Search This Blog

Wednesday, January 15, 2014

Boli Maavu

#போளிமாவு : தமிழகத்தில் செய்யப்படும்  #போளி என்பது  இனிப்பு பூரணத்தை மாவின் உள்ளே வைத்து வட்டமாக தட்டி தோசை கல்லில் சுட்டு எடுக்கும் ஒரு இனிப்பு வகையாகும். வெவ்வேறு மாநிலங்களில் இதன் பெயர் வெவ்வேறாக இருப்பினும் ஏறக்குறைய செய்யும் முறை ஒன்றாகவே உள்ளது. இதனை கர்நாடகத்தில் Holige அல்லது Obbhattu என்றும், தெலுங்கில் Bobbatlu என்றும், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் Pooran Poli  என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மேல் மாவு எவ்வாறு தயாரிப்பது என பார்க்கலாம்.

போளி

தேவையான பொருட்கள் :
1 கப்                                             மைதா
1 Tsp                                              ரவா ( விருப்பப்பட்டால் )
1 சிட்டிகை                                 உப்பு
1/4 கப்                                          தண்ணீர்
2 Tbsp                                            நல்லெண்ணெய்

செய்முறை :
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மாவு, ரவா மற்றும் உப்பு எடுத்துக் கொண்டு தண்ணீர் சேர்த்து பிசையவும். பிசையும் போது மாவு கைகளில் ஒட்டிக்கொள்ளும் அளவிற்கு தண்ணீர் சேர்க்கலாம்.
இப்போது 2 Tsp எண்ணெய்  ஊற்றி பிசையவும்.
மாவு எண்ணெயை முழுவதுமாக உறிஞ்சிக்கொள்ளும்.
மறுபடியும் 2 Tsp எண்ணெய் விட்டு பிசையவும்.


இவ்வாறு எண்ணெய் சேர்த்து பிசைய பிசைய மாவு நன்கு மிருதுவாகி இழுத்தால் எலாஸ்டிக் போல பிய்யாமல் வரும்.


அந்த அளவுக்கு பிசைந்தவுடன் ஒரு Tsp எண்ணெயை மாவின் மேலே தடவி ஒரு மூடியினால் மூடி ஐந்து முதல் ஆறு மணி நேரம் ஊற விடவும்.


குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு பிறகு மாவு இன்னும் மிருதுவாகவும் இழுத்தால் பிய்யாமலும் வருவதை காணலாம்.


இப்போது மாவு தயாராகி விட்டது. மாவின் உள்ளே இனிப்பு பூரணத்தை வைத்து போளி தயார் செய்யலாம்.


  • போளி மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும் என நினைத்தால் ஒரு சிட்டிகை மஞ்சத்தூள் சேர்க்கவும்.
  • கொடுக்கப்பட்டுள்ள அளவில் தயாரித்த மாவில் எட்டு முதல் பத்து போளிகள் தயாரிக்கலாம்.
  • மாவு அதிகப்படியாக இருந்தால் எண்ணெய் தடவி பிரிட்ஜில் வைத்து மறுநாள் பயன் படுத்தலாம்.






மேலும் சில உணவு வகைகள் முயற்சி செய்து பார்க்க :

சோயா பூரணம்
சோயா
பூரணம்
தேங்காய் பூரணம்
தேங்காய் 
பூரணம்
போளி - சோயா பூரணம்
போளி - சோயா பூரணம்
போளி - உருளை பூரணம்
போளி - உருளை பூரணம்
புளிக்கூழ்
புளிக்கூழ்






No comments:

Post a Comment