Search This Blog

Showing posts with label சூப். Show all posts
Showing posts with label சூப். Show all posts

Wednesday, November 4, 2020

Rasam_&_Soup_Varieties

 ரசம் வகைகள் மற்றும் சூப் வகைகள் :

சில ரசம் செய்முறைகள் பதிவுகளுக்கான இணைப்புகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.




மதராஸ் ரசப் பொடி
மதராஸ் ரசப் பொடி
மதராஸ் ரசப் பொடி

ரசம் வகைகள்
மதராஸ் ரசம்
மதராஸ் ரசம்
ரசம் - புளி ரசம்
ரசம் - புளி ரசம்
எலுமிச்சை ரசம்
எலுமிச்சை ரசம்
ஆரஞ்சு பழ ரசம்
ஆரஞ்சு பழ ரசம்
புளிச்சாறு
புளிச்சாறு
கோடம்புளி ரசம்
கோடம்புளி ரசம் [ kokum rasam ]
தக்காளி ரசம்
தக்காளி ரசம்
கொள்ளு ரசம்
கொள்ளு ரசம்

சூப் வகைகள்
சூப் வகைகள்
சூப் வகைகள்



விதவிதமான சமையல் செய்முறைகள் 






Saturday, June 13, 2015

Soup

#சூப் வகைகள் : #சூப் பொதுவாக உணவு அருந்துவதற்கு முன் பருகப்படுகிறது.
சூப்பை தமிழில் சத்தான கஞ்சி என கூறலாம். அந்தந்த காலங்களில் கிடைக்கும் காய்கறிகள், கீரை வகைகள் ஆகியவற்றை சில உடைத்த தானிய வகைகளுடன் சேர்த்து கொதிக்க வைத்து மிளகுடன் சேர்த்து பருகும் போது தேவையான சத்துக்கள் நம் உடலில் சேர்கிறது. சூப்பை ஒரு முழுமையான உணவு என்று கூறலாம்.
சூப்பை செய்தவுடன் சூடாக பருகுவது அவசியம். மறுபடி மறுபடி கொதிக்க வைத்தால் சூப்பில் சேர்த்துள்ள காய் மற்றும் கீரை அதிகமாக வெந்து அதன் சத்து நமக்கு கிடைக்காமல் போக வாய்ப்பு அதிகம்.
சூப் கஞ்சி பதத்திற்கு கொண்டு வருவதற்காக பெரும்பாலும் சோள மாவு அல்லது சில சமயங்களில் மைதா மாவு சேர்க்கப் படுகிறது. அதற்கு பதிலாக உடைத்த கோதுமை, ஓட்ஸ், உடைத்த மக்காசோளம், உடைத்த கம்பு  போன்ற தானிய வகைகள்  சேர்ப்பதால் நார்சத்து மற்றும் தாதுக்கள் அதிக அளவில் கிடைக்கும். புரதம் நிறைந்த #பாப்பரை [ #buckwheat ] மாவு, வேக வைத்த பாப்பரை [ buckwheat ] மற்றும் வேகவைத்த #அமராந்தம் ஆகியவற்றை சேர்ப்பதால் நார்சத்துடன் புரதமும் நமக்கு கிடைக்கிறது.

  • கீழே உள்ள படங்களின் மேல் அம்பு குறி [ cursor ஐ ] யை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்து கொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் தங்களை பதிவிற்கு எடுத்துச் செல்லும்.

மஷ்ரூம் சூப்
மஷ்ரூம் சூப்
மஷ்ரூம் பாலக் சூப்
மஷ்ரூம் பாலக் சூப்
கொத்தமல்லி சூப்
கொத்தமல்லி சூப்
தக்காளி சூப்
தக்காளி சூப்
பப்பாளிக்காய் சூப்
பப்பாளிக்காய் சூப்
பாப்பரை சூப்
பாப்பரை சூப்
பாப்பரை சூப் 1
பாப்பரை சூப் 1





Saturday, January 17, 2015

Papaya-Soup

#பப்பாளிக்காய்சூப் : பப்பாளி காயாக இருக்கும் போது அதில் நோயை எதிர்க்கவல்ல என்சைம்கள் அதிக அளவில் நிறைந்து இருக்கிறது. பழமாக மாறும் போது இந்த என்சைம்களின் வீரியமும் அளவும் குறைந்து விடுகிறது. இந்த #பப்பாளிக்காய் உணவு செரிமானத்திற்கும் மலச்சிக்கல் வராமல் தவிர்ப்பதற்கும் மிக மிக உதவியாக இருக்கிறது.
காயை எப்படி சாப்பிடுவது என்று நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகிறது!!
சுரைக்காய், சௌ சௌ, பூசணிக்காய் போல இதனையும் சாம்பார், கூட்டு, மற்றும் மோர் குழம்பு ஆகியவை செய்யலாம். பச்சையாக சாலட் செய்தும் சாப்பிடலாம்.
இங்கு பப்பாளி காய் உபயோகித்து சூப் எவ்வாறு செய்யலாம் என காண்போம்.

பப்பாளிக்காய் சூப்


தேவையான பொருட்கள் :
1/2 கப்பப்பாளிக்காய் பொடியாக அரிந்தது
1 Tbspவெங்காயம் பொடியாக அரிந்தது
1 tspபூண்டு பொடியாக அரிந்தது
1/2 tspகொத்தமல்லி தழை பொடியாக அரிந்தது
1 1/2 Tbspபாப்பரை மாவு*
1/2 tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
1 tspமிளகுப்பொடி
1/2 tspகாய்ந்த புதினா இலைகள் [ இருந்தால் ]

*பாப்பரை மாவு இல்லையென்றால் ஓட்ஸ் அல்லது சோளமாவு உபயோகிக்கலாம்.

செய்முறை :

  • ஒரு கிண்ணத்தில் 1 1/4 கப் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.
  • மிதமான தீயில் சூடாக்கவும்.
  • கொதிக்க ஆரம்பித்ததும் வெங்காயம், பூண்டு மற்றும் பப்பாளிகாயை சேர்க்கவும்.
  • தீயை குறைத்து பப்பாளிக்காய் வேகும் வரை அடுப்பில் சூடாக்கவும்.
  • பப்பாளிக்காய் வெந்தவுடன் பாப்பரை மாவை ஒரு சிறு கிண்ணத்தில் 1/4 கப் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்.
  • சூப் பளபளப்பாக மாறி கஞ்சி பதத்தை அடைந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  • உப்பு சேர்த்து கலக்கி விடவும்.
  • சூப் அருந்தும் கிண்ணத்தில் எடுத்து வைத்து கொத்தமல்லி புதினா மற்றும் மிளகுப்பொடி தூவி பரிமாறவும்.
  • ஆஹா!! அருமையான பப்பாளிக்காய் சூப் தயார்!! சூடாக அருந்தி மகிழவும்!!

பப்பாளிக்காய் சூப்

குளிர்காலத்தில் மாலை வேளையில் அருந்துவதற்கு ஏற்ற பானம் ஆகும்.
செய்து பாருங்களேன்!! இதன் சுவை உங்களை மறு முறையும் செய்ய தூண்டும்!!





மேலும் சில சூப் வகைகள் முயற்சி செய்து பார்க்க
மஷ்ரூம் சூப்
மஷ்ரூம் சூப்
மஷ்ரூம் பாலக் சூப்
மஷ்ரூம் பாலக் சூப்
தக்காளி சூப்
தக்காளி சூப்
கொத்தமல்லி சூப்
கொத்தமல்லி சூப்





Sunday, January 19, 2014

Buckwheat Soup

#பாப்பரைசூப் : #பாப்பரை [ #buckwheat ]யை பற்றி வலை தளத்தில் படித்த போது, இதனை சாலட் வகைகளிலும் மேலும் கஞ்சி செய்வதற்கும் பயன் படுத்தினார்கள் என அறிந்தேன்.

 #சூப் என்பது கஞ்சியின் ஒரு வடிவம்தானே ! அதனால் சில காய்கள் மற்றும் காளான் கொண்டு செய்து பார்க்கலாம் என முயற்சித்தேன். நன்றாக இருந்ததால் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

பாப்பரை சூப்


தேவையான பொருட்கள் :
2 Tbsp                                 பாப்பரை வேகவைத்தது
1 Tsp                                   காரட் மெல்லியதாக அரிந்தது
1 Tsp                                   முட்டைகோஸ்  மெல்லியதாக அரிந்தது
2                                          காளான் பொடியாக அரியவும்
2 பற்கள்                            பூண்டு நசுக்கியது
சின்ன துண்டு                 இஞ்சி நசுக்கியது
1 Tsp                                   மதராஸ் ரசப்பொடி
1/2 Tsp                                உப்பு

சுவை கூட்ட :
1/2 Tsp                               எலுமிச்சை சாறு
பூண்டு தாள், கொத்தமல்லி தழை, மற்றும் மிளகுத்தூள்

செய்முறை :
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் சூடு பண்ணவும்.
காற்று குமிழிகள் லேசாக பாத்திரத்தின் அடியில் வந்ததும் காளான் மற்றும் உப்பு தவிர மற்ற அனைத்தையும் சேர்க்கவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் குறைந்த தீயில் வேகவிடவும்.
முட்டைகோஸ் முக்கால் பாகம் வெந்ததும் காளானை சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் அல்லது காளான் வெந்தவுடன் உப்பை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
எலுமிச்சை சாரை கலந்து விடவும்.
கிண்ணத்தில் ஊற்றி மேலே பூண்டு தாள், கொத்தமல்லி இல்லை மற்றும் மிளகுத்தூள் தூவி பருகவும்.
அருமையாக இருக்கும்.
பாப்பரை [ buckwheat ]
பாப்பரை சூப்
மேலும் சில சூப் வகைகள் முயற்சி செய்ய
மஷ்ரூம் சூப்
மஷ்ரூம் சூப்
கொத்தமல்லி சூப்
கொத்தமல்லி சூப்
தக்காளி சூப்
தக்காளி சூப்
பப்பாளிக்காய் சூப்
பப்பாளிக்காய் சூப்
மஷ்ரூம் பாலக் சூப்
மஷ்ரூம் பாலக் சூப்

Green Coriander Seeds n Buckwheat Soup

#பாப்பரைசூப் 1 : பச்சை கொத்தமல்லி விதை மற்றும் பாப்பரை கொண்டு செய்யப்பட்ட #சூப். மாலை நடைப்பயிற்சிக்கு பிறகு சூடாக குடிப்பதற்காக தினமும் ஒரு  சூப் தயாரிப்பது வழக்கம். அந்த வரிசையில் தயாரிக்கப் பட்ட பாப்பரை சூப் பற்றி இங்கு பார்ப்போம்.

பாப்பரை சூப்

தேவையான பொருட்கள் :
2 Tbsp                                       வேகவைத்த பாப்பரை
1 Tsp                                         பச்சை கொத்தமல்லி விதை
3 Tsp                                         கொத்தமல்லி தழை
1 Tsp                                         காரட் பொடியாக நறுக்கியது
1                                               காளான் பொடியாக நறுக்கவும்
1/4 Tsp                                     உப்பு

Buckwheat - பாப்பரை 
மற்ற பொருட்கள்
வேகவைத்த பாப்பரை 
பச்சை கொத்தமல்லி விதைகள் 

சூப்பில் சேர்க்க :
மிளகுதூள், கொத்தமல்லி தழை  மற்றும் வறுத்த பூண்டு துகள்கள்

செய்முறை :
அடுப்பில் 1 கப் தண்ணீரை சூடாக்கவும். இலேசான சூடு வந்ததும் வேகவைத்த பாப்பரையை சேர்க்கவும். 2 நிமிடங்கள் கொதித்த பிறகு காரட் துண்டுகளை சேர்க்கவும்.
காரட் முக்கால் பாகம் வெந்த பிறகு கொத்தமல்லி தழை மற்றும் விதையை மிக்சியில் ஒரு சுற்று சுற்றி சூப்பில் சேர்க்கவும்.
கொதிக்கும் திரவம் சூப் தன்மையை அடைந்ததும் காளானை சேர்க்கவும்.

ஒரு கொதி வந்து காளான் வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
உப்பு சேர்த்து கலக்கவும்.

சூப்பை ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி கொத்தமல்லி தழை, மிளகுதூள் மற்றும் வறுத்த பூண்டு துகள்களை தூவி பருகவும்.

பாப்பரை சூப்

கொத்தமல்லி மனதுடன் அருமையான சூப் தயார்.

மேலும் சில சூப் வகைகள் முயற்சி செய்ய
மஷ்ரூம் சூப்
மஷ்ரூம் சூப்
மஷ்ரூம் பாலக் சூப்
மஷ்ரூம் பாலக் சூப்
கொத்தமல்லி சூப்
கொத்தமல்லி சூப்
தக்காளி சூப்
தக்காளி சூப்
பப்பாளிக்காய் சூப்
பப்பாளிக்காய் சூப்


Tomato Soup

#தக்காளிசூப் : தினமும் தக்காளி நீங்கலாக வெவ்வேறு காய் , கீரை மற்றும் காளான் கொண்டு  சூப் தயாரித்து விட்டேன் .  இரு தினங்களுக்கு முன் தக்காளி சூப் செய்வதெப்படி என்ற பிரபல சமையல் வல்லுநர் சஞ்சீவ் கபூர் வீடியோ பார்த்தேன். பிறகு என்னிடம் இருக்கும் பொருட்களைக் கொண்டு என் விருப்பப் படி சூப்பை தயாரித்தேன்.

தக்காளி சூப்


தேவையான பொருட்கள் :


1 நடுத்தர அளவு                   தக்காளி
1 சிறிய அளவு                       வெங்காயம், நீள வாக்கில் அரியவும்
3 பற்கள்                                   பூண்டு , நீள வாக்கில் அரியவும்
2 Tsp                                            கொத்தமல்லி பச்சை விதை ( கிடைத்தால் )
1/2 Tsp                                         மிளகு
1 அ 2                                          பிரிஞ்சி இலை
1 Tbsp                                          ஓட்ஸ்
1/2 Tsp                                         எண்ணெய்
1 Tsp                                            வெண்ணெய்

அலங்கரிக்க :
மிளகுபொடி மற்றும் கொத்தமல்லி தழை

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்க்கவும்.
சூடாகியதும் பிரிஞ்சி இல்லை, பூண்டு, வெங்காயம், கொத்தமல்லி விதை ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
பிறகு தக்காளி துண்டுகளை சேர்த்து மிளகையும் போட்டு சிறிது வதக்கி 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
தக்காளி மிருதுவாக வெந்தவுடன் அடுப்பை நிறுத்தி ஆற விடவும்.
ஆறியவுடன் வெந்த பொருட்களை மட்டும் எடுத்து மிக்சியில் கூழாக்கவும்.
இந்த கூழை முன்பு வேகவைத்த அதே வாணலியில் ஊற்றி மீண்டும் அடுப்பில் ஏற்றவும்.
இப்போது ஓட்ஸ் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கூழ் போல வந்தவுடன் உப்பு சேர்த்து இறக்கவும்.
சூப் கிண்ணத்தில் ஊற்றி மிளகு பொடி தூவி மல்லி தழையால் அலங்கரித்து பருகவும்.
தக்காளி சூப் தக்காளி சூப்

குறிப்பு :
இரண்டு  Tbsp காரட் துண்டுகளையும் தக்காளியுடன் சேர்த்து வேகவைத்து கொள்ளலாம்.
க்ரீம் கடைசியாக சேர்த்தும் சூப் செய்யலாம்.

மற்ற சூப் வகைகள் முயற்சி செய்து பார்க்க :
மஷ்ரூம் சூப்
மஷ்ரூம் சூப்
மஷ்ரூம் பாலக் சூப்
மஷ்ரூம் பாலக் சூப்
கொத்தமல்லி சூப்
கொத்தமல்லிசூப்
பப்பாளிக்காய் சூப்
பப்பாளிக்காய் சூப்