#பப்பாளிகாரட்சாலட் : ஓரிரு வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல், டெங்கு, போன்றவை அதிகமாக பரவிக்கொண்டிருந்த போது பப்பாளி மரத்தின் இலையை உபயோகித்து பானம் செய்து அருந்துவதால் நோய் வராமலும் நோய் வந்தவர்கள் அதன் தாக்கத்தை குறைக்கலாம் என தொலை காட்சியில் தினமும் செய்தி ஒளி பரப்பிக் கொண்டிருந்தார்கள். எனது தம்பியின் மகனும் இந்த காய்ச்சல் வந்த போது பப்பாளி இலை சாறை தினமும் அருந்தி குணமடைந்தது நன்கு நினைவில் நிற்கிறது.
பப்பாளியில் நிறைந்திருக்கும் பப்பெயின் என்ற என்ஸைம் நோய் எதிர்க்கும் தன்மையும் உணவு செரிமானத்திற்கும் உதவி புரிகிறது. இந்த என்ஸைம் பழமாக மாறும் போது அதன் அளவு குறைந்து விடுகிறது. அதனால் பப்பாளி காயை சாப்பிடுவதால் முழுமையான மருத்துவ பலன்கள் கிடைக்கிறது. மலச்சிக்கலை தவிர்க்க பப்பாளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
சில தினங்களுக்கு முன்பு பப்பாளி காய் சூப் செய்யும் முறையை பார்த்தோம்.
இங்கு #பப்பாளிக்காய் மற்றும் காரட் ஆகியவற்றை உபயோகித்து ஒரு எளிமையான சாலட் செய்யும் முறையை காணலாம்.
செய்முறை :
பப்பாளியில் நிறைந்திருக்கும் பப்பெயின் என்ற என்ஸைம் நோய் எதிர்க்கும் தன்மையும் உணவு செரிமானத்திற்கும் உதவி புரிகிறது. இந்த என்ஸைம் பழமாக மாறும் போது அதன் அளவு குறைந்து விடுகிறது. அதனால் பப்பாளி காயை சாப்பிடுவதால் முழுமையான மருத்துவ பலன்கள் கிடைக்கிறது. மலச்சிக்கலை தவிர்க்க பப்பாளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
சில தினங்களுக்கு முன்பு பப்பாளி காய் சூப் செய்யும் முறையை பார்த்தோம்.
இங்கு #பப்பாளிக்காய் மற்றும் காரட் ஆகியவற்றை உபயோகித்து ஒரு எளிமையான சாலட் செய்யும் முறையை காணலாம்.
தேவையான பொருட்கள் : | |
---|---|
1 cup | பப்பாளிக்காய் துருவியது |
1/4 cup | காரட் துருவியது |
1 or 2 | பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிக்கொள்ளவும் [ adjust ] |
1 Tsp | கொத்தமல்லி தழை பொடியாக அரிந்தது |
1 Tsp | எலுமிச்சை சாறு [ adjust ] |
3/4 Tsp | உப்பு [ Adjust ] |
To Temper : | |
1/2 Tsp | கடுகு |
1 Tsp | நல்லெண்ணெய் [ til/sesame oil ] |
செய்முறை :
கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் போட்டு நன்கு கலக்கவும்.
எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சரி பார்க்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
கடுகு அனைத்தும் வெடித்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
தாளித்த கடுகை கலந்து வைத்துள்ள சாலட் மேலே கொட்டவும்.
நன்கு கலந்து விட்ட பின்னர் சுவைக்கவும்.
காலை அல்லது மாலை வேளை உணவாக சுவைக்கலாம்.
பப்பாளியை கறியாக மட்டுமே
ReplyDeleteபயன்படுத்தி வந்தோம்
தங்கள் பதிவு புதிய செய்முறையைச் சொன்னது
மிக்க பலனுள்ளது எங்களுக்கு
காரணம் பப்பாளி மரம் எங்கள் வீட்டில்
காய்த்து வீணாகிக் கொண்டிருக்கிறது
படங்களுடன் பகிர்ந்த விதம் அருமை
வாழ்த்துக்கள்
நன்றி Ramani S அவர்களே!!
Deleteபப்பாளிக்காயை கூட்டு, மோர்குழம்பு அல்லது சாம்பார் செய்யவே நானும் உபயோகித்து வந்தேன். அவ்வாறு வேக வைக்கும் போது அதன் ருசி சுரைக்காய் அல்லது சௌசௌ போன்றே இருப்பதாக எனக்கு தோன்றியது. ஒரு நாள் Fox Traveller தொலை காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தாய்லாந்து உணவு வகைகளை காட்டினார்கள். அங்கு பப்பாளிக்காய் சாலட் மிகவும் பிரசித்தம் என செய்முறையை காட்டினார்கள். அதன் பின்னர் நானும் என் சுவைக்கு ஏற்றவாறு சாலட் செய்து பார்த்தேன். மிகவும் ருசியாக இருந்தது. அன்று முதல் பப்பாளிக்காய் கிடைத்தால் சாலட் மட்டுமே செய்து சுவைக்கிறேன்.
கட்டாயம் தவறாமல் செய்து சுவைக்கவும். அபாரமாக இருக்கும்.
வெளி மாநிலத்தில் தனியாக வசிக்கும் என் போன்றவர்களுக்கு பயனுள்ள தளம். வலைச்சரம் மூலம் தங்கள் தளத்திற்கு வந்தேன். தொடர்கிறேன்.
ReplyDeleteகவிப்ரியன் கலிங்கநகர் அவர்களே
Deleteநன்றி. வெளிநாட்டில் படிப்பதற்காக சென்றுள்ள என் அருமை மகளுக்காகவே ஆங்கிலத்தில் சமையல் குறிப்புகளை பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தேன். தங்களை போல தனியாக வெளி நாட்டில் வாழுகின்ற அன்பர்கள் சிலர் தமிழிலும் எழுதினால் தங்களுக்கு உபயோகமாக இருக்கும் என விரும்பினார்கள். அதனால் சென்ற டிசம்பர் 2013 முதல் தமிழில் சமையல் குறிப்புகளை பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தேன்.
மிகவும் எளிமையாக குறுகிய நேரத்தில் சுவையான மற்றும் சத்தான சமையலை செய்யும் முறையை பகிர்ந்து கொள்வதே என் நோக்கம் ஆகும்.
தங்களை போன்றவர்களின் வாழ்த்துக்கள் எனக்கு மேலும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. தொடர்ந்து எனது வலை தளத்துக்கு விஜயம் செய்யவும்.