#காலிப்ளவர் மஞ்சூரியன் : காலிப்ளவர் மிக சிறந்த ஆக்சிஜெனேற்றத்தடுப்பான் [ antioxidant ] மற்றும் அழற்சி எதிர்ப்பு சக்தி [ anti-inflammatory ] உடையது. காளிப்ளவரில் ஒமேகா 3 உள்ளது. இது கெட்ட கொழுப்பை குறைத்து இரத்த குழாய்கள் தடிமனாகாமல் இருக்க உதவுகிறது.
இதன் மற்ற மருத்துவ பயன்களை பற்றி அறிய
http://www.organicfacts.net/health-benefits/vegetable/health-benefits-of-cauliflower.html
காலிப்ளவர் மிகவும் எளிதில் வேகக்கூடிய தன்மை உடையது. வெகு சீக்கிரம் வேகவைத்து சாப்பிடும் போது அதில் அடங்கியிருக்கும் அத்தனை சத்துக்களும் நமக்கு கிடைக்கின்றது.
இங்கு எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான மஞ்சூரியன் எவ்வாறு செய்வது என காணலாம்.
செய்முறை :
1 கப் காலிப்ளவர் துண்டுகள்
மாவு கரைக்க :
1/2 cup கடலை மாவு [ அல்லது மைதா மாவு ]
2 Tbsp அரிசி மாவு
1 Tbsp சோள மாவு
1/4 Tsp சிகப்பு மிளகாய் பொடி
1/4 Tsp சீரகப் பொடி
1/2 Tsp உப்பு
ஊறவைக்க :
3 Tsp சோயா சாஸ் [ Soya sauce ]
1 Tsp சீரகப்பொடி
1/4 Tsp சிகப்பு மிளகாய் பொடி[ adjust ]
1/4 Tsp உப்பு [ adjust ]
வதக்க :
1 வெங்காயம், பொடியாக நறுக்கியது
2 பச்சை மிளகாய், நீள வாக்கில் கீறி வைக்கவும்
8 கறுவேப்பிலை
2 Tbsp தக்காளி சாஸ் [ Tomato sauce ]
1 Tsp சோயா சாஸ் [ Soya sauce ]
1/4 Tsp உப்பு [ adjust ]
1 Tsp Oil
1 கப் எண்ணெய் பொரிப்பதற்கு
செய்முறை :
ஊறவைக்க தேவையான பொருட்களை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு கலக்கவும்.
அதில் காலிப்ளவர் துண்டுகளை போட்டு பிரட்டவும்.
சுமார் 45 நிமிடங்கள் ஊற விடவும்.
45 நிமிடங்கள் ஊற விட்ட பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
மாவிற்கு தேவையான பொருட்களை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு பஜ்ஜி பதத்திற்கு கரைக்கவும்.
எண்ணெய் சூடானவுடன் ஒரு தேக்கரண்டியின் உதவியுடன் காலிப்ளவர் துண்டுகளை மாவில் நனைத்து எண்ணையில் போடவும்.
நன்கு பொன்னிறமானதும் எடுத்து எண்ணெய் உறிஞ்சும் காகிதத்தின் மேல் வைக்கவும்.
இதே போல எல்லா துண்டுகளையும் மாவில் நனைத்து பொரித்த பின்னர் மற்றொரு அடுப்பில் வேறொரு வாணலியை வைத்து சூடாக்கவும்.
எண்ணெய் விட்டு சூடானதும் கறுவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். அதன் பின்னர் சோயா சாஸ், தக்காளி சாஸ் மற்றும் உப்பு சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வைத்திருக்கவும்.
இப்போது பொறித்து வைத்துள்ள காலிப்ளவரை சேர்த்து கிளறவும்.
துண்டுகள் மேல் சாஸ் கலவை பூசினாற்போல வந்தால் போதுமானது.
அடுப்பை அணைத்து விட்டு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.
குறிப்பு : மஞ்சூரியன் மைதா மாவு கொண்டே செய்யப்படும். மைதாவை விட கடலை மாவு உடலுக்கு நல்லது. ஆகையால் இங்கு கடலை மாவை உபயோகித்துள்ளேன்.

No comments:
Post a Comment