Search This Blog

Showing posts with label lemon. Show all posts
Showing posts with label lemon. Show all posts

Saturday, December 27, 2014

Lemon Pickle - Lemon in Salt

#உப்புஎலுமிச்சை : #எலுமிச்சைபழம் ஊறுகாய்க்கு மிக மிக சிறந்த பழமாகும். இந்த ஊறுகாயில் எலுமிச்சை பழம் உப்புடன் சேர்த்து பதப் படுத்தப்படுகிறது. மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஊறுகாயும் ஆகும்.
இதனை தயார் செய்து சுத்தமான பாட்டிலில் அடைத்து வைத்தால் வருடக்கணக்கில் கெடாமல் இருக்கும்.
வாந்தி வருகிறமாதிரி இருக்கும் போது ஒரு சிறிய துண்டு சாப்பிட்டால் குமட்டல் வராமல் இருக்கும். சுரத்தின் போதும் வாய் கசந்து சாப்பிடவே பிடிக்காது. அப்போதும்  துளி ஊறுகாயை நாக்கில் சப்புகொட்டினால் நன்றாக இருக்கும்.
இனி  எப்படி செய்வது என காண்போம்.

உப்பு எலுமிச்சை [ எலுமிச்சை ஊறுகாய் ]

தேவையான பொருட்கள் :
எலுமிச்சை பழம்
கடல் உப்பு [ கல் உப்பு ]
சுத்தமான பாட்டில்

செய்முறை :
எலுமிச்சை பழத்தை தண்ணீரில் நன்கு கழுவி ஒரு சுத்தமான துணியினால் ஒத்தி எடுத்து ஈரத்தை போக்கவும்.
மேலிருந்து கீழாக வெட்டவும். முழுவதுமாக வெட்டாமல் அடிபகுதி ஒட்டிக்கொண்டிருக்குமாறு வெட்டவேண்டும்.
இப்போது  குறுக்காக அதே போல வெட்டவும்.
 4 துண்டுகளாக பிளக்குமாறு இருக்க வேண்டும்.


நன்கு விரித்து வைத்து உப்பை அழுத்தி நிரப்பவும்.

பாட்டிலினுள் ஒவ்வொன்றாக உப்பு கொண்டு நிரப்பிய பின் அடுக்கவும்.
மூடி போட்டு இரண்டு மூன்று நாட்கள் மூடி வைக்கவும்.


எலுமிச்சையிலிருந்து தண்ணீர் வெளிவந்து உப்பை கரைக்கும்.
இந்த தண்ணீர் பாட்டிலின் உள்ளே கீழ் பகுதியில் இருப்பதை காணலாம்.




இவ்வாறு தண்ணீர் அடியில் தங்க ஆரம்பித்த பிறகு தினமும் எல்லா எலுமிச்சை மீதும் படுமாறு ஒரு முறை தினமும் குலுக்கி விட்டு வைக்கவும்.
நாளாக நாளாக எலுமிச்சையின் நிறம் மாறத் துவங்கும்.
எலுமிச்சை தோலும் மிருதுவாக ஆகத் துவங்கும்.
சுமார் ஒரு மாதம் ஆன பிறகு எலுமிச்சை முழுவதுமாக நிறம் மாறி மிருதுவான உப்பு சுவையுடன் கூடிய ஊறுகாயாக மாறி விடும்.
பாட்டிலின் அடியில் தங்கியுள்ள நீரும்  கெட்டியாகி தேன் போன்ற தன்மையாக மாறி விடும்.
இதனை இப்போது உபயோகிக்க ஆரம்பிக்கலாம்.
இந்த உப்பு எலுமிச்சை பல வருடங்களுக்கு உபயோகப் படுத்தலாம்.

உப்பு எலுமிச்சை [ எலுமிச்சை ஊறுகாய் ]



குறிப்பு :
மூன்று நான்கு நாட்களுக்கு பிறகு உப்பு தண்ணீரில் இருந்து எடுத்து ஒரு தட்டில் வைத்து வெயிலில் காயவைக்கவும். மாலையில் காய வைத்த எலுமிச்சையை மறுபடியும் பாட்டிலில் உள்ள உப்பு தண்ணீரில் பத்திர படுத்தவும்.
மீண்டும் மறுநாள் காலை தட்டில் எலுமிச்சையை வைத்து காய வைக்கவும்.
உப்பு நீர் அனைத்தையும் எலுமிச்சை உறுஞ்சும் வரை இதே போல காய வைத்து எடுக்கவும்.
பிறகு நன்கு காய வைத்து பாட்டிலில் பத்திர படுத்தவும்.








சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

நெல்லிக்காய் தயிரில் ஊறியது
நெல்லிக்காய் தயிரில் ஊறியது
நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய் ஊறுகாய்
தேன் நெல்லிக்காய்
நெல்லிக்காய் தேனில் ஊறியது
ஆவக்காய் ஊறுகாய்
ஆவக்காய் ஊறுகாய்




Sunday, May 18, 2014

Lemon Ginger Juice

#எலுமிச்சைஇஞ்சிபானம்  : #எலுமிச்சைபழம் உலகத்தின் எல்லாவகையான உணவுகளிலும் அதன் புளிப்பு சுவைக்காக பயன் படுத்தப்படுகிறது. வைட்டமின் C அதிக அளவில் உள்ள ஒரு அற்புதமான பழமாகும். உடலில் இரும்பு சத்து சேர வேண்டுமானால் வைட்டமின் C சத்துள்ள ஆகாரங்களை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த வகையில் இந்த வைட்டமின் C நிரம்ப உள்ள எலுமிச்சை மிக சுலபமாக எல்லோராலும் எடுத்துக்கொள்ளக் கூடிய பழம் ஆகும்.
இஞ்சி அதனுடைய நறுமணத்திற்காகவும் உணவு செரிமானத்திற்காகவும் உணவு தயாரிப்பில் பயன் படுத்தப் படுகிறது.
இந்த இரண்டையும் சேர்த்து கோடைக்கு ஏற்ற ஒரு குளிர் பானத்தை தயாரிக்கலாம்.

எலுமிச்சை இஞ்சி பானம்

1 கப் பானம் தயாரிக்க
தேவையான பொருட்கள் :
1/2                                  எலுமிச்சை, கொட்டைகளை நீக்கவும்
1/2 அங்குல                  இஞ்சி துண்டு
2 Tsp                               வெல்லம்
1 சிட்டிகை                   உப்பு


செய்முறை :
இஞ்சியின் தோலை நீக்கி 1/4 கப் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் ஒரு கண்ணாடி தம்ளரை எடுத்து எலுமிச்சையை பிழிந்து சாறை சேர்க்கவும்.
இஞ்சி ஊறிய தண்ணீர் 3 தேக்கரண்டி சேர்க்கவும்.
வெல்லம், உப்பு மற்றும் 3/4 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
இஞ்சியின் நறுமணத்துடன் கூடிய சுவையான குளிர் பானம் தயார்.
சுவைத்து மகிழவும்.

எலுமிச்சை இஞ்சி பானம்

குறிப்பு :
வெல்லம் மற்றும் தண்ணீரின் அளவை அவரவர் விருப்பப்படி கூட்டி குறைத்துக் கொள்ளவும்.
விரும்பினால் புதினா கஷாயம் உபயோகித்து செய்த ஐஸ் கட்டிகளை போட்டு சுவைக்கலாம்




மற்ற சில பானங்கள்
புதினா கஷாயம்
புதினா கஷாயம்
பானகம்
பானகம்
மாங்காய் பானம் [ ஆம் பண்ணா ]
ஆம் பண்ணா
நீர் மோர்
நீர் மோர்
தேநீர்
தேநீர்

Tuesday, December 31, 2013

Elumichai Sadam

#எலுமிச்சை சாதம் : #கலந்தசாதம் வகைகளில் எலுமிச்சை சாதம் மிக ருசியானதும் , செய்வது மிக எளிதும் ஆகும். மதிய உணவுக்கோ அல்லது பயணத்திற்கோ எடுத்து செல்ல உகந்த சாதமாகும். செய்வதெப்படி என பார்க்கலாம்.

எலுமிச்சை சாதம்



தேவையான பொருட்கள் :
1 கப்                                  பச்சரிசி
1                                        எலுமிச்சை பழம்
4 Tsp                                  நல்லெண்ணெய்


தாளிக்க :
1 Tsp                                  கடுகு
1 Tsp                                  உளுத்தம் பருப்பு
2 Tsp                                  கடலை பருப்பு
4 Tsp                                  நிலகடலை
1/4 Tsp                               வெந்தயம் ( விருப்பப்பட்டால் )
10 - 15                                கருவேப்பிலை
2                                         பச்சை மிளகாய்
2 Tsp                                  கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
2 Tsp                                  நல்லெண்ணெய்

தேவையான பொடிகள் :
1/4 Tsp                              மஞ்சத்தூள்
1/2 Tsp                              மிளகாய்த்தூள்
1/2 Tsp                              சீரகத்தூள்
1/4 Tsp                             பெருங்காயதூள்
2 Tsp                                 உப்பு

செய்முறை :
எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி கொட்டைகளை நீக்கவும்.
ஒரு சின்ன கிண்ணத்தில் தண்ணீரில் மூழ்கி இருக்கும் படி வைக்கவும்.


பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை கழுவி நீர் போக துடைத்த பின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

அரிசியை களைந்து குக்கரில் போட்டு 2 கப் தண்ணீர் விடவும்.
குக்கரை மூடி அதிக தீயில் 3 விசில் வரும் வரை வேகவிட்டு பின் தீயை குறைத்து 3 நிமிடங்கள் வேகவிடவும்.
ஆவி அடங்கியவுடன் திறந்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி எண்ணெய் விட்டு பரப்பி காற்றாடிக்கு அடியில் ஆற வைக்கவும்.  அழுத்தம் கொடுக்காமல் ஒரு நீண்ட தேக்கரண்டியினால் அவ்வப்போது கிளறி விடவும். சாதப் பருக்கைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் உதிர் உதிராக இருக்கவேண்டும்.

அடுப்பில் வாணலியை சிறிய தீயில் வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் முதலில் கடுகை வெடிக்கவிட்டு பின் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வெந்தயம் மற்றும் நிலகடலை ஆகியவற்றை வரிசையாக போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
அடுத்து பச்சை மிளகாய், கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து 2 நிமிடங்கள் வறுக்கவும்.
இப்போது கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொடிகளையும் சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விடவும்.


அடுப்பை அணைத்த பின் எலுமிச்சை பழத்தை பிழிந்து சாரை வாணலியில் வறுத்த பொருட்களுடன் சேர்க்கவும்.


இப்போது தயாரித்துள்ள எலுமிச்சை கலவையை சாதத்தின் மேல் ஊற்றி நன்கு கிளறவும்.


சாதத்தை அழுத்தி பிசைந்து கூழாக்கி விடக் கூடாது.
உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சரி பார்க்கவும்.
தேவையானால் சிறிது சேர்த்து கலக்கி விடவும்
சுவையான எலுமிச்சை சாதம் தயார்.

எலுமிச்சை சாதம்

அப்பளம் அல்லது வத்தல் அல்லது உருளை கிழங்கு பொடிமாஸ் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

எலுமிச்சை சாதம்

நன்றாக ஆறிய பிறகே டப்பாவில் எடுத்து வைக்க வேண்டும்.


Friday, December 20, 2013

Carrot Salad

காரட்சாலட் : இங்கு பொதுவாக ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் காரட் இல்லாமல் சிகப்பு காரட் அதிகமாக கிடைக்கிறது. சிகப்பு காரட் அதிக நீர் சத்து உள்ளதாக இருக்கிறது. பொரியல் செய்தால் நசநசத்து போய் விடுகிறது. இவ்வகை காரட் சலாட் செய்யவே உகந்தது. இந்த  சிகப்பு காரட் கொண்டு ஒரு எளிமையான சலாட் எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

காரட்சாலட்

தேவையான பொருட்கள் :


1 கப்                                   சிகப்பு காரட் துருவியது
1                                           பச்சை மிளகாய்
1 Tsp                                    கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
1/2 Tsp  ( adjust )                 உப்பு
1 1/2 Tsp ( அட்ஜஸ்ட் )  எலுமிச்சை சாறு

தாளிக்க :
1 Tsp                                   நல்லெண்ணெய்
1 Tsp                                   கடுகு

செய்முறை :


பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களுடன் கலக்கவும்.

கேரட் சாலட்

இதை அப்படியே  தாளிக்காமல்  சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.

தாளித்து பரிமாறினால் இன்னும் சுவை மிகுந்ததாக இருக்கும்.
பொதுவாக சாலட் என்றவுடன் ஆலிவ் எண்ணெய் தான் நினைவுக்கு வரும்.
மேலை நாட்டவருக்கு  ஆலிவ் எண்ணெய் என்றால் நமக்கு நல்லெண்ணெய் மிகவும் பிடித்தமானது.

வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகை வெடிக்கவிட்டு தயாரித்த காரட் சாலாட்டின் மேல் ஊற்றவும். கேரட் சாலட்

கேரட் சாலட்

தேக்கரண்டியினால் நன்றாக கலக்கி விடவும்.

கேரட் சாலட்

ம் ..ம்... அருமையான காரட் சாலாட் தயார்.






மேலும் சில பச்சடி வகைகள் செய்து சுவைக்க

வாழைப்பூ வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைப்பூ தயிர் 
பச்சடி
பப்பாளி காரட் சாலட்
பப்பாளி காரட் 
சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
மாங்காய் பச்சடி
மாங்காய்
பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி