Search This Blog

Tuesday, December 31, 2013

Elumichai Sadam

#எலுமிச்சை சாதம் : #கலந்தசாதம் வகைகளில் எலுமிச்சை சாதம் மிக ருசியானதும் , செய்வது மிக எளிதும் ஆகும். மதிய உணவுக்கோ அல்லது பயணத்திற்கோ எடுத்து செல்ல உகந்த சாதமாகும். செய்வதெப்படி என பார்க்கலாம்.

எலுமிச்சை சாதம்



தேவையான பொருட்கள் :
1 கப்                                  பச்சரிசி
1                                        எலுமிச்சை பழம்
4 Tsp                                  நல்லெண்ணெய்


தாளிக்க :
1 Tsp                                  கடுகு
1 Tsp                                  உளுத்தம் பருப்பு
2 Tsp                                  கடலை பருப்பு
4 Tsp                                  நிலகடலை
1/4 Tsp                               வெந்தயம் ( விருப்பப்பட்டால் )
10 - 15                                கருவேப்பிலை
2                                         பச்சை மிளகாய்
2 Tsp                                  கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
2 Tsp                                  நல்லெண்ணெய்

தேவையான பொடிகள் :
1/4 Tsp                              மஞ்சத்தூள்
1/2 Tsp                              மிளகாய்த்தூள்
1/2 Tsp                              சீரகத்தூள்
1/4 Tsp                             பெருங்காயதூள்
2 Tsp                                 உப்பு

செய்முறை :
எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி கொட்டைகளை நீக்கவும்.
ஒரு சின்ன கிண்ணத்தில் தண்ணீரில் மூழ்கி இருக்கும் படி வைக்கவும்.


பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை கழுவி நீர் போக துடைத்த பின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

அரிசியை களைந்து குக்கரில் போட்டு 2 கப் தண்ணீர் விடவும்.
குக்கரை மூடி அதிக தீயில் 3 விசில் வரும் வரை வேகவிட்டு பின் தீயை குறைத்து 3 நிமிடங்கள் வேகவிடவும்.
ஆவி அடங்கியவுடன் திறந்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி எண்ணெய் விட்டு பரப்பி காற்றாடிக்கு அடியில் ஆற வைக்கவும்.  அழுத்தம் கொடுக்காமல் ஒரு நீண்ட தேக்கரண்டியினால் அவ்வப்போது கிளறி விடவும். சாதப் பருக்கைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் உதிர் உதிராக இருக்கவேண்டும்.

அடுப்பில் வாணலியை சிறிய தீயில் வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் முதலில் கடுகை வெடிக்கவிட்டு பின் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வெந்தயம் மற்றும் நிலகடலை ஆகியவற்றை வரிசையாக போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
அடுத்து பச்சை மிளகாய், கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து 2 நிமிடங்கள் வறுக்கவும்.
இப்போது கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொடிகளையும் சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விடவும்.


அடுப்பை அணைத்த பின் எலுமிச்சை பழத்தை பிழிந்து சாரை வாணலியில் வறுத்த பொருட்களுடன் சேர்க்கவும்.


இப்போது தயாரித்துள்ள எலுமிச்சை கலவையை சாதத்தின் மேல் ஊற்றி நன்கு கிளறவும்.


சாதத்தை அழுத்தி பிசைந்து கூழாக்கி விடக் கூடாது.
உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சரி பார்க்கவும்.
தேவையானால் சிறிது சேர்த்து கலக்கி விடவும்
சுவையான எலுமிச்சை சாதம் தயார்.

எலுமிச்சை சாதம்

அப்பளம் அல்லது வத்தல் அல்லது உருளை கிழங்கு பொடிமாஸ் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

எலுமிச்சை சாதம்

நன்றாக ஆறிய பிறகே டப்பாவில் எடுத்து வைக்க வேண்டும்.


No comments:

Post a Comment