#எலுமிச்சைஇஞ்சிபானம் : #எலுமிச்சைபழம் உலகத்தின் எல்லாவகையான உணவுகளிலும் அதன் புளிப்பு சுவைக்காக பயன் படுத்தப்படுகிறது. வைட்டமின் C அதிக அளவில் உள்ள ஒரு அற்புதமான பழமாகும். உடலில் இரும்பு சத்து சேர வேண்டுமானால் வைட்டமின் C சத்துள்ள ஆகாரங்களை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த வகையில் இந்த வைட்டமின் C நிரம்ப உள்ள எலுமிச்சை மிக சுலபமாக எல்லோராலும் எடுத்துக்கொள்ளக் கூடிய பழம் ஆகும்.
இஞ்சி அதனுடைய நறுமணத்திற்காகவும் உணவு செரிமானத்திற்காகவும் உணவு தயாரிப்பில் பயன் படுத்தப் படுகிறது.
இந்த இரண்டையும் சேர்த்து கோடைக்கு ஏற்ற ஒரு குளிர் பானத்தை தயாரிக்கலாம்.
1 கப் பானம் தயாரிக்க
தேவையான பொருட்கள் :
1/2 எலுமிச்சை, கொட்டைகளை நீக்கவும்
1/2 அங்குல இஞ்சி துண்டு
2 Tsp வெல்லம்
1 சிட்டிகை உப்பு
செய்முறை :
இஞ்சியின் தோலை நீக்கி 1/4 கப் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் ஒரு கண்ணாடி தம்ளரை எடுத்து எலுமிச்சையை பிழிந்து சாறை சேர்க்கவும்.
இஞ்சி ஊறிய தண்ணீர் 3 தேக்கரண்டி சேர்க்கவும்.
வெல்லம், உப்பு மற்றும் 3/4 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
இஞ்சியின் நறுமணத்துடன் கூடிய சுவையான குளிர் பானம் தயார்.
சுவைத்து மகிழவும்.
குறிப்பு :
வெல்லம் மற்றும் தண்ணீரின் அளவை அவரவர் விருப்பப்படி கூட்டி குறைத்துக் கொள்ளவும்.
விரும்பினால் புதினா கஷாயம் உபயோகித்து செய்த ஐஸ் கட்டிகளை போட்டு சுவைக்கலாம்

No comments:
Post a Comment