Search This Blog

Showing posts with label green papaya. Show all posts
Showing posts with label green papaya. Show all posts

Monday, February 2, 2015

Noolkhol-Papaya-Sambar

#நூல்கோல்பப்பாளிசாம்பார் : எனது அண்டை வீட்டில் வசிக்கும் தோழி ஒருவர் அவர் இல்லத்தில் விளைந்த நூல்கோலை கொடுத்தார். பப்பாளி காய் ஒன்றும் வீட்டில் இருந்தது. இரண்டையும் சேர்த்து சாம்பார் செய்ய முடிவு செய்தேன்.
பப்பாளிகாயின் பலன்களை பற்றி சென்ற பதிவான பப்பாளி காரட் சாலட்   சமையல் குறிப்பில் பார்த்தோம். பச்சையாக சாலட் சாப்பிட விரும்பாதவர்கள் சாம்பார் மற்றும் கூட்டு போன்ற உணவு வகைகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
இனி செய்முறையை காண்போம்.

நூல்கோல் பப்பாளி சாம்பார்

தேவையான பொருட்கள் :
வேகவைத்த துவரம் பருப்பு                  : 1/3 Tbsp
நூல்கோல்                                                      : 1
பப்பாளிக்காய்  துண்டுகள்                       : 1/2 கப்
புளி                                                             : 1 சின்ன நெல்லிக்காய் அளவு உருண்டை
சின்ன வெங்காயம்                                : 8
பச்சை மிளகாய்                                      : 2
கருவேப்பிலை                                        : 10
கொத்தமல்லி கீரை                                : சிறிதளவு
சாம்பார் பவுடர்                                       : 2 Tsp
மஞ்சத்தூள்                                               : 1 சிட்டிகை
மல்லித்தூள்                                             : 1 Tsp
உப்பு                                                             : 2 Tsp

தாளிக்க :

எண்ணெய்                                                 : 1/2 Tsp
கடுகு                                                           : 1/2 Tsp
பெருங்காயம்                                            : சிறு துண்டு

செய்முறை :
சின்ன வெங்காயத்தின் தோலை உரித்து ஒன்றிரண்டாக அறிந்துகொள்ளவும்.
பச்சை மிளகாயை நீள  வாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
கருவேப்பிலை , கொத்தமல்லி ஆகியவற்றை தனி தனியாக கழுவி ஆற வைக்கவும்.
நூல்கோலின்  தோலை நீக்கி ஒரே அளவு துண்டுகளாக அறிந்து கொள்ளவும்.

குக்கரில்  3/4  Cup நீர் சேர்க்கவும்.
அதில் நூல்கோலை 1 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும்.
இறக்கியவுடன் ஆவியை உடனே வெளியேற்றவும்.
பருப்பை கரண்டியால் நன்கு மசித்து சேர்க்கவும்.
மறுபடியும் அடுப்பில் ஏற்றி சாம்பார் பவுடர் , மல்லி பொடி, மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். குறைந்த தீயில் கொதிக்கவிடவும்.


மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு முதலில் கடுகை வெடிக்க விடவும்.
பின் பெருங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய், மற்றும் வெங்காயத்தை வரிசையாக போட்டு சிறிது வதக்கவும்.
வெங்காய வாசனை வந்தவுடன் கொதித்துகொண்டிருக்கும் சாம்பாரில்  கொட்டவும்.
வெட்டிவைத்துள்ள பப்பாளிகாயை சேர்க்கவும்.
குக்கரை மூடி வெயிட் வைத்து 1 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

நூல்கோல் பப்பாளி சாம்பார்

ஆவி நன்கு அடங்கியவுடன் குக்கரை திறந்து வேறொரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

கொத்தமல்லி தழையினால் அலங்கரிக்கவும்.
சுவையான சாம்பார் தயார்.

நூல்கோல் பப்பாளி சாம்பார்


சூடான சாதத்தில் ஒரு கரண்டி சாம்பார் விட்டு பிசைந்து இஷ்டமான துவட்டலுடன் சாப்பிட்டால் ஆ.. ஆஹா... அதுவல்லவோ பேரானந்தம்!!

சாம்பாருடன் ஒன்றிரண்டு துளிகள் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் இன்னும் சுவையோ சுவை...!!

பருப்பு சாதத்திற்கு தொட்டு கொண்டு சாப்பிடலாம்.
சாதத்துடன் பொடி சேர்த்து பிசைந்து சாப்பிடும் போதும் சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.







Friday, January 23, 2015

Papaya-Radish-Lentil-Salad

#பப்பாளிக்காய்முள்ளங்கிபருப்புசாலட் : சென்ற பதிவில் பப்பாளிக்காய் காரட் சாலட் செய்வது எப்படி என பார்த்தோம்.
பப்பாளிக்காயில் பல மருத்துவ குணங்கள் நிறைந்து இருப்பதால் அடிக்கடி நமது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
இங்கு முள்ளங்கியுடன் ஒரு வித்தியாசமான சாலட் செய்யும் முறையை காண்போம்.

பப்பாளிக்காய் முள்ளங்கி பருப்பு சாலட்

தேவையான பொருட்கள் :
1 cupபப்பாளிக்காய் துருவியது
1/4 cupமுள்ளங்கி துருவியது
1/8 cupபயத்தம் பருப்பு
1 or 2பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது [ adjust ]
1 Tspகொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
1 Tspஎலுமிச்சை சாறு [ adjust ]
3/4 Tspஉப்பு [ Adjust ]

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் பயத்தம் பருப்பை எடுத்துக்கொள்ளவும்.
ஓரிரு முறை கழுவி தண்ணீரை வடித்து விடவும்.
அதனுடன் துருவிய பப்பாளிக்காய், முள்ளங்கி மற்றும் தேவையான உப்பு சேர்த்து கலக்கி சுமார் 20 நிமிடங்கள் தனியே எடுத்து வைக்கவும்.
முள்ளங்கியிலிருந்து வெளி வரும் தண்ணீரில் பருப்பு நன்கு ஊறி விடும்.
20 நிமிடங்களுக்கு பின்னர் பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
உப்பு சரி பார்க்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
முள்ளங்கி இலை அல்லது கொத்தமல்லி கொண்டு அலங்கரிக்கவும்.
மதிய உணவின் போது அல்லது மாலை நேர சிற்றுண்டியாக சுவைக்கலாம்.


பப்பாளிக்காய் முள்ளங்கி பருப்பு சாலட்

பப்பாளிக்காய் முள்ளங்கி பருப்பு சாலட்






மேலும் சில பச்சடி வகைகள் செய்து சுவைக்க

வாழைப்பூ வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைப்பூ தயிர் 
பச்சடி
பப்பாளி கேரட் சாலட்
பப்பாளி கேரட்
சாலட்
நெல்லிக்காய் தயிர் பச்சடி
நெல்லிக்காய் தயிர் பச்சடி
மாங்காய் பச்சடி
மாங்காய்
பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி







Saturday, January 17, 2015

Papaya-Soup

#பப்பாளிக்காய்சூப் : பப்பாளி காயாக இருக்கும் போது அதில் நோயை எதிர்க்கவல்ல என்சைம்கள் அதிக அளவில் நிறைந்து இருக்கிறது. பழமாக மாறும் போது இந்த என்சைம்களின் வீரியமும் அளவும் குறைந்து விடுகிறது. இந்த #பப்பாளிக்காய் உணவு செரிமானத்திற்கும் மலச்சிக்கல் வராமல் தவிர்ப்பதற்கும் மிக மிக உதவியாக இருக்கிறது.
காயை எப்படி சாப்பிடுவது என்று நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகிறது!!
சுரைக்காய், சௌ சௌ, பூசணிக்காய் போல இதனையும் சாம்பார், கூட்டு, மற்றும் மோர் குழம்பு ஆகியவை செய்யலாம். பச்சையாக சாலட் செய்தும் சாப்பிடலாம்.
இங்கு பப்பாளி காய் உபயோகித்து சூப் எவ்வாறு செய்யலாம் என காண்போம்.

பப்பாளிக்காய் சூப்


தேவையான பொருட்கள் :
1/2 கப்பப்பாளிக்காய் பொடியாக அரிந்தது
1 Tbspவெங்காயம் பொடியாக அரிந்தது
1 tspபூண்டு பொடியாக அரிந்தது
1/2 tspகொத்தமல்லி தழை பொடியாக அரிந்தது
1 1/2 Tbspபாப்பரை மாவு*
1/2 tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
1 tspமிளகுப்பொடி
1/2 tspகாய்ந்த புதினா இலைகள் [ இருந்தால் ]

*பாப்பரை மாவு இல்லையென்றால் ஓட்ஸ் அல்லது சோளமாவு உபயோகிக்கலாம்.

செய்முறை :

  • ஒரு கிண்ணத்தில் 1 1/4 கப் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.
  • மிதமான தீயில் சூடாக்கவும்.
  • கொதிக்க ஆரம்பித்ததும் வெங்காயம், பூண்டு மற்றும் பப்பாளிகாயை சேர்க்கவும்.
  • தீயை குறைத்து பப்பாளிக்காய் வேகும் வரை அடுப்பில் சூடாக்கவும்.
  • பப்பாளிக்காய் வெந்தவுடன் பாப்பரை மாவை ஒரு சிறு கிண்ணத்தில் 1/4 கப் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்.
  • சூப் பளபளப்பாக மாறி கஞ்சி பதத்தை அடைந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  • உப்பு சேர்த்து கலக்கி விடவும்.
  • சூப் அருந்தும் கிண்ணத்தில் எடுத்து வைத்து கொத்தமல்லி புதினா மற்றும் மிளகுப்பொடி தூவி பரிமாறவும்.
  • ஆஹா!! அருமையான பப்பாளிக்காய் சூப் தயார்!! சூடாக அருந்தி மகிழவும்!!

பப்பாளிக்காய் சூப்

குளிர்காலத்தில் மாலை வேளையில் அருந்துவதற்கு ஏற்ற பானம் ஆகும்.
செய்து பாருங்களேன்!! இதன் சுவை உங்களை மறு முறையும் செய்ய தூண்டும்!!





மேலும் சில சூப் வகைகள் முயற்சி செய்து பார்க்க
மஷ்ரூம் சூப்
மஷ்ரூம் சூப்
மஷ்ரூம் பாலக் சூப்
மஷ்ரூம் பாலக் சூப்
தக்காளி சூப்
தக்காளி சூப்
கொத்தமல்லி சூப்
கொத்தமல்லி சூப்