#பாலக்கீரைமசியல் : எல்லா வகையான கீரைகளும் மசியலுக்கு ஏற்றதல்ல. முளை கீரை, அரை கீரை மற்றும் பாலக் கீரை போன்ற சில கீரைகளைக் கொண்டு மசியல் செய்தால் மட்டுமே நல்ல சுவையுடன் இருக்கும். நான் வசிக்கும் சட்டிஸ்கரிலுள்ள ராய்ப்பூரில் ஒரு சிகப்பு முளை கீரை கிடைக்கிறது. அதில் கீரை மசியல் செய்தாலும் நன்றாக இருக்கிறது. ஆனால் கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருக்கும் போது ஒரு சிகப்பு தண்டு கீரை வாங்குவோம். அந்த கீரையில் மசியல் சுவையாக இருக்காது.
வீட்டில் பெரியவர்கள் இருந்தால் மத்தை கொண்டு கடைந்தால்தான் கீரை மசியல் நன்றாக இருக்கும். மிக்ஸ்யில் இந்த காலத்தில் செய்வதால் சுவையே இல்லை என்பார்கள். ஆனால் நான் இங்கு கொடுக்கப்போகும் முறையில் செய்து பாருங்கள்!! நாம் சவால் விடலாம் மத்தால் அல்ல மிக்ஸ்யாலும் ( with mixie ) அதே சுவையை கொடுக்க முடியும் என்று!!
தேவையான பொருட்கள் :
பாலக் கீரை : 1 கைப்பிடி
பூண்டு பற்கள் : 2
உப்பு : 1/4 Tsp ( அட்ஜஸ்ட் )
செய்முறை :
குக்கரை அடுப்பில் வைத்து 1/2 கப் தண்ணீர் விடவும்.
கழுவிய கீரையை சேர்த்து மூடி வெயிட் வைத்து 1 விசில் வரை வேக விடவும்.
விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
குக்கரிலிருந்து நீராவியை உடனடியாக வெளியேற்றவும்.
வெயிட்டை சிறிது சிறிதாக தூக்கி நீராவியை வெளியேற்றவும்.
அல்லது குழாயின் அடியில் வைத்து தண்ணீரை குக்கரின் மேல் ஓட விடவும்.
நீராவி உடனே அடங்கி விடும்.
கீரையை எடுத்து தனியாக வைக்கவும்.
சூடு ஆறும் வரை பொறுத்திருக்கவும்.
கீரை வெந்த தண்ணீரை கீழே கொட்டி விடாதீர்கள்.
அதை ரசத்திலோ அல்லது சாம்பாரிலோ சேர்க்கலாம்.
மிக்ஸியில் உறித்த பூண்டு பல்லை போட்டு ஒரு சுற்று சுற்ற விடவும்.
ஒரு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சூடான சாதத்தில் ஒன்றிரண்டு தேக்கரண்டி கீரை மசியலை போட்டு 1 Tsp நல்லெண்ணெய் விட்டு பிசைந்து முருங்கைக்காய் சாம்பார் அல்லது வத்தக்குழம்பு தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் ... சுவையே அலாதிதான்!!
சில சமையல் வகைகள் சமைத்து ருசிக்க

பிறகு திறந்து கீரையையும் உப்பையும் சேர்த்து சில மணித்துளிகள் அரைக்கவும்.
திப்பி திப்பியாக இருக்க வேண்டும். மைய அரைக்கக் கூடாது.
ஒரு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சூடான சாதத்தில் ஒன்றிரண்டு தேக்கரண்டி கீரை மசியலை போட்டு 1 Tsp நல்லெண்ணெய் விட்டு பிசைந்து முருங்கைக்காய் சாம்பார் அல்லது வத்தக்குழம்பு தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் ... சுவையே அலாதிதான்!!
சில சமையல் வகைகள் சமைத்து ருசிக்க
|
|
|
||||||
|
|
No comments:
Post a Comment