Search This Blog

Monday, January 20, 2014

Boli with Potato Masala

#போளி : #காரபோளி ( அ ) #உருளைகிழங்குபோளி செய்ய போளி மாவின் உள்ளே வைத்து தட்ட தேவையான மசாலாவை தயாரித்து கொள்ள வேண்டும். போளி மாவை முன்பே கூறிய படி பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். இனிப்பு போளியை இரண்டு மூன்று நாட்கள் வைத்து உண்ணலாம். ஆனால் காரத்தை ஒரு நாளே வைத்து உண்ண முடியும். முதலில் உருளை கிழங்கு மசாலா செய்வது எப்படி என பார்த்து விட்டு பிறகு போளி செய்வதெப்படி என பார்க்கலாம்.

காரபோளி ( அ ) உருளைகிழங்கு போளி


தேவையான பொருட்கள் :
போளி மாவு


தாளில் தடவ தேவையான அளவு எண்ணெய்
தோசை கல்லில் போளி சுட தேவையான அளவு எண்ணெய்

உருளை கிழங்கு மசாலாவிற்கு :


2                                   வேகவைத்த உருளை கிழங்கு
3 Tsp                             பச்சை கொத்தமல்லி விதை ( கிடைத்தால் )
1/4 கப்                          பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை
1 அ 2                           பச்சை மிளகாய்
சிறிய துண்டு            இஞ்சி
1/2 Tsp                          சீரகத்தூள்
1/4 Tsp                          உப்பு

செய்முறை :
உருளைகிழங்கை நன்கு மசித்துக்கொள்ளவும்.


மற்ற பொருட்களை மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும்.

அரைத்த பொருட்களை கிழங்குடன் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.


உப்பு சரி பார்க்கவும். விருப்பமான அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

போளியை வாழை இலையில் தட்டி கல்லில் சுட்டு எடுத்தால் நல்ல வாசனையாய் இருக்கும்.
கிடைக்காத போது அதற்காக கவலை பட வேண்டாம்.
நல்ல சுத்தமான பிளாஸ்டிக் தாளை உபயோகப் படுத்தி செய்யலாம்.

தாளின் மேல் ஒன்றிரண்டு சொட்டு எண்ணெய் விட்டு தடவிக் கொள்ளவும்.
மாவை சிறிதளவு வைத்து விரல்களில் எண்ணெய் தடவிக் கொண்டு லேசாக தட்டவும்.

தட்டிய மாவின் மேல் ஒரு உருண்டை உருளை கிழங்கு மசாலாவை வைக்கவும்.

கீழிருந்து மாவை மேல் நோக்கி இழுத்து உருண்டையை முழுவதுமாக மூடவும்.

மெது மெதுவாக இலேசான அழுத்தம் கொடுத்து வட்டமாக  எவ்வளவு முடியுமோ அவ்வளவு மெல்லியதாக தட்டிக்கொள்ளவும்.

மாவு ஒட்டாமல் இருப்பதற்காக விரல்களிலும் உள்ளங்கையிலும் அவ்வப்போது எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
அடுப்பில் தோசை கல்லை சூடாக்கி எண்ணெய் விட்டு தாளில் இருந்து பத்திரமாக எடுத்து கல்லில் இடவும்.
இலையாக இருப்பின் கல்லின் மேல் அப்படியே திருப்பிப் போடலாம்.
ஆனால் தாளை சூடான கல்லில் படாமல் கையில் எடுத்துதான் கல்லில் இட வேண்டும்.


இரண்டு பக்கமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
இந்த கார போளியை தக்காளி சாசுடனோ அல்லது குருமாவுடனோ சுவைத்தால் நன்றாக இருக்கும்.

காரபோளி ( அ ) உருளைகிழங்கு போளி

ஒன்றும் தொட்டுகொள்ளாமல் அப்படியேயும் சாப்பிடலாம்.
சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
ஆறிய பிறகும் அருமையாக இருக்கும்.

குறிப்பு :
  • மசாலாவில் வெங்காயம் சேர்ப்பதாக இருந்தால் பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி சேர்க்க வேண்டும்.
  • பச்சை கொத்தமல்லி விதை எல்லா இடங்களிலும் கிடைக்காது. அதற்கு பதிலாக கொத்தமல்லியின் அளவை அதிகப்படுத்திக் கொள்ளவும். 
  • மதிய உணவுக்காக எடுத்து செல்வதாக இருந்தால் வாணலியில் மசாலாவை வதக்கி ஆற வைத்தபின் போளி தயார் செய்யவும்.
  • நன்கு ஆறிய பின்னரே மூடி போட்ட பாத்திரத்தில் எடுத்து அடுக்க வேண்டும்.







மேலும் சில உணவு வகைகள் முயற்சி செய்து பார்க்க :

சோயா பூரணம்
சோயா
பூரணம்
தேங்காய் பூரணம்
தேங்காய் 
பூரணம்
போளி மாவு
போளி
மாவு
போளி - சோயா பூரணம்
போளி - சோயா பூரணம்
புளிக்கூழ்
புளிக்கூழ்






No comments:

Post a Comment