#நெல்லிக்காய்தயிர்பச்சடி : #நெல்லிக்காய் இனிப்பு, புளிப்பு, கசப்பு மற்றும் துவர்ப்பு போன்ற சுவைகளை தன்னுள்ளே கொண்ட ஒரு சத்தான கனியாகும். ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லிக்கனி, நெல்லி இலை மற்றும் மரத்தின் பட்டை ஆகியவற்றை பழங்காலந்தொட்டே உபயோகப் படுத்தி வருகிறார்கள்.
இக்கனியை அப்படியே சுவைக்கலாம். ஊறுகாய், சட்னி, துவையல், ஜாம் போன்ற உணவு பண்டங்களை உருவாக்கியும் சுவைக்கலாம். இங்கு நெல்லிக்கயையும் தயிரையும் சேர்த்து ஒரு சுவையான பச்சடி செய்வது எப்படி என காணலாம். இந்த பச்சடி இட்லி தோசை போன்ற பலகாரங்களுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
இனி செய்முறையை காண்போம்.

தேவையான பொருட்கள் : | |
---|---|
2 or 3 | நெல்லிக்காய் [ amla ] |
2 or 3 | முந்திரி பருப்பு [ விருப்பப்பட்டால் ] |
2 or 3 | பச்சை மிளகாய் [ அட்ஜஸ்ட் ] |
3 Tsp | தேங்காய் துருவல் |
1/2 Tsp | சீரகம் [ Jeera ] |
1/2 cup | தயிர் |
3/4 Tsp | உப்பு |
தாளிக்க : | |
1/2 Tsp | கடுகு |
1 Tsp | உளுத்தம் பருப்பு |
1 Tsp | எண்ணெய் |
செய்முறை :
தயிரை தேக்கரண்டியால் நன்கு அடித்து கடைந்து வைக்கவும்.
நெல்லிக்காயின் கொட்டையை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
வாணலியை சூடாக்கி என்னை விட்டு கடுகு வெடிக்க விடவும்.
பிறகு உளுத்தம் பருப்பை போட்டு சிவக்க வறுக்கவும்.
பருப்பு சிவந்ததும் தாளித்ததை கடைந்து வைத்துள்ள தயிரின் மேல் கொட்டவும்.
அதே வாணலியில் நெல்லிக்காய் துண்டுகளை இலேசாக சிவக்கும் வரை வதக்கவும்.
தயிர் நீங்கலாக மற்ற அனைத்தையும் வதக்கிய நெல்லிக்காயுடன் மிக்ஸியில் கொகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
ஒரு கிண்ணத்தில் அரைத்ததை எடுத்து வைக்கவும்.
அத்துடன் தயிரை சேர்த்து கலக்கவும்.
கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.
No comments:
Post a Comment