Search This Blog

Showing posts with label boli. Show all posts
Showing posts with label boli. Show all posts

Monday, September 3, 2018

Boli-Puri-Roti-Varieties

#போளிவகைகள் : #போளி என்பது இனிப்பு அல்லது கார பூரணத்தை போளி மாவினுள் வைத்து சப்பாத்தி போல கைகளால் வாழை இலையின் மேல் தட்டி பிறகு தோசைக்கல்லில் சுட்டெடுக்கும் ஒரு பலகாரமாகும்.
போளி செய்ய, போளி மாவு மற்றும் பூரணம் முதலிலேயே தயார் செய்ய வேண்டியது அவசியம். 
இங்கு இனிப்பு மற்றும் கார போளி,
மேலும் #பூரணம் செய்யும் குறிப்புகளின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.


போளிவகைகள்
போளி மாவு
போளி மாவு
சோயா பூரண போளி
சோயா பூரண போளி
கார போளி
கார போளி
சோயா பூரணம்
சோயா பூரணம்
தேங்காய் பூரணம்
தேங்காய் பூரணம்




பூரி வகைகள் :
அடுத்ததாக இங்கு பல்வேறு பூரி செய்முறைகளின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. 


பூரி வகைகள்
பூரிு
பூரிு
கொடிப்பசலை பூரிி
கொடிப்பசலை பூரிி
பீட்ரூட் பூரிி
பீட்ரூட் பூரிி


ரொட்டி [ அ ] சப்பாத்தி வகைகள் :

பல வகையான ரொட்டி [ அ ] சப்பாத்தி செய்முறைகளின் இணைப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.



ரொட்டி [ அ ] சப்பாத்தி வகைகள்
அமராந்த் ரொட்டி
அமராந்த் ரொட்டி
பாப்பரை [ Buckwheat ] சப்பாத்தி
பாப்பரை [Buckwheat ] சப்பாத்தி
சிகப்புக்கீரை சப்பாத்தி
சிகப்புக்கீரை சப்பாத்தி
பாலக்கீரை சப்பாத்தி
பாலக்கீரை சப்பாத்தி



தொட்டுக்கொண்டு சுவைக்க






Monday, January 20, 2014

Boli with Potato Masala

#போளி : #காரபோளி ( அ ) #உருளைகிழங்குபோளி செய்ய போளி மாவின் உள்ளே வைத்து தட்ட தேவையான மசாலாவை தயாரித்து கொள்ள வேண்டும். போளி மாவை முன்பே கூறிய படி பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். இனிப்பு போளியை இரண்டு மூன்று நாட்கள் வைத்து உண்ணலாம். ஆனால் காரத்தை ஒரு நாளே வைத்து உண்ண முடியும். முதலில் உருளை கிழங்கு மசாலா செய்வது எப்படி என பார்த்து விட்டு பிறகு போளி செய்வதெப்படி என பார்க்கலாம்.

காரபோளி ( அ ) உருளைகிழங்கு போளி


தேவையான பொருட்கள் :
போளி மாவு


தாளில் தடவ தேவையான அளவு எண்ணெய்
தோசை கல்லில் போளி சுட தேவையான அளவு எண்ணெய்

உருளை கிழங்கு மசாலாவிற்கு :


2                                   வேகவைத்த உருளை கிழங்கு
3 Tsp                             பச்சை கொத்தமல்லி விதை ( கிடைத்தால் )
1/4 கப்                          பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை
1 அ 2                           பச்சை மிளகாய்
சிறிய துண்டு            இஞ்சி
1/2 Tsp                          சீரகத்தூள்
1/4 Tsp                          உப்பு

செய்முறை :
உருளைகிழங்கை நன்கு மசித்துக்கொள்ளவும்.


மற்ற பொருட்களை மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும்.

அரைத்த பொருட்களை கிழங்குடன் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.


உப்பு சரி பார்க்கவும். விருப்பமான அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

போளியை வாழை இலையில் தட்டி கல்லில் சுட்டு எடுத்தால் நல்ல வாசனையாய் இருக்கும்.
கிடைக்காத போது அதற்காக கவலை பட வேண்டாம்.
நல்ல சுத்தமான பிளாஸ்டிக் தாளை உபயோகப் படுத்தி செய்யலாம்.

தாளின் மேல் ஒன்றிரண்டு சொட்டு எண்ணெய் விட்டு தடவிக் கொள்ளவும்.
மாவை சிறிதளவு வைத்து விரல்களில் எண்ணெய் தடவிக் கொண்டு லேசாக தட்டவும்.

தட்டிய மாவின் மேல் ஒரு உருண்டை உருளை கிழங்கு மசாலாவை வைக்கவும்.

கீழிருந்து மாவை மேல் நோக்கி இழுத்து உருண்டையை முழுவதுமாக மூடவும்.

மெது மெதுவாக இலேசான அழுத்தம் கொடுத்து வட்டமாக  எவ்வளவு முடியுமோ அவ்வளவு மெல்லியதாக தட்டிக்கொள்ளவும்.

மாவு ஒட்டாமல் இருப்பதற்காக விரல்களிலும் உள்ளங்கையிலும் அவ்வப்போது எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
அடுப்பில் தோசை கல்லை சூடாக்கி எண்ணெய் விட்டு தாளில் இருந்து பத்திரமாக எடுத்து கல்லில் இடவும்.
இலையாக இருப்பின் கல்லின் மேல் அப்படியே திருப்பிப் போடலாம்.
ஆனால் தாளை சூடான கல்லில் படாமல் கையில் எடுத்துதான் கல்லில் இட வேண்டும்.


இரண்டு பக்கமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
இந்த கார போளியை தக்காளி சாசுடனோ அல்லது குருமாவுடனோ சுவைத்தால் நன்றாக இருக்கும்.

காரபோளி ( அ ) உருளைகிழங்கு போளி

ஒன்றும் தொட்டுகொள்ளாமல் அப்படியேயும் சாப்பிடலாம்.
சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
ஆறிய பிறகும் அருமையாக இருக்கும்.

குறிப்பு :
  • மசாலாவில் வெங்காயம் சேர்ப்பதாக இருந்தால் பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி சேர்க்க வேண்டும்.
  • பச்சை கொத்தமல்லி விதை எல்லா இடங்களிலும் கிடைக்காது. அதற்கு பதிலாக கொத்தமல்லியின் அளவை அதிகப்படுத்திக் கொள்ளவும். 
  • மதிய உணவுக்காக எடுத்து செல்வதாக இருந்தால் வாணலியில் மசாலாவை வதக்கி ஆற வைத்தபின் போளி தயார் செய்யவும்.
  • நன்கு ஆறிய பின்னரே மூடி போட்ட பாத்திரத்தில் எடுத்து அடுக்க வேண்டும்.







மேலும் சில உணவு வகைகள் முயற்சி செய்து பார்க்க :

சோயா பூரணம்
சோயா
பூரணம்
தேங்காய் பூரணம்
தேங்காய் 
பூரணம்
போளி மாவு
போளி
மாவு
போளி - சோயா பூரணம்
போளி - சோயா பூரணம்
புளிக்கூழ்
புளிக்கூழ்






Boli with Soya Pooranam

#போளி : #இனிப்புபோளி செய்ய முதலில் #பூரணம் தேவை. போளி  மாவையும் முன் கூட்டியே தயாரித்து வைக்க வேண்டும். இங்கு சோயா கொண்டு தயாரித்த இனிப்பு பூரணத்தை மாவினுள் வைத்து போளி எவ்வாறு செய்வது என பார்க்கலாம்.


இனிப்பு போளி

தேவையான பொருட்கள் :
சோயா  பூரணம்
போளி மாவு
வாழை இலை / பிளாஸ்டிக் தாளில் போளி தட்ட தேவையான எண்ணெய்
போளி கல்லில் சுட்டு எடுக்க நல்லெண்ணெய்  ( அ ) நெய்

செய்முறை :
பூரணத்தை  உருண்டைகளாக்கிக் கொள்ளவும்.


போளியை வாழை இலையில் தட்டி கல்லில் சுட்டு எடுத்தால் நல்ல வாசனையாய் இருக்கும்.
கிடைக்காத போது அதற்காக கவலை பட வேண்டாம்.
நல்ல சுத்தமான பிளாஸ்டிக் தாளை உபயோகப் படுத்தி செய்யலாம்.

தாளின் மேல் ஒன்றிரண்டு சொட்டு எண்ணெய் விட்டு தடவிக் கொள்ளவும்.
மாவை சிறிதளவு வைத்து விரல்களில் எண்ணெய் தடவிக் கொண்டு லேசாக தட்டவும்.
தட்டிய மாவின் மேல் ஒரு உருண்டை பூரணத்தை வைக்கவும்.
கீழிருந்து மாவை மேல் நோக்கி இழுத்து பூரண உருண்டையை முழுவதுமாக மூடவும்.



மெது மெதுவாக இலேசான அழுத்தம் கொடுத்து வட்டமாக



 எவ்வளவு முடியுமோ அவ்வளவு மெல்லியதாக தட்டிக்கொள்ளவும்.


மாவு ஒட்டாமல் இருப்பதற்காக விரல்களிலும் உள்ளங்கையிலும் அவ்வப்போது எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
அடுப்பில் தோசை கல்லை சூடாக்கி எண்ணெய் விட்டு தாளில் இருந்து பத்திரமாக எடுத்து கல்லில் இடவும்.
இலையாக இருப்பின் கல்லின் மேல் அப்படியே திருப்பிப் போடலாம்.
ஆனால் தாளை சூடான கல்லில் படாமல் கையில் எடுத்துதான் கல்லில் இட வேண்டும்.


இரண்டு பக்கமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.



இதை எப்படி சாப்பிடுவது என்று சொல்லியா கொடுக்கணும்?
சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
ஆறிய பிறகும் அருமையாக இருக்கும்.






மேலும் சில உணவு வகைகள் முயற்சி செய்து பார்க்க :

சோயா பூரணம்
சோயா
பூரணம்
தேங்காய் பூரணம்
தேங்காய் 
பூரணம்
போளி மாவு
போளி
மாவு
போளி - உருளை பூரணம்
போளி - உருளை பூரணம்
புளிக்கூழ்
புளிக்கூழ்







Wednesday, January 15, 2014

Boli Maavu

#போளிமாவு : தமிழகத்தில் செய்யப்படும்  #போளி என்பது  இனிப்பு பூரணத்தை மாவின் உள்ளே வைத்து வட்டமாக தட்டி தோசை கல்லில் சுட்டு எடுக்கும் ஒரு இனிப்பு வகையாகும். வெவ்வேறு மாநிலங்களில் இதன் பெயர் வெவ்வேறாக இருப்பினும் ஏறக்குறைய செய்யும் முறை ஒன்றாகவே உள்ளது. இதனை கர்நாடகத்தில் Holige அல்லது Obbhattu என்றும், தெலுங்கில் Bobbatlu என்றும், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் Pooran Poli  என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மேல் மாவு எவ்வாறு தயாரிப்பது என பார்க்கலாம்.

போளி

தேவையான பொருட்கள் :
1 கப்                                             மைதா
1 Tsp                                              ரவா ( விருப்பப்பட்டால் )
1 சிட்டிகை                                 உப்பு
1/4 கப்                                          தண்ணீர்
2 Tbsp                                            நல்லெண்ணெய்

செய்முறை :
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மாவு, ரவா மற்றும் உப்பு எடுத்துக் கொண்டு தண்ணீர் சேர்த்து பிசையவும். பிசையும் போது மாவு கைகளில் ஒட்டிக்கொள்ளும் அளவிற்கு தண்ணீர் சேர்க்கலாம்.
இப்போது 2 Tsp எண்ணெய்  ஊற்றி பிசையவும்.
மாவு எண்ணெயை முழுவதுமாக உறிஞ்சிக்கொள்ளும்.
மறுபடியும் 2 Tsp எண்ணெய் விட்டு பிசையவும்.


இவ்வாறு எண்ணெய் சேர்த்து பிசைய பிசைய மாவு நன்கு மிருதுவாகி இழுத்தால் எலாஸ்டிக் போல பிய்யாமல் வரும்.


அந்த அளவுக்கு பிசைந்தவுடன் ஒரு Tsp எண்ணெயை மாவின் மேலே தடவி ஒரு மூடியினால் மூடி ஐந்து முதல் ஆறு மணி நேரம் ஊற விடவும்.


குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு பிறகு மாவு இன்னும் மிருதுவாகவும் இழுத்தால் பிய்யாமலும் வருவதை காணலாம்.


இப்போது மாவு தயாராகி விட்டது. மாவின் உள்ளே இனிப்பு பூரணத்தை வைத்து போளி தயார் செய்யலாம்.


  • போளி மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும் என நினைத்தால் ஒரு சிட்டிகை மஞ்சத்தூள் சேர்க்கவும்.
  • கொடுக்கப்பட்டுள்ள அளவில் தயாரித்த மாவில் எட்டு முதல் பத்து போளிகள் தயாரிக்கலாம்.
  • மாவு அதிகப்படியாக இருந்தால் எண்ணெய் தடவி பிரிட்ஜில் வைத்து மறுநாள் பயன் படுத்தலாம்.






மேலும் சில உணவு வகைகள் முயற்சி செய்து பார்க்க :

சோயா பூரணம்
சோயா
பூரணம்
தேங்காய் பூரணம்
தேங்காய் 
பூரணம்
போளி - சோயா பூரணம்
போளி - சோயா பூரணம்
போளி - உருளை பூரணம்
போளி - உருளை பூரணம்
புளிக்கூழ்
புளிக்கூழ்