Search This Blog

Showing posts with label பச்சடி. Show all posts
Showing posts with label பச்சடி. Show all posts

Monday, November 9, 2020

பச்சடி_வகைகள் - Salad / Raitha_Varieties

 பச்சடி வகைகள் : காரட், வெள்ளரிக்காய், வெங்காயம் போன்ற சில காய்கறிகளை பச்சையாகத் துருவி அல்லது மெல்லியதாக அரிந்து ஒன்றாக கலந்து தயிர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து பச்சடியாக செய்வது உண்டு.

அத்தகைய பச்சடி வகைகள் மற்றும் சில விசேஷமான பச்சடி வகைகளை இங்கு பட்டியலிட்டுள்ளேன்.


பச்சடி வகைகள்
வெந்தயபச்சடி
வெந்தயபச்சடி
வாழைப்பூவாழைத்தண்டுதயிர்பச்சடி
வாழைப்பூ வாழைத்தண்டு தயிர்பச்சடி
நெல்லிக்காய் தயிர் பச்சடி
நெல்லிக்காய் தயிர் பச்சடி
பப்பாளி கேரட் சாலட்
பப்பாளி கேரட் சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
மாங்காய் பச்சடி
மாங்காய் பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி
காரட் சாலட்
காரட் சாலட்
பப்பாளி அன்னாசி சாலட்
பப்பாளி அன்னாசி சாலட்
Fruit Salad - பழக்கலவை
பழக்கலவை - Fruit salad
தயிர் நெல்லிக்காய்
தயிர் நெல்லிக்காய்



பல வகையான சமையல் செய்முறைகள்

Friday, October 28, 2016

Venthaya Pachadi

#வெந்தயபச்சடி : இந்த #பச்சடி நான்கு வகை சுவைகளான இனிப்பு, காரம், கசப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட ஒரு குழம்பு வகையாகும். ராஜஸ்தானில் பொதுவாக செய்யப்படும் ஒரு குழம்பு ஆகும். #வெந்தயம், உலர்ந்த திராட்சை மற்றும் பேரீச்சம் பழம் ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.
வெந்தயம் கசப்புத்தன்மை உடையதால் அதிகமாக நாம் உணவில் சேர்த்துக்கொள்ள தயங்குவோம். ஆனால் வெந்தயம் தன்னகத்தே பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. தண்ணீரில் கரையக்கூடிய நார் சத்து கொண்டுள்ளது. இது செரிமானத்திற்கும் மல சிக்கலை தவிர்ப்பதற்கும் பேருதவியாக இருக்கிறது. வெந்தயத்தை ஊறவைத்து முளை கட்டி பயன் படுத்தினால் அதன் கசப்பு தன்மை வெகுவாக குறையும். மேலும் புரத சத்தும் நமக்கு அதிகமாக கிடைக்கும்.
இந்த குழம்பின் செயல் முறையை ஒரு தொலை காட்சி நிகழ்ச்சியில் பார்த்தேன். என்னிடம் இருந்த பொருட்களை கொண்டும் எனது ருசிக்கு தக்கவாறும் சிறிது மாற்றங்களை செய்து தயாரித்துப் பார்த்தேன். சுவை மிக மிக அருமை.

Venthaya pachadi


Venthaya pachadi

தேவையானவை :
1/4 cupவெந்தயம் முளைகட்டியது
2 Tbspஉலர்ந்த திராட்சை [ kishmish ]
1/2 Tspமிளகாய்த்தூள் [ adjust ]
1/2 Tspசீரகத்தூள்
2 Tspகொத்தமல்லி தூள்
1 Tspஆம்சூர் பொடி ( மாங்காய் பொடி ) [ adjust ]
1 Tspவெல்லம்
2 Tspஉப்பு [ adjust ]
1/2 Tspகடுகு
1/2 cupசீரகம்
8 - 10கருவேப்பிலை
3 Tspநல்லெண்ணெய் [ sesame / till oil ]

செய்முறை :
முதல் நாள் காலையிலேயே வெந்தயத்தை கழுவிய பிறகு ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.
மாலையில் தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு மூடி போட்டு அடுப்பங்கரையில் இரவு முழுவதும் வைத்திருக்கவும்.
மறுநாள்காலையில் வெந்தயம் முளை கட்டியிருப்பதை காணலாம்.

வெந்தய பச்சடி செய்யத் துவங்குவதற்கு முன் முதலில் உலர்ந்த திராட்சையை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைக்கவும்.

முளை கட்டிய வெந்தயத்தை குக்கரில் போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு இரண்டு விசில் வரும் வரை வேக விடவும்.
ஆவி அடங்கும் வரை காத்திருந்து குக்கரை திறக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடுகு மற்றும் சீரகம் போட்டு வெடிக்க விடவும்.
அடுத்து வேக வைத்த வெந்தயத்தை தண்ணீருடன் வாணலியில் சேர்க்கவும்.
இப்போது மிளகாய் தூள், மஞ்சத்தூள், சீரகத்தூள், மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கலக்கி விடவும்.
பிறகு ஊறவைத்துள்ள உலர்ந்த திராட்சையை போட்டு கலக்கவும்.
ஓரிரு நிமிடங்கள் கழித்து ஆம்சூர் பொடி மற்றும் உப்பு சேர்த்து கலக்கி சிறிய தீயின் மீது வைத்திருக்கவும்.
எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பித்ததும் வெல்லம் சேர்த்து ஒரு கொதி  வந்தவுடன் கருவேப்பிலையை கிள்ளி போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
துவர்ப்பு தவிர எல்லா வகையான சுவையும் நிறைந்த வெந்தய பச்சடி தயார்.

பரிமாறும் கிண்ணத்தில் எடுத்துவைக்கவும்.
பருப்பு சாதம், பொடி கலந்த சாதம் மற்றும் தயிர் சாதம் ஆகியவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

குறிப்பு :
உலர்ந்த திராட்சையுடன் உலர்ந்த பேரீச்சம் பழமும் சேர்த்து செய்யலாம்.



மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
ஆப்ப மாவு
ஆப்ப மாவு
வாழைப்பூ குழம்பு
வாழைப்பூ குழம்பு
வெந்தய குழம்பு
வெந்தய குழம்பு
வாழைப்பூ தயிர் பச்சடி
வாழைப்பூ தயிர் பச்சடி
மாங்காய் பச்சடி
மாங்காய் பச்சடி



Wednesday, July 27, 2016

Vazhaipoo-Vazhaithandu-Thayir-Pachadi

வாழைப்பூவாழைத்தண்டுதயிர்பச்சடி : #வாழைப்பூ துவர்ப்பு சுவையுடையது. அதன் இதழ்களை பிரித்து உள்ளே உள்ள பூக்களை சமைக்க பயன்படுத்தி வருகிறோம். உள்ளே செல்ல செல்ல இதழ்களும் மென்மையாகவும் இளசாகவும் இருப்பதை காணலாம். ஒவ்வொரு பூவிலும் இருக்கும் காம்பும் மென்மையாக இருப்பதையும் காணலாம். பூவின் நடுப்பகுதியில் [ உள் பகுதி ] உள்ளவற்றை  வேக வைக்காமல் பச்சையாக சாப்பிடலாம். துவர்ப்பு சுவையுடன் அருமையாக இருக்கும்.
பச்சையாக சாப்பிடக் கூடிய உள்பகுதி வாழைப்பூ, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய், துருவிய கேரட் மற்றும் வெங்காயம் கொண்டு செய்யப்படும் சுவையான தயிர் பச்சடி பற்றி இங்கு காண்போம்.


தேவையான பொருட்கள் :
1/2 கப்தயிர்
உள்பகுதிவாழைப்பூ
2 Tbspவாழைத்தண்டு நறுக்கியது
2 Tbspவெள்ளரிக்காய் பொடியாக நறுக்கியது
1 Tbspவெங்காயம் பொடியாக நறுக்கியது
1 Tspகாரட் துருவியது
6 - 8கறிவேப்பிலை இலைகள்
1 Tspகொத்தமல்லி பொடியாக நறுக்கியது
1பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
1/2 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
தாளிக்க :
1/2 Tspகடுகு
1/2 Tspஉளுத்தம் பருப்பு
1/2 Tspநல்லெண்ணெய்

செய்முறை :
ஒரு அகன்ற பாத்திரத்தில் தயிரை அடித்து வைக்கவும்.
அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள அனைத்து பொருள்களையும் சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் முதலில் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்.
வெடித்ததும் உளுத்தம் பருப்பை சேர்த்து சிவந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
தாளித்ததை கலக்கி வைத்துள்ள தயிர் பச்சடியின் மேல் கொட்டவும்.
சுவையான தயிர் பச்சடி தயார்.
பருப்பு சாதம், புலாவ், பிரியாணி, பிசிபேளே பாத் ஆகியவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
செய்து சுவைத்து பார்க்கவும்.






மேலும் சில பச்சடி வகைகள் செய்து சுவைக்க

நெல்லிக்காய் தயிர் பச்சடி
நெல்லிக்காய் தயிர் பச்சடி
பப்பாளி கேரட் சாலட்
பப்பாளி கேரட்
சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
மாங்காய் பச்சடி
மாங்காய்
பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி






Wednesday, December 31, 2014

Nellikkai-Thayir-Pachadi

#நெல்லிக்காய்தயிர்பச்சடி : #நெல்லிக்காய் இனிப்பு, புளிப்பு, கசப்பு மற்றும் துவர்ப்பு போன்ற சுவைகளை தன்னுள்ளே கொண்ட ஒரு சத்தான கனியாகும். ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லிக்கனி, நெல்லி இலை மற்றும் மரத்தின் பட்டை ஆகியவற்றை பழங்காலந்தொட்டே உபயோகப் படுத்தி வருகிறார்கள்.
இக்கனியை அப்படியே சுவைக்கலாம். ஊறுகாய், சட்னி, துவையல், ஜாம் போன்ற உணவு பண்டங்களை உருவாக்கியும் சுவைக்கலாம். இங்கு நெல்லிக்கயையும் தயிரையும் சேர்த்து ஒரு சுவையான பச்சடி செய்வது எப்படி என காணலாம். இந்த பச்சடி இட்லி தோசை போன்ற பலகாரங்களுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
இனி செய்முறையை காண்போம்.

நெல்லிக்காய் தயிர்பச்சடி

தேவையான பொருட்கள் :
2 or 3நெல்லிக்காய் [ amla ]
2 or 3முந்திரி பருப்பு [ விருப்பப்பட்டால் ]
2 or 3பச்சை மிளகாய்  [ அட்ஜஸ்ட் ]
3 Tspதேங்காய் துருவல் 
1/2 Tspசீரகம் [ Jeera ]
1/2 cupதயிர்
3/4 Tspஉப்பு
தாளிக்க :
1/2 Tspகடுகு
1 Tspஉளுத்தம் பருப்பு 
1 Tspஎண்ணெய்

செய்முறை :
தயிரை தேக்கரண்டியால் நன்கு அடித்து கடைந்து வைக்கவும்.
நெல்லிக்காயின் கொட்டையை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
வாணலியை சூடாக்கி என்னை விட்டு கடுகு வெடிக்க விடவும்.
பிறகு உளுத்தம் பருப்பை போட்டு சிவக்க வறுக்கவும்.
பருப்பு சிவந்ததும் தாளித்ததை கடைந்து வைத்துள்ள தயிரின் மேல் கொட்டவும்.
அதே வாணலியில் நெல்லிக்காய் துண்டுகளை இலேசாக சிவக்கும் வரை வதக்கவும்.

தயிர் நீங்கலாக மற்ற அனைத்தையும் வதக்கிய நெல்லிக்காயுடன் மிக்ஸியில் கொகொரப்பாக அரைத்தெடுக்கவும்.


ஒரு கிண்ணத்தில் அரைத்ததை எடுத்து வைக்கவும்.
அத்துடன் தயிரை சேர்த்து கலக்கவும்.
உப்பு சரி பார்க்கவும்.

நெல்லிக்காய் தயிர்பச்சடி

கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.







மேலும் சில பச்சடி வகைகள் செய்து சுவைக்க

வாழைப்பூ வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைப்பூ தயிர் 
பச்சடி
பப்பாளி கேரட் சாலட்
பப்பாளி கேரட்
சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
மாங்காய் பச்சடி
மாங்காய்
பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி









Friday, April 25, 2014

Maangai Pachadi

#மாங்காய்பச்சடி :  கோடை என்றதுமே நினைவிற்கு வருவது மாங்காய்தான். என்னதான் புளிப்பாக இருந்தாலும் சப்புக்கொட்டி கொண்டு சாப்பிடுவதே ஒரு அனுபவம்தான்.
தமிழ் புது வருடப்பிறப்பு அன்று #மாங்காய் பச்சடியை வேப்பம் பூவுடன் செய்து புத்தாண்டை வரவேற்பது வழக்கம்.

மாங்காயை கொண்டு இங்கே இனிப்பு பச்சடி எப்படி செய்வது என பார்க்கலாம்.
மிகவும் புளிப்பில்லாத நீட்ட கிளிமூக்கு மாங்காய் [ பெங்களூரா ] பச்சடிக்கு உகந்தது.

மாங்காய் பச்சடி

தேவையான பொருட்கள் :
1                                                  மாங்காய்
1/3 கப்                                        வெல்லம்
1/2 Tsp                                         உப்பு
1                                                   பச்சை மிளகாய்

செய்முறை :
மாங்காய் தோலை சீவி செதில் செதிலாக செதுக்கி வைக்கவும்.
குக்கரில் 1/2 கப் தண்ணீர் விட்டு உப்பையும் பச்சை மிளகாயை கீறியும்  சேர்த்து மாங்காயை ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.
உடனே ஆவியை வெளியேற்றி குக்கரை திறக்கவும்.
வெல்லத்தை பொடித்து சேர்த்து கரண்டியால் நன்கு கலக்கி கரைய விடவும்.
அடுப்பில் குறைந்த தீயில் மூன்று நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
அடுப்பை அணைத்து விட்டு ஒரு கண்ணாடி பாத்திரத்திலோ அல்லது பீங்கான் கிண்ணத்திலோ எடுத்து வைக்கவும்.

மாங்காய் பச்சடி

சுவையான இனிப்பு மாங்காய் பச்சடி தயார்.

அவரவர் விருப்பப்படி எல்லாவகையான சாதத்துடனும் தொட்டுக் கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

குறிப்பு :
வெல்லத்தின் அளவும் உப்பின் அளவும் மாங்காயின் புளிப்பிற்கு ஏற்றவாறு கூட்டி குறைத்துக் கொள்ளவும்.

வெல்லம்  சேர்த்த பிறகு மிகுந்த நேரம் கொதிக்க விட கூடாது.
வெல்லம் கரைந்து மாங்காயுடன் ஒன்று சேர்ந்தாற்போல வந்தால் போதுமானது.







மேலும் சில பச்சடி வகைகள் செய்து சுவைக்க

வாழைப்பூ வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைப்பூ தயிர் 
பச்சடி
பப்பாளி கேரட் சாலட்
பப்பாளி கேரட்
சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
நெல்லிக்காய் தயிர் பச்சடி
நெல்லிக்காய் தயிர் பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி