்.
2 Tsp  பொடியாக நறுக்கிய வெங்காய தாள் .

செய்முறை :
மைக்ரோவேவில் வைக்கக் கூடிய ஒரு கண்ணாடி அல்லது பீங்கான் கிண்ணத்தில் வெண்ணெய் எடுத்து கொள்ளவும்.
5 நொடி சூடாக்கவும். வெளியே எடுத்து வெங்காயத்தை சேர்த்து 15 நொடிகள் சூடாக்கவும். வெங்காயத்தின் நிறம் சற்றே மாறி வாசனை வந்தால் போதும்.

இண்டக்ஷன் அடுப்பில் 800 வெப்ப அளவில் வைத்து ஒரு பாத்திரத்தில்  1 கப் தண்ணீரை  சூடாக்கவும்.
சின்ன சின்ன காற்று குமிழ்கள் பாத்திரத்தில் அடியில் வர ஆரம்பித்தவுடன் வதக்கிய வெங்காயம் மற்றும் ஓட்ஸ் சேர்த்து கலக்கி விடவும்.
ஓட்ஸ் சேர்த்த பிறகு  வெப்ப அளவை 120 கு குறைத்து விடவும்.
ஓட்ஸ் முக்கால் பாகம்  வெந்தவுடன் கீரை மற்றும் கொத்தமல்லியை சேர்க்கவும்.
3 அல்லது 4 நிமிடங்கள் 120 வெப்ப அளவிலேயே வேக விடவும்.
கடைசியாக கழுவிய காளானை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து மேலும்


இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடவும்.

வெங்காயத்தை வதக்கிய கிண்ணத்தில் பூண்டை ஒரு துளி வெண்ணை சேர்த்து பொன்னிறமாக மைக்ரோவேவ் செய்துக் கொள்ளவும்.

சூப் கிண்ணத்தில் சூப்பை ஊற்றி பூண்டு , வெங்காயத்தாள் மற்றும் மிளகுதூள்
தூவி பருகவும்.

காளான் பாலக் சூப்

மற்ற சூப் பற்றி அறிய :
மஷ்ரூம் சூப்
மஷ்ரூம் சூப்
கொத்தமல்லி சூப்
கொத்தமல்லி சூப்
தக்காளி சூப்
தக்காளி சூப்
பப்பாளிக்காய் சூப்
பப்பாளிக்காய் சூப்

Monday, November 18, 2013

Spinach Sorghum Stirfry

பசலை கீரை சோளம் வதக்கல் : சோளம் சிறுதானிய வகையில் ஒன்றாகும். இத்தானியம் ஆங்கிலத்தில் Sorghum என்று அழைக்கப்படுகிறது. சோளம் பரவலாக எல்லாராலும் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. கர்நாடகாவில் சோளமாவை ரொட்டி தயாரிக்க பயன் படுத்துகிறார்கள். நான் பொதுவாக சோள  மாவை பயன் படுத்தி தோசை தயாரிப்பேன். தற்போதுதான் முழு தானியமாக பயன் படுத்த துவங்கியுள்ளேன். இந்த தானியம் வேக சிறிது நேரமாகும். வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து பிறகு தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
1 Cup சோளத்திற்கு 2 Cup தண்ணீர் சரத்து வேக வைக்க வேண்டும்.
குக்கரில் 3 விசில் வந்தவுடன் சிறிய தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.
ஆவி நன்கு அடங்கியவுடன் குக்கரை திறக்கவும்.
நன்றாக மலர்ந்து வெந்து இருக்கிறதா என்று பார்க்கவும்.
இல்லையென்றால் மீண்டும் ஒரு 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.


தேவையான பொருட்கள் :
வேகவைத்த சோளம்     : 1 Cup
கடுகு                                     : 1/2 Tsp
கடலை பருப்பு                  : 1 Tsp
நிலக்கடலை                     : 2 Tsp
பெருங்காய தூள்             : 2 சிட்டிகை
சிகப்பு மிளகாய்                : 1 ( அட்ஜஸ்ட் )
பசலை கீரை                      : 1 Cup

பெரிய வெங்காயம்         : 1 சிறியது
காரட் துண்டுகள்              : 2 Tsp
நல்லெண்ணெய்              : 2 Tsp
மிளகுத்தூள்                        : 1/2 Tsp 

செய்முறை :
வாணலியை அடுப்பில் வைத்து 2 Tsp எண்ணெய்  விடவும்.
கடுகை தாளிக்கவும். கடுகு பட பட என பொரிந்தவுடன் கிள்ளிய சிகப்பு மிளகாய், கடலை பருப்பு பிறகு நிலக்கடலை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
இப்போது நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும்.
 காரட் துண்டுகள் மற்றும்  கழுவி வெட்டி வைத்துள்ள கீரையையும் சேர்க்கவும்.
நன்கு வதக்கவும்.
கீரை லேசாக வெந்தவுடன் வேகவைத்த சோளத்தை சேர்க்கவும்.


தேவையான உப்பு சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.


இப்போது பசலை கீரை சோள வதக்கல் தயார்.


மாலை சிற்றுண்டியாகவோ அல்லது காலை உணவாகவோ சாப்பிடலாம்.

குறிப்பு : கீரை மற்றும் கரத்தின் அளவை அவரவர் விருப்பப்படி கூட்டி குறைத்துக்கொள்ளவும்.